Wednesday, May 5, 2021

இந்தியாவில் கொரோனா 3ஆம் அலையை தவிர்க்க முடியாது.. மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர் எச்சரிக்கை.

இந்தியாவில் கொரோனா 3ஆம் அலையை தவிர்க்க முடியாது.. மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர் எச்சரிக்கை.

இந்தியாவில் கொரோனா வைரசின் மூன்றாவது அலை ஏற்படுவதைத் தடுக்க முடியாது என்றும் எப்போது 3ஆம் அலை ஏற்படும் என்பதைக் கணிக்க முடியாது என்றும் அரசு ஆலோசகர் விஜயராகவன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் தற்போது கொரோனா 2ஆம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே செல்கிறது. கடந்த ஒரு வாரத்தில் உலகில் உறுதி செய்யப்பட்ட கொரோனா வழக்குகளில் கிட்டதட்ட பாதி, இந்தியாவில் மட்டும் கண்டறியப்பட்டது. அதேபோல கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3,780 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். இது ஒட்டுமொத்தமாக உலகில் பதவி செய்யப்பட்ட உயிரிழப்புகளில் 25% ஆகும். இந்தியாவில் வெறும் நான்கு மாதத்தில் ஒரு கோடி பேருக்கு கொரோன பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், உண்மையான கொரோனா பாதிப்பு என்பது இந்தியாவில் இதைவிட 5 முதல் 10 மடங்கு வரை இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். இந்த கொரோனா 2ஆம் அலை முதல் அலையை விட அதி தீவிரமாக உள்ளதாகவே பலரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.மூன்றாம் அலையை தவிர்க்க முடியாது.

Coronavirus symptoms in all mutations: மரணத்தை ஏற்படுத்தும் மூன்றாம்  நிலைக்கு உருமாறிய கொரோனா வைரஸ்... அதன் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? -  Tamil BoldSky

இந்நிலையில் இந்தியாவின் கொரோனா பாதிப்பு பற்றி அரசின் அறிவியல் ஆலோசகர் டாக்டர் விஜயராகவன் கூறுகையில், இந்த வைரஸ் தற்போது நாட்டில் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளது. எனவே, கொரோனாவின் மூன்றாம் அலையை நம்மால் தவிர்க்க முடியாது, ஆனால் இந்த 3ஆம் அலை எப்போது ஏற்படும் என்பது தான் தெளிவாகத் தெரியவில்லை. மூன்றாம் அலை மட்டுமின்றி வரும் காலங்களில் ஏற்படும் அனைத்து புதிய அலைகளுக்கு நாம் தயாராக வேண்டும். தற்போது தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் தீவிரமாக நாம் மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Pin on Respiratory Care

கொரோனா 2ஆம் அலைநாடு இரண்டாம் அலையையே சமாளிக்க முடியாமல் திணறி வரும் நிலையில், டாக்டர் விஜயராகவனின் எச்சரிக்கை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளிலும் ஆக்சிஜன் இல்லாமல் நோயாளிகள் உயிரிழக்கும் அவல நிகழ்வுகளும் ஏற்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் பெரும்பாலான மருத்துவமனைகளில் சில மணி நேரங்களுக்குத் தேவையான ஆக்சிஜன் மட்டுமே உள்ளதாக மருத்துவமனை நிர்வாகங்கள் தொடர்ந்து களை அனுப்பி வருகின்றன.பாஜக மீது விமர்சனம்கொரோனா 2ஆம் அலையைக் கையாண்ட விதம் தொடர்பாக மோடி அரசைப் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 




No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...