✍🍒🍒இயற்கை வாழ்வியல் முறை🍒🍒தோல் அரிப்பு நீங்க பாட்டி வைத்தியம்.
🍒🍒🍒🍒🍒
தோல் அரிப்பு ஏற்பட்டவுடன், அதை வெறும் அரிப்புதானே என்று எடுத்துக்கொள்ளாமல், அதன் காரணத்தை அறிந்துகொள்ள வேண்டும். நாம் உண்ணும் உணவில் உள்ள கத்தரிக்காய், தக்காளி, புளி, கடுகு, காலிபிளவர், கருணைக்கிழங்கு, காளான் ஆகியவையும், மாங்காய், போன்ற பழங்களும் மீன், கருவாடு, வறுத்த கோழி, முட்டை போன்றவையும் தோல் நோய் உள்ளவர்களுக்கு அரிப்பை அதிகப்படுத்தும்.
🍒🍒🍒🍒🍒
மேலும் சில காரணங்கள் உடலின் சத்து குறைபாடு, கிருமிகள், சிறுநீரகத்தில் கழிவுகள் சரியாக வெளியேறாமல் உள்ளே படியும்போது, நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இவற்றில் எதுவாக இருந்தாலும் அரிப்பு உண்டாகும். சரி இதற்கு என்ன செய்யலாம்?
இதற்கு ரத்தப் பரிசோதனை செய்து பார்த்தால் தெரிந்துவிடும். அதற்கேற்ப மேற்கூறிய உணவுகளைத் தவிர்ப்பதுடன் அரிப்பு குணமாகும் வரை அதிகளவு நீர் அருந்துவது மிகவும் அவசியம்.
🍒🍒🍒🍒🍒
சரி இனி பாட்டி வைத்தியம் குறிப்புகள் சிலவற்றை பார்ப்போம்.
🍒🍒🍒குப்பைமேனி நம் இருப்பிடத்திற்கு அருகாமையில் சாதாரணமாக வளரும் அற்புத மூலிகை குப்பைமேனி. இந்த செடியின் இலைகள், சிறிது மஞ்சள், சிறிது கல்லுப்பு ஆகிய மூன்றையும் ஒன்றாக சேர்த்து அரைத்து அரிப்பு ஏற்பட்ட இடங்களில் தடவி அது காய்ந்த பின் குளித்து வர அரிப்பு குணமாகும்.
🍒🍒🍒🍒🍒
வேப்பிலை வேப்பிலையை ஒரு கைப்பிடியளவு எடுத்து அதனுடன் 3 வெங்காயம் சேர்த்து அரைத்து அரிப்புள்ள இடங்களில் தேய்த்து சிறிது நேரம் கழித்து இதமான வெந்நீரில் குளித்து வந்தால் அரிப்பு நீங்கும்.
🍒🍒🍒🍒🍒
நன்னாரி 20 கிராம் நன்னாரி வேரை அரை லிட்டர் தண்ணீரில் நன்றாக காய்ச்சி, அது 200 மில்லி அளவாக சுண்டியதும் காலையில் 100 மில்லி மாலையில் 100 மில்லி அளவு குடித்து வர அரிப்பு உள்ளிட்ட அனைத்து விதமான தோல் வியாதிகளும் நீங்கும்.
🍒🍒🍒🍒🍒
அருகம்புல் அருகம் புல் ஒரு அற்புதமான மூலிகையாகும். இந்த புற்களை அரைத்து சாறாக குடித்தும், அதில் சில துளிகளை அரிப்புள்ள இடங்களில் பூசி வரவும் அரிப்பு குணமாகும்.
🍒🍒🍒🍒🍒
கற்றாழை கற்றாழை பல மருத்துவ குணங்களை கொண்ட ஒரு தாவரம். இதன் வெளிப்புற தோலை நீக்கி உள்ளே கொழகொழவென இருக்கும் பகுதியை எடுத்து தோலில் பாதிப்பேற்பட்ட இடங்களில் பூச அரிப்பிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
🍒🍒🍒🍒🍒
சோப்புத் தேய்த்துக் குளிக்காமல், `நலுங்கு மாவு’ தேய்த்துக் குளிப்பது நல்லது.
🍒🍒🍒🍒🍒
வேப்பங்கொழுந்து - 1 டீஸ்பூன், ஓமம் - 1/4 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், கருஞ்சீரகம் - 1/2 டீஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். எல்லாவற்றையும் சேர்த்து நீர்விட்டு அரைத்து, சுண்டைக்காய் அளவுக்கு உருட்டி, மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, வாரத்துக்கு ஒருநாள் என மூன்று முறை கொடுத்தால், வயிற்றுப் பூச்சி நீங்கி, அரிப்பு குறையும்.
🍒🍒🍒🍒🍒
அறுகம்புல்
கைப்பிடி அறுகம்புல்லை ஒன்றிரண்டாக வெட்டி, 10 மிளகைப் பொடித்து, நான்கு வெற்றிலைகளைக் காம்பு நீக்கிக் கிழித்து வைத்துக்கொள்ளவும். இந்த மூன்றையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு, இரண்டு குவளை நீர்விட்டுக் கொதிக்கவைக்கவும். அரை டம்ளராக வற்றியதும், வடிகட்டி அந்தக் கஷாயத்தை இளஞ்சூட்டில் காலை, மாலை என 15 தினங்கள் பருகினால், `அர்ட்டிகேரியா’ எனும் உடல் முழுக்க வரும் அரிப்பு நோயைக் கட்டுப்படுத்தலாம்.
🍒🍒🍒🍒🍒
இலுப்பை பிண்ணாக்கு, வேப்பம் பட்டை, பூவரசம் பட்டை ஆகியவற்றை சமஅளவு எடுத்து சுட்டு கரியாக்கி அதனுடன் கார்போக அரிசி, மஞ்சள் கலந்து அரைத்து தேங்காய் எண்ணெயில் குழைத்து பூசி வந்தால் கரப்பான், சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் குறையும்.
உணவு பத்தியம் மிக அவசியம்.
கரப்பான் ஒவ்வாமை இருந்தால், சோளம், கம்பு, தினை ஆக்கியவற்றை நோய் நீங்கும் வரை தவிர்க்கலாம். சோளம், கம்பு, வரகு தானியங்களை கரப்பான் நோய் உடையவர்களும் அரிப்பைத் தரும் பிற தோல் நோய்க்காரர்களும் தவிர்ப்பது நலம் என்கிறன சித்த மருத்துவ நூல்கள்.
🍒🍒🍒🍒🍒
குளூட்டன் சத்து உள்ள கோதுமையையும், கோதுமை சேர்த்த பேக்கரி உணவுகளையும் தோல் நோய் உள்ளவர்கள் குறைத்துக்கொள்ள வேண்டும்
🍒🍒🍒🍒🍒
பின்குறிப்பு மருத்துவர் ஆலோசனை பெற்று பிறகு பின்பற்றவும்.
🍒🍒🍒🍒🍒
மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.
🌷🌷🌷🌷🌷
உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்
🦚🦚🦚🦚
உடல் நல குறைபாடுகளையும் சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த ஆலோசனைகள் வழங்கபடும்.
🦚🦚🦚🦚🦚
நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு மாவட்டம், பவானி.
செல் நம்பர் 7598258480, 6383487768.
((வாட்ஸ் அப்)) 7598258480
குரு வாழ்க குருவே துணை
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
N.P. RAMESH: 9489666102.
இது போன்ற தகவல் பெற
No comments:
Post a Comment