Friday, May 7, 2021

இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றிய, இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்ற முதல் இந்தியர் இரவீந்திரநாத் தாகூர் பிறந்த தினம் இன்று (மே 7, 1861).

இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றிய, இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்ற முதல் இந்தியர் இரவீந்திரநாத் தாகூர் பிறந்த தினம் இன்று (மே 7, 1861).

இரவீந்தரநாத் தாகூர் (Rabindranath Tagore) மே 7, 1861ல் தேவேந்திரநாத் தாகூர்சாரதா தேவி தம்பதியினருக்கு கொல்கத்தாவிலுள்ள ஜோராசாங்கோ மாளிகையில் பிறந்தார். இவரின் பெற்றோருக்கு பிறந்து உயிரோடு இருந்த பதின்மூன்று குழந்தைகளில் இவர் இளையவர் ஆவார். இவரின் தாய் இவர் குழந்தையாக இருந்தபோதே இறந்து விட்டார். இவரின் தந்தையும் வியாபார நோக்கில் அடிக்கடி வெளிநாடு சென்றதால் பெரும்பானமையான நேரங்களில் பணியாளர்களாலேயே வளர்க்கப்பட்டார். வங்காள மறுமலர்ச்சியில் இவரின் குடும்பம் பெரும் பங்காற்றியது. இவரின் குடும்பம் இலக்கிய நாளிதழ் வெளியீட்டு நிறுவனம் மற்றும் திரையரங்கம் போன்றவற்றை நடத்தி வந்தனர். அங்கு தொடர்ச்சியாக வங்காளம் மற்றும் நவீனத்துவ மரபார்ந்த பாடல்கள் பாடப்பட்டன. தாகூரின் தந்தை தொழில்முறை துருபாத் இசைக் கலைஞர்களை தங்களது இல்லத்திற்கு அழைத்து வந்து தங்களது குழந்தைகளுக்கு இந்திய இசைகளை கற்றுத்தந்தார். 

தாகூர் பள்ளியறைகளில் இருப்பதை விட பிரபுமனைகள் அல்லது தங்கள் குடும்பத்தினர் அதிகம் செல்லக்கூடிய போல்பூர் மற்றும் பானிஹாட்டிக்குச் செல்வதையே விரும்பினார். இவரின் சகோதரர் ஹேமேந்திரநாத் இவருக்கு கங்கை ஆற்றில் நீச்சல் கற்றுத் தருதல் அல்லது மலையேற்றம்சீருடற்பயிற்சிகள்ஜூடோகுத்துச்சண்டை ஆகியவற்றை கற்றுக்கொடுத்தார். தாகூர்வரைதல்உடற்கூறியல்புவியியல்வரலாறுஇலக்கியம்கணிதம்சமஸ்கிருதம்ஆங்கிலம் போன்றவற்றையும் கற்றார். முறையான கல்வியில் இவருக்கு விருப்பம் இல்லை. இவர் பிரசிடென்சி கல்லூரியில் ஒருநாள் மட்டுமே கல்வி பயின்றார். உண்மையான கற்றல் என்பது சரியான விளக்கங்களை அளிப்பது ஆகாது, அது அறிவார்வத்தை ஏற்படுத்துவது என எண்ணினார்.

 

இவர் மனம் வங்காள மொழியிலும்சமஸ்கிருத மொழியிலும் இலயித்து நின்றது. இவரது பதினோராவது வயதில் இவருக்கு பூணூல் சடங்கு செய்யப்பட்டது. பிப்ரவரி 14, 1873ல் இவரது தகப்பனாருடன் கொல்கத்தாவை விட்டுப் புறப்பட்டுப் பல மாதங்கள் இந்தியாவின் இதர மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இவரது தந்தையாரின் சாந்திநிகேதன் தோட்டத்துக்கும் சென்றனர். பின்னர் இமயமலைப் பகுதியான டால்கூசிக்குச் செல்வதற்கு முன்னர் அம்ரித்சாரிலும் இவர்கள் தங்கினர். அங்கே அவர் பலருடைய வரலாறுகளை கற்றதுடன்வானியல்அறிவியல்சமசுகிருதம் ஆகிய பாடங்களைப் படித்தார். காளிதாசரின் கவிதைகளையும் கற்றார். கவிதைகளில் ரவீந்திரநாத்தாகூர் அவர்களின் முதல் கவிதைப் புத்தகமான ‘கபி கஹினி’ (ஒரு கவிஞர் கதை) 1878ல் வெளியிடப்பட்டது. அதே ஆண்டில்தாகூர் அவர்கள் சட்டம் பயில்வதற்காக அவரது மூத்த சகோதரரான சத்யந்திரநாத்துடன் கடல்வழியாக இங்கிலாந்து சென்றார். ஆனால்ஷேக்ஸ்ப்பியர் மற்றும் பிறரது ஆக்கங்களை ஆராய்வதிலேயே ஆர்வம் காட்டியதால்பட்டம் பெறாமலேயே 1880ல் வங்கத்திற்குத் திரும்பிவிட்டார். பின்னர்ஒரு கவிஞராகவும்எழுத்தாளராகவும் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 

ரவீந்திரநாத் தாகூர் டிசம்பர் 9, 1883ல் மிருனாலி தேவி ராய்சௌத்ரி என்ற 10 வயதுப் பெண்ணை மணந்தார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள்என ஐந்து குழந்தைகள் பிறந்தனர். ரவீந்திரநாத் தாகூர் அவர்கள்1884ல், ‘கோரி-ஓ-கமல்’ (ஷார்ப் மற்றும் பிளாட்) என்ற கவிதைத் தொகுப்பை எழுதினார். மேலும்அவர் ‘ராஜா-ஓ-ராணி’  மற்றும் ‘விசர்ஜன்’ (தியாகம்) என்ற நாடகங்களையும் எழுதினார். 1890 ஆம் ஆண்டில்ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் தனது குடும்ப எஸ்டேட்டைப் பார்த்துக்கொள்ள சிலைதஹாவிற்கு சென்றார். 1893 முதல் 1900 வரைதாகூர் அவர்கள் ஏழு கவிதைத் தொகுதிகளான ‘சொனார் தொரி’ (கோல்டன் படகு) மற்றும் ‘கனிகா’ போன்றவற்றை எழுதியுள்ளார். 1901ல்ரவீந்திரநாத் தாகூர் அவர்கள்பங்கதர்ஷன் என்ற இதழின் ஆசிரியரானார். பழைய இந்திய ஆசிரம முறை அடிப்படையில்அவர் சாந்திநிகேதனில் ‘போல்பூர் பிராமசார்யாஸ்ரமம்’ என்றொரு பள்ளியைத் துவங்கினார். 1902 ஆம் ஆண்டில்அவரது மனைவி மிருணாளினி இறந்தார். பின்னர்தாகூர் அவர்கள் இயற்றிய கவிதைகள் தொகுப்பான ‘ஸ்மரன்’ (மெமோரியம் அங்குலம்)என்ற படைப்பை அவரது மனைவிக்காக அர்ப்பணித்தார். 

1905ல் கர்சன் பிரபு வங்கத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்க முடிவு செய்தார். இந்த முடிவை எதிர்த்து ரவீந்திரநாத் தாகூர் அவர்கள்கடுமையாகப் போராடினார். தாகூர் அவர்கள்பல தேசிய பாடல்களை எழுதிபல்வேறு எதிர்ப்பு கூட்டங்களிலும் கலந்து கொண்டார். அவர் பிரிக்கப்படாத வங்காள அடிப்படை ஒற்றுமையை குறிக்கும் விதமாக ‘ராக்கிபந்தன் விழாவை’ வங்கத்தில் அறிமுகப்படுத்தினார். 1909ல் ரவீந்திரநாத் தாகூர் ‘கீதாஞ்சலியை’ எழுதத் தொடங்கினார். 1912 ஆம் ஆண்டில்இரண்டாவது முறையாக ஐரோப்பா சென்றார். இந்த லண்டன் பயணத்தின் போதுஅவர் கீதாஞ்சலியில் இருந்து சில கவிதைகள் மற்றும் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார். இவர் லண்டனில் மதிக்கத்தக்க ஆங்கிலேய ஓவியரான வில்லியம் என்பவரை சந்தித்தார். அவரது கவிதைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்ட ரோத்தென்ஸ்டீன்அவரது கவிதைகளைப் பிரதிகள் எடுத்து,  ஈட்ஸ் மற்றும் பிற ஆங்கிலக் கவிஞர்களுக்கும் கொடுத்தார். ஈட்ஸ் அவர்களும் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.

 

செப்டம்பர் 1912ல்லண்டனில் உள்ள இந்திய சமூகத்தின் ஒரு வரையறுக்கப்பட்ட பதிப்பில் கீதாஞ்சலி வெளியிடப்பட்ட போதுதாகூர் அதற்கு முன்னுரை எழுதினார். 1913 ஆம் ஆண்டில் ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலிக்குஇலக்கியத்துக்கான ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது. இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார். மேலும் ஐரோப்பியர் அல்லாத ஒருவர் இந்த விருதைப் பெறுவதும் இதுவே முதல் முறையாகும். 1915 ஆம் ஆண்டில்தாகூர் அவர்களுக்குஆங்கிலேய ஜார்ஜ் மன்னர், ‘சர்’ என்னும் வீரப்பட்டம் வழங்கினார். 1919ல் நடந்த ஜாலியன்வாலா பாக் படுகொலையைத் தொடர்ந்துதாகூர் அவர்கள் ஆங்கிலேய ஜார்ஜ் மன்னர் அவர்கள் வழங்கிய ‘சர்’ என்னும் வீரப்பட்டத்தைத் துறந்தார். அவர் காந்திஜியின் ஒரு ஆதரவாளராக இருந்தாலும்அரசியலில் இருந்து விலகியே இருந்தார். அவர் கொள்கை என்ற நோக்கில் இருந்து தேசியவாதம் மற்றும் இராணுவவாதத்தை எதிர்த்துஅதற்கு பதிலாக ஆன்மீக மதிப்புகள் மற்றும் பண்பாடுபன்முகத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மைகள் கொண்ட ஒரு புதிய உலக கலாச்சாரத்தை உருவாக்க எண்ணினார். அவரது கருத்துக்களுக்கு ஒரு கருத்தியல் ஆதரவு பெறாதாதன் காரணமாகஅவருடைய சிந்தனைகளில் இருந்து ஓய்வு பெற்று ஒதுங்கியே இருந்தார்.

 


1916 முதல் 1934 வரைஅவர் பெருமளவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 1921ல்ரவீந்திரநாத் தாகூர் அவர்கள்விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவினார். அவர் தனது புத்தகங்களுக்காகக் கிடைத்த நோபல் பரிசின் மூலமாகக் கிடைத்த உரிமைத்தொகை அனைத்தையும் இந்த பல்கலைக்கழகத்திற்காக கொடுத்தார். தாகூர் அவர்கள்ஒரு படைப்பாக்க மேதையாக மட்டுமல்லாமல்மேற்கத்திய கலாச்சாரத்தையும்குறிப்பாக மேற்கத்திய கவிதைகள் மற்றும் அறிவியலில் மிகவும் அறிவுடையவராகவும் திகழ்ந்தார். தற்கால நவீன நியூட்டனின் இயற்பியலில் தாகூர் அவர்களுக்கு ஆழ்ந்த சிந்தனை இருந்ததால்புதிதாக வளர்ந்து வரும்குவாண்டம் மெக்கானிக்ஸின் கொள்கைகள் மற்றும் குழப்பங்களின் பேரில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுடன் 1930ல் நடந்த ஒரு விவாதத்தில்அவரால் தனது கருத்துகளை முன் வைக்க முடிந்தது. அவரது சமகாலத்தவர்களான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஹெச்.ஜி.வெல்ஸ் போன்றோருடன் நடந்த கூட்டங்கள் மற்றும் நாடா பதிவு உரையாடல்கள் மூலமாக அவரது திறமைகளை சங்கிரகிக்க முடிந்தது. 1940ல்சாந்தி நிகேதனிலுள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு சிறப்பு விழா ஏற்பாடு செய்துரவீந்திரநாத் தாகூர் அவர்களுக்கு ‘இலக்கிய முனைவர் பட்டம்’ வழங்கப்பட்டது. 

19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இவர் வங்காள இலக்கியம் மற்றும் இசை வடிவத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். மேலும் இந்தியக் கலைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். தாகூரின் படைப்புகள் ஆன்மீகததை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. இருந்த போதிலும் இவரின் படைப்புகளில் இருந்த நேர்த்தியான உரைநடையும்கவிதையின் மாயத் தன்மையும் வங்காளத்திற்கு மட்டுமல்லாது அனைத்துத் தரப்பிற்கும் பொருந்தக் கூடியதாக இருந்தது. சில நேரங்களில் இவர் வங்காளக் கவி எனவும் அறியப்படுகிறார். இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றியவரும் இவரே. இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவரது நூல்களில் சிலவற்றை த. நா. குமாரசாமி தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

 JANA GANA MANA Indian National Anthem on Make a GIF

HAPPY_REPUBLIC_DAY_JAI_HIND | Indian army wallpapers, Army day, Army  wallpaper

இரவீந்திரநாத் தாகூர் அவர்கள் ஒரு கவிஞர்பாடகர்கதை மற்றும் நாவல் படைப்பாளர்ஓவியர்மாபெரும் எழுத்தாளர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இசைப் பாடல்கள்அவற்றுக்கு ஏற்ற மெட்டுகள்ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள்சுமார் இருபது நாடகங்கள்எட்டு நாவல்கள்எட்டுக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்பு என பலவற்றை எழுதியவர். காந்திஜியை மகாத்மா என்று முதன் முதலில் அழைத்தவரும் காந்திஜியால் குருதேவ் என அழைக்கப்பட்டவரும் இவரே. இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்ற இரவீந்திரநாத் தாகூர் ஆகஸ்ட் 7, 1941ல் தனது 80வது அகவையில்கல்கத்தாவிலுள்ள தனது மூதாதையர் வீட்டில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

Source By: Wikipedia

தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.







இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...