✍️கவிதை✍️மனிதனே மனிதனை அழிக்கும் ஆயுதமாய்... யுகத்தொடக்கம்.✍️இ.கிருபா BBA-NMC.
யுகத்தொடக்கம்
கிழக்கின்
மூளையில் துப்பாக்கி
சத்தங்களோடு
துயிழெழும்
சூரியன்....
இரவை ரசிப்பவர்கள்
மனிதரில்
நிறம் பார்க்கின்றனர்..
வெள்ளை முழங்கால்களினால்
கருப்பு குரல்வளைகள்
நெரிக்கப்பட்டன...
பட்டினியானவனுக்காக
கண்ணீர் வடித்த உலகம்..
ஒருவன் உண்டு கை
கழுவியதற்காகவா
வாய்
மூடிக்கொண்டது...
கட்டுப்பாடு இழந்த
விண்கலங்கள்..
சமுத்திரத்தில்
குப்பைகளாய்...
ஏவுகனைகளாள்
புண்ணாகிப்போன பூமியின் தோள்...
ஆழ்கடலில்
வழியறியாமல்
கவிழ்ந்துபோன
அகதி படகுகள்...
கழிவை விடுத்து
கழிவே சுவாசமாய்...
ஜெருசலேத்தில்
சிலுவைக்குமேலே
புகை மண்டலமாய்...
உதித்த பிறை நிலா..
கங்கையில் முகம் பார்க்க முனைகையில்
பிணங்கள் மிதந்தன....
மனிதனே மனிதனை அழிக்கும் ஆயுதமாய்...
பிறந்த சிசு
வருந்துகிறது சிரிக்க
தெரியா உலகில்
பிறந்து விட்டோமென..
பாவம் அந்த பச்சிளம் குழந்தை அறியாது...
கொடிய நோயொன்றால்
நாமெல்லாம் முகம்
மூடிக்கொண்டோமென....
அழிவை கண்டுபிடிக்கும் விஞ்ஞானம் ...
காக்க முடியாமல் தலைகுனிகிறது...
கடப்போம் தைரியமாக மனித மிருகங்களிடம் கவனமாக.....
✍️கவிதை✍️:இ.கிருபா BBA, நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
From Sri Lanka.
இது போன்ற தகவல் பெற
நன்றி.





No comments:
Post a Comment