Thursday, May 27, 2021

✍🏻🥃🥃இயற்கை வாழ்வியல்முறை🥃🥃மூலிகை நீர் பயன்கள்.

✍🏻🥃🥃இயற்கை வாழ்வியல்முறை🥃🥃மூலிகை நீர் பயன்கள்.

🥃🥃🥃🥃🥃

 மூலிகை நீர்

சித்தர்களின் வாக்குப்படி மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் நீர்கள் நோய் தடுப்பில் சிறப்பிடம் பெறுகின்றன. உணவுக்கு உணவாகவும் மருந்துக்கு மருந்தாகவும் பயன்படுகின்றன. இச்சுவை நீர்களை காலை, மாலை வெறும் வயிற்றில் உட்கொள்வதால் விரைவில் பலன் கிடைக்கிறது. சாதாரண சுவைநீர்கள், மூலிகை சேர்வதால் நோய் தடுக்கும் சுகநீராய் மாறுகிறது.

🥃🥃🥃🥃🥃

ஆவாரம்பூ நீர்

“ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்ட துண்டோ” என்ற பழமொழிக்கு ஏற்ப நீரிழிவுக்கு ஆவாரைப்பூவின் அற்புதத்தை அறியலாம். மஞ்சள் நிறமுள்ள இப்பூ தங்கச்சத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆவாரம்பூ சுவை நீர் நீரிழிவு, பெரும்பாடு, குடற்புண், நீர்க்கடுப்பு, வெள்ளைப்போக்கு ஆகியன வராமல் தடுக்கிறது. நூறு மில்லி நீரில் பத்து ஆவாரம் பூக்களை போட்டு காய்ச்சி, வடிகட்டி காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து தேவையெனில் காபித்தூள் அல்லது டீத்தூள் கஷாயத்தில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்கவும்.

சருமத்திற்கு பொலிவை தரும் ஆவாரம் பூ அழகு குறிப்புகள்...!!

🥃🥃🥃🥃🥃

கரிசாலை நீர்

சிறுநீரக செயலிழப்பு, அதிக இரத்தக் கொதிப்பு, புற்றுநோய், காச நோய், வெண்புள்ளி, எலும்பு தேய்மானம் ஆகியன வராமல் கரிசாலை சுவைநீர் தடுக்கிறது. மேற்சொன்ன ஆவாரம்பூ சுவை நீர் தயாரிப்பதுபோல் ஆவாரம்பூத் தூளுக்குப் பதிலாக கரிசாலைதூளை இரண்டு கிராம் போட்டுக் கொள்ளவும். தினசரி காலையில் மட்டும் கரிசாலைச்சுவை நீர் அருந்தி வரவும்.

கரிசலாங்கண்ணியில் இப்படி ஒரு அபார சக்தியா.? - Seithipunal

🥃🥃🥃🥃🥃

செம்பருத்தி நீர்

செம்பருத்தி பூ நீர் இதய சுவர் ஓட்டை, இதய வால்வு, தேய் மானம், வழுக்கை, இரத்த சோகை ஆகியன வராமல் தடுக்கிறது. இது மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது. குடல் இறக்கம், கர்ப்பப்பை இறக்கம் ஏற்படாதும் தடுக்கிறது.

காய்ச்சிய பாலை அடுப்பிலிருந்து இறக்கி வைத்து அதில் அடுக்கு செம்பருத்திப்பூ இதழ்கள் ஐந்து போட்டுப் பத்து நிமிடம் பாலை மூடி வைத்து பின் வடிகட்டி விட வும். பால் சிவப் பாகி இருக்கும். இனிப்பு சேர்த்து வடிகட்டி காலையிலும்மாலையிலும் குடிக்கவும். சளி தொந்தரவு உள்ளவர்கள் பால் காய்ச்சும் போது தோல் நீக்கிய சிறு துண்டு இஞ்சியை நசுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

செம்பருத்தி நீர் - Kalanidhi

🥃🥃🥃🥃🥃

நன்னாரி நீர்

“தோன்றும் மழலைகள் உத்தாமணி வேரால், தோல் நோய்கள் மடிவது நன்னாரி வேரால்” என்பதன் மூலம் நன்னாரியின் நற்பண்பை நவிலலாம். நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து உபயோகிக்கவும்.

🥃🥃🥃🥃🥃

துளசி நீர்

குடல் காய்ச்சல், மஞ்சள் காமாலை, மலேரியா, காலரா நோய்கள் வராமல் துளசி சுவை நீர் தடுக்கும். மேலும் குடல்வால் அழற்சி ஏற்படாது. காய்ச் சிய நூறு மில்லி சூடான பாலில் இரண்டு கிராம் துளசி இலை பொடியைக் கலந்து, மூடி வைத்து பத்து நிமிடங்கள் சென்று இனிப்பு சேர்த்து,தேவை யெனில் காபி அல்லது டீ கஷாயம் சேர்த்து வடிகட்டி தினசரி காலையில் மட்டும் குடிக்கவும். அடிக்கடி பல ஊர்கள் தண்ணீர் குடிப்போரும், தொற்று நோய்கள் பரவும் காலங்களிலும் இந்த துளசி சுவை நீரை பயன்படுத்தி பலன் பெறலாம்.

அனைத்து விதமான நோய்களையும் குணமாக்கும் துளசி நீர் || Tulsi water cure all  sorts of diseases

🥃🥃🥃🥃🥃🥃

வல்லாரை நீர்

யானைக்கால், வலிப்பு, மலடு, பக்கவாதம், மூலம், மூட்டுவலி, இரத்தக்குழாய் தடிப்பு போன்ற நோய்கள் வராமல் வல்லாரை சுவை நீர் தடுக்கும். “காய சித்திக்கு புளியாரை„ கபால கோளாறுக்கு வல்லாரை” என்பார்கள். வல்லாரை இலைப்பொடி இரண்டு கிராம் எடுத்து மேற்கண்டுள்ள துளசி சுவை நீர் தயாரிப்பதுபோல் வல்லாரை சுவை நீர் தயாரித்துக் கொள்ளவும். காலை, மாலை இருவேளையும் குடிக்கவும். எல்லோருக்கும் என்றும் ஏற்றது வல்லாரை சுவை நீராகும். இச்சுவை நீர்கள் குறிப்பிட்டுள்ள நோய்கள் வராமல் தடுக்கவும், குணப்படுத்தவும் கூடியது. எனவே நோயுள்ளோரும், பயன்படுத்தி பயன் பெறலாம்.

🥃🥃🥃🥃🥃

இலவங்கப்பட்டை நீர்

இலவங்கப்பட்டை அல்லது டால்சினி பொதுவாக நம் இந்திய சமையலறையில் காணப்படுகிறது, ஆனால் அதன் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி நாம் அரிதாகவே பேசுகிறோம். அதன் பெயருக்கு உண்மையாக, இது இனிப்பு சுவை மற்றும் மிக முக்கியமான நறுமணத்தைக் கொண்டுள்ளது. இது இலவங்கப்பட்டை எனப்படும் மரத்தின் உள் பட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் பிரபலமான மசாலா ஆகும்.

இது ஆக்ஸிஜனேற்றத்தால் ஏற்றப்பட்டு உடலை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலை தொற்று மற்றும் திசு சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகின்றன. உணவுக்குப் பிறகு செரிமான மண்டலத்தில் உள்ள கார்போஹைட்ரேட்டுகளின் முறிவைக் குறைப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க இலவங்கப்பட்டை நீர் காரணமாகும் இலவங்கப்பட்டையில் உள்ள ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் பல் சிதைவு மற்றும் துர்நாற்றத்தைத் தடுக்கலாம். இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க இலவங்கப்பட்டை நீர் காரணமாகும்

🥃🥃🥃🥃🥃

கொத்தமல்லி விதை நீர்

கொத்தமல்லி அல்லது தானியா பல்வேறு உணவுகளில் சுவையைச் சேர்க்க பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. கொத்தமல்லி விதைகளில் ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் பண்புகள் அதிகம் உள்ள தாவரங்களிலிருந்து பெறப்பட்ட ரசாயன கலவைகள் உள்ளன.

மல்லி விதைகளை ஊற வைத்த நீரைக் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்! |  Health Benefits of Coriander Seeds Soaked in Water - Tamil BoldSky

🥃🥃🥃🥃🥃 

கொத்தமல்லி விதை நீர் அதன் குளிரூட்டும் பண்புகளால் நீர் தக்கவைப்பு மற்றும் அமிலத்தன்மையை குணப்படுத்த உதவுகிறது. கொத்தமல்லி விதை நீரைக் குடிப்பதால் சிட்ரோனெலோல் இருப்பதால் வாய் புண்களைக் குணப்படுத்த உதவுகிறது. விதைகளை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து, அதை வடிகட்டி, அதை குடிக்கவும். கொத்தமல்லி விதை நீர் தண்ணீரைத் தக்கவைக்க உதவுகிறது.

🥃🥃🥃🥃🥃

சீரகக் குடிநீர் 

சிறிது சீரகத்தை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரைக் குடிக்கலாம் அல்லது சீரகத்தை முதல் நாள் இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து, காலையில் அந்த ஊறல் குடிநீரை அருந்தலாம். சீரகத்திலுள்ள ‘Thymol’ எனும் வேதிப்பொருள் செரிமானச் சுரப்பிகளைத் தூண்டி நல்ல பசியை உண்டாக்குகிறது. உடலில் உள்ள வாயுக்களைக் கட்டுப்படுத்துகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் செரிமானக் கோளாறுகளுக்குச் சீரக நீர், பக்க விளைவில்லா மருந்து. அசைவ உணவு சாப்பிடும்போது சீரக நீரைப் பயன்படுத்தினால் மந்தம், உப்புசம் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. வயிறு சார்ந்த நோய்களைப் போக்குவதுடன் கூடுதல் பலனாக இரும்புச் சத்தையும் சீரகம் அளிக்கிறது.

🥃🥃🥃🥃🥃

நெருஞ்சில் குடிநீர்

நெருஞ்சில் குடிநீராகக் காய்ச்சி வெயில் காலத்தில் குடிக்க உடல் வெப்பத்தைக் குறைத்துக் குளிர்ச்சியை உண்டாக்கும். கல்லடைப்பு நோயால் உண்டாகும் குறி குணங்களைக் குறைக்கவும், உடலில் உண்டாகும் வீக்கங்களைக் குறைக்க இன்றும் கிராம மக்கள் பயன்படுத்தும் மருந்து நெருஞ்சில் குடிநீர்தான். உடல் மிகுந்த குளிர்ச்சி அடையும். வெண்புள்ளி நோய்க்கு, மருந்தாகப் பயன்படுத்துகின்றனர் நெருஞ்சி வித்திற்கு மூத்திரக்கட்டு, சதையடைப்புமூத்திர எரிச்சல், துர் மாமிச அடைப்பு கல்லடைப்பு ஆகியவற்றை நீக்கும் வல்லமை உண்டு.

கல்லடைப்பு குணமாக்கும் நெருஞ்சில் - சித்த மருத்துவம்

🥃🥃🥃🥃🥃🥃

பின்குறிப்பு: உங்கள் உடலின் தேவைகளுக்கு ஏற்ப இந்த குணப்படுத்தும் நீரை உட்கொள்ள வேண்டும். எனவே நீரிழிவு நோய் அல்லது பிற வியாதிகள் உள்ள நோயாளிகள் ஒரு புதிய வழக்கத்தைத் தொடங்குவதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.

🥃🥃🥃🥃🥃

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...