Friday, May 28, 2021

பஞ்சரத்தினம் வடிவியல் கட்டம் எனும் படிக ஒளியியலில் நடைபெறும் விளைவினை கண்டறிந்த இந்திய இயற்பியலாளர், சிவராமகிருட்டிணன் பஞ்சரத்தினம் நினைவு தினம் இன்று (மே 28, 1969).

பஞ்சரத்தினம் வடிவியல் கட்டம் எனும் படிக ஒளியியலில் நடைபெறும் விளைவினை கண்டறிந்த இந்திய இயற்பியலாளர், சிவராமகிருட்டிணன் பஞ்சரத்தினம் நினைவு தினம் இன்று (மே 28, 1969).

சிவராமகிருட்டிணன் பஞ்சரத்தினம் (Sivaramakrishnan Pancharatnam) பிப்ரவரி 9, 1934ல் கல்கத்தாவில் பிறந்தார். இவரது 25ஆவது அகவையில் இந்திய அறிவியல் கழகத்தில் ஆய்வாளராக சேர்ந்தார். 1961 முதல் 1964 வரை மைசூர் பல்கலைக்கழகம் இயற்பியல் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். இவரின் ஆய்வுகள் சி. வி. இராமனின் மேற்பார்வையில் பெரும்பாலும் நடைபெற்றன. இராமன் பஞ்சரத்தினத்தின் திறமையினை மிக நன்றாக உணர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு முறை ஜவகர்லால் நேரு இராமனைச் சந்திக்க இராமன் ஆய்வகத்திற்கு வந்த போது நேருவிடம் அந்த இளைஞன் இந்தியாவிற்கு நோபல் பரிசு பெற்றுத் தருவான் எனக் கூறினாராம். 


பஞ்சரத்தினம் வடிவியல் கட்டம் எனும் படிக ஒளியியலில் நடைபெறும் விளைவினை, 1955ம் ஆண்டு கண்டறிந்தார். ஆயினும் அவர்தம் ஆய்வுகள் 1984ம் ஆண்டு வரை உலகளாவிய அளவில் பெரிதும் அறியப்படாது இருந்தது. 1984ம் ஆண்டு மைக்கேல் பெரி என்பார்இதே போன்ற ஒரு வடிவியற்கட்டத்தை குவாண்ட இயங்கியலில் கண்டறிந்துராயல் சொசைட்டி எனப்படும் வேந்தியக் குழும பனுவலில் வெளியிட்டிருந்ததன் பின்இந்திய இயற்பியலாளர்களான சி.இராமசேஷன்இராசாராம் நித்தியானந்தாசைமன்முகுந்தாஜோசப் சாமுவேல்இராஜேந்திர பண்டாரி போன்றோர் ஒளியியலில் பஞ்சரத்தினம் அவர்கள் தந்த ஆய்வுகளை உலகம் அறியச் செய்ததோடு அவர்களும் வடிவியற்கட்டத்தில் பெரிய ஆய்வுகளைச் செய்தனர்அவை குவாண்டவியலிலும்அடிப்படை இயற்பியல் கட்டமைப்பிலும்கணிதத்திலும் முக்கியமானப் பொருளாக ஆய்வு செய்யப்படுகிறது. 


குவாண்டக்கணினியியலில் மிக முக்கியமான அம்சமாகதவறிலாக் கணித்தலிலும்செய்திப் பரிமாற்றத்திலும் ஊகிக்கப்படுகிறது. மேலும் அறியப்பட்ட ஆய்வாளர்களான அகரனோவ்ஜீவா ஆனந்தன்அருண் குமார் பதிவேத்ரால்ஸ்யோக்விஸ்ட் போன்றோர் இத்துறையில் மிகவும் முக்கியமானப் பங்களிப்பினைத் தந்துள்ளனர். பஞ்சரத்தினம் வடிவியற்கட்டம் எனப்படும் வெவ்வேறு தளவிளைவுற்ற ஒளிக்கதிர்கள் குறுக்கிட்டுவிளைவு ஏற்பட்டு வெளிவரும் ஒளிக்கதிரில்தளவிளைவு வடிவியலைச் சார்ந்து ஒரு கட்ட வேறுபாடு உள்ளதைக் கண்டறிந்தார். இவருடைய ஆய்வுகள் பெரும்பாலும்படிக ஒளியியற் துறையைச் சார்ந்தது.

 Image result for crystallography gifImage result for crystallography gif

பஞ்சரத்தினம் புகழ்பெற்ற இயற்பியலர்களானஇராமன் விளைவுக்காக நோபல் பரிசு பெற்ற சர். சி.வி. இராமன் மற்றும் சந்திரசேகரின் விண்மீன் ஆயுள்வரையறைக்கான நோபல் பரிசு பெற்ற சு. சந்திரசேகர்நீர்மபடிகவியல் மற்றும் படிக ஒளியியல் ஆய்வுகளுக்காக அறியப்பட்ட சி. சந்திரசேகர்சி. இராமசேஷன் அவர்களின் உறவினர் ஆவார். பஞ்சரத்தினம் தமது ஆய்வுப் பணிகளைத் தவிர்த்துஆசிரியப் பணியிலும் சமூக சேவையிலும் ஈடுபட்டிருந்தார். தமது சமூகப் பணிகளின் போதுஏற்பட்ட கிருமித் தொற்றால்அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இராமன் ஆய்வகத்தைத் தொடர்ந்துஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்துக்கு ஆய்வு மேற்கொள்ள சென்றிருந்த போதுஉடல்நலக் குறைவால் மே 28, 1969ல் தனது 35வது அகவையில் ஆக்சுபோர்டுஇங்கிலாந்தில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

Source By: Wikipedia.

தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டி,திருச்சி.

இது போன்ற தகவல் பெற

https://chat.whatsapp.com/GU0BJhBILJc3oySzsedd6J

இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி. 


இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...