Thursday, May 13, 2021

கொரோனா நிவாரண நிதியாக ரூ. 50 ஆயிரம் வழங்கிய உதவி தலைமை ஆசிரியர் பைரவி (நேரு நினைவு கல்லூரி முன்னாள் மாணவி).

கொரோனா நிவாரண நிதியாக ரூ. 50 ஆயிரம் வழங்கிய உதவி தலைமை ஆசிரியர் பைரவி (நேரு நினைவு கல்லூரி முன்னாள் மாணவி).

பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி கணித பட்டதாரி ஆசிரியர் பைரவி. இவர் பள்ளி உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.கொரோனா பேரிடர் காலத்தில் கொரோனா தடுப்பு முன் களப் பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு தேவையான முகக்கவசம், தலைக்கவசம் மற்றும் உணவுப் பொருட்களை வழங்கினார்.

கொராண தடுப்புப் பணியில் தன்னாரவலாராக செயல்பட்டு சமூக இடைவெளி, சானிடைசர் தெளித்தல் உள்ளிட்ட பணிகள் ஈடுபட்டுள்ளார். பொது முடக்கம் காரணமாக பள்ளிகள் முடபட்டு ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டி  10 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் ரூ. ஒரு லட்சம் செலவில் ஸ்மார்ட் போன் வழங்கி இன்று வரை ரீஸார்ஜ செய்து வருகிறார். கடந்த  ஏப். 29ம்தேதி கொரோனா பேரிடர் நிவாரண நிதியாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம்  ரூபாய் 50,000/- க்கு வரவோலை வழங்கினார். இந்நிலையில் மாண்புமிகு தமிழக முதல்வர் வேண்டுகோளை ஏற்று  கொரோனா  நிவாரண நிதிக்கு  ₹50,000 க்கான வங்கி வரைவோலையை தபால் மூலம் இன்று அனுப்பியுள்ளார்.



இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

No comments:

Post a Comment

த. பாதர் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவியல் கண்காட்சி.

த. பாதர் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவியல் கண்காட்சி. இன்று உப்பிலியபுரம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி த.பாதர்பே...