Saturday, May 15, 2021

✍🎋🎋இயற்கை வாழ்வியல் முறை🎋🎋 அனைவரும் அறிய வேண்டிய அறுசுவைகளின் அரிய பயன்களை.. நாமும் அறிந்து கொள்வோம்.

🎋🎋இயற்கை வாழ்வியல் முறை🎋🎋 அனைவரும் அறிய வேண்டிய அறுசுவைகளின் அரிய பயன்களை.. நாமும்   அறிந்து கொள்வோம்.

🎋🎋🎋🎋🎋

இனிப்பையும், காரத்தையும், கசப்பையும் நாம் வெறும் சுவையாக மட்டுமே பார்க்கிறோம். சித்தர்கள் அதை குணமாக பார்க்கிறார்கள். நாம் உண்ணும் உணவில் உள்ள இனிப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, காரம் ஒவ்வொன்றுக்கும் ஒரு குணம் உண்டு. உடலுக்குத் தேவையான குறிப்பிட்ட ‘சுவைச் சத்து’ கிடைக்காமல் போனாலோ, அல்லது அந்தச் சுவை தேவைக்கு அதிகமாய் இருந்து, மற்றொரு சுவையில் பற்றாக்குறை ஏற்பட்டாலோ, அது நம் உடலில் பிரச்சினைகளை உண்டு பண்ணும்.

🎋🎋🎋🎋🎋

கையில் நாடி பார்த்து, ‘உப்பைக் குறை; கசப்பான பொருட்களை சேர்த்துக்கொள்!’ என்று ஊரில் நாட்டு வைத்தியர் சொல்வதை பார்த்திருப்போம். அதன் உட்பொருள் இதுதான். சுவையும் ஒருவகை சத்துதான். உண்ணும் உணவில் அறுசுவைகளும் இல்லாமல் போவதுதான் உடலின் பல பிரச்சினைகளுக்குக் காரணம்.

🎋🎋🎋🎋🎋

சில உடல் பிரச்சினைகளுக்கு குறிப்பிட்ட சுவை உணவே தீர்வாக அமைகிறது. சளி இருந்தால் சுக்கு, மிளகு, கொத்துமல்லி(தனியா) நீரில் போட்டு கொதிக்க வைத்து கொடுப்பார்கள். அதில் உள்ள காரம், கசப்பு, துவர்ப்புச் சுவை மற்றும் லேசான உவர்ப்புச் சுவை உடனே பிரச்சினையை சரிசெய்து விடும். வெயிலில்போய் வந்ததும் நமக்கு களைப்பாய் இருக்கும்; ‘ஜூஸ்’ குடிக்க ஆசையாய் இருக்கும். பழச்சாறுகளில் இருக்கிற இனிப்பு, புளிப்புச் சுவைகளே உடலின் தாகத்தை சரிசெய்கின்றன.

🎋🎋🎋🎋🎋

எல்லா வயதிலும் எல்லா சுவைகளும் முக்கியம். தசை வளர்ச்சிக்கு இனிப்பு, புளிப்புச்சுவை அதிகம் தேவை. ரத்த உற்பத்திக்கு துவர்ப்பு, எலும்பு வளர்ச்சிக்கு உவர்ப்பு, நரம்புகளின் கட்டமைப்புக்கு கசப்பு, ஜீரணம் நன்றாய் இருக்க காரச்சுவை பெரிதும் உதவி செய்யும்.

🎋🎋🎋🎋🎋

ஒரு சுவையை சாப்பிட்ட சிறிது நேரத்தில் நீங்கள் புத்துணர்ச்சி பெற்றால், அந்தச் சுவை உங்களுக்குத் தேவை. இனிப்பு சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில், ‘ஏன்டா சாப்பிட்டோம்!’ என்ற நினைப்பு வந்தாலோ, ஒரு வெறுப்பு உணர்வு வந்தாலோ இனிப்புச் சுவையை குறைத்து காரம். கசப்புச் சுவையை நீங்கள் அதிகம் உண்ண வேண்டும்.

ஒரே சுவையை மட்டும் கொண்ட காய், கனிகள் கிடையாது. நெல்லிக்காயில் கசப்பு, புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு, உவர்ப்புச் சுவை இருக்கும். கறிவேப்பிலையில் கசப்பு, துவர்ப்பு, உவர்ப்புச் சுவை இருக்கும்.

🎋🎋🎋🎋🎋

புளிப்புச் சுவை

புளி, எலுமிச்சம் பழம், நெல்லி போன்றவற்றில் இருக்கிற புளிப்பு மட்டும் புளிப்புச் சுவை என்று கிடையாது. நொதித்தல் வினை நடக்கிற உணவுப் பொருள் எல்லாமே புளிப்புச் சுவையுடையதுதான். ‘கார்போ ஹைட்ரேட்’ என்று சொல்லப்படும் மாவுப் பதார்த்தங்கள், எண்ணெய்ப் பொருட்கள் அனைத்தும் புளிப்பு உணவுகளே. கொழுகொழுப்புத் தன்மை இருக்கும் எல்லாவற்றிலும் புளிப்புத்தன்மை இருக்கும்.

புளிப்பு, உடலைத் தூய்மையாக்கும். வளர்ச்சிக்கு உதவும். அதிக பசியோடு இருக்கும்போது புளிப்பு குணமுடைய அதாவது கார்போஹைட்ரேட் உணவான அரிசி உணவுகள் சிறந்தது.

USC researchers determine how sour tastes are sensed by humans

🎋🎋🎋🎋🎋

புளிப்புச் சத்து 60%, காரம், துவர்ப்பு, உவர்ப்பு, இனிப்பு, கசப்பு ஒவ்வொன்றும் 10% இருக்கிறபடி மதிய நேரத்து அறுசுவை உணவு இருக்கலாம். அவியல், பொரியல், கூட்டு, பச்சடி, துவையல், மசியல், மிகமிக கொஞ்சமாய் ஊறுகாய், சாம்பார், காரக்குழம்பு, ரசம், மோர், பட்டை தீட்டாத அரிசி, வெல்லப் பாயாசம் இப்படி நம் முன்னோர்கள் கண்டறிந்து சொன்ன உணவே உண்மையில் சரியான அறுசுவை உடைய சமச்சீர் உணவு.

மற்றபடி உங்கள் வேலையை பொறுத்து, காலை மற்றும் மாலை வேளைகளைப் பொறுத்து, முன்னர் உண்ட உணவைப் பொறுத்து மேலே சொன்ன சுவையின் விகிதங்கள் மாறுபடும். 

🎋🎋🎋🎋🎋

பொதுவாய் உடல் உழைப்பு உள்ளவர்கள் புளிப்பு அதிகமான கார்போஹைட்ரேட் உணவுகள் அதிகம் எடுக்கலாம். உடனடி ஆற்றலைத் தரும். மற்றவர்கள் சற்று குறைக்கலாம். புளிப்பு உணவுகள் தேவைக்கு அதிகமாய் எடுத்தால் செயல் மந்தமாக இருக்கும். உடலில் கொழுப்பை வளர்ப்பது புளிப்பு. சாப்பிடுகிற உணவில் கார்போஹைட்ரேட் அதிகமாக இருந்தால் கொழுப்பு சேரும்.

🎋🎋🎋🎋🎋

இனிப்புச் சுவை

பனைவெல்லம், நாட்டுச் சர்க்கரை, தேன், பழங்கள், ஜீனி எனப்படும் சுகர் இவையெல்லாம் இனிப்புச் சுவையுடையன. நெல்லிக்காய், அரிசி, சில தானியங்கள், கிழங்குகள் இவற்றில்கூட சிறிய அளவில் இனிப்புச் சுவை உண்டு.

Children and adolescents are 'less sensitive' to sweet taste: study

🎋🎋🎋🎋🎋

இனிப்புச் சுவை தசையைப் பெருக்கும். இனிப்பு நம்முடைய உடலுக்கு சக்தியைத் தரும். மூளைக்கு புத்துணர்ச்சியைத் தரும். குறிப்பிட்ட அளவுக்கு இனிப்புச் சுவை இருந்தால் உடல் வனப்பாய் இருக்கும். அதிகரித்தால் ஒருவித கிறுகிறுப்பைத் தரும். உடலில் கபத்தைக் கூட்டி விடும். சளித் தொந்தரவு வரும்.

மாம்பழம் அதிகமா சாப்பிட்டால் அதில் உள்ள இனிப்பு ஒரு கிறுகிறுப்பைத் தரும். மாங்கொட்டையில் இருக்கும் பருப்பை சாப்பிட்டால் அதிலுள்ள துவர்ப்பு சமன் செய்து விடும். இனிப்பு புண்ணை உண்டாக்கும். துவர்ப்பு புண்ணை ஆற்றும். 

🎋🎋🎋🎋🎋

துவர்ப்புச் சுவை

வயிறு சரியில்லை என்றால் வெந்தயக் கஞ்சி வைத்து சாப்பிடச் சொல்வார்கள். மாதுளை, நெல்லிக்காய், வாழைப்பூ, தேங்காய்ப் பால், கறிவேப்பிலை, அத்திக்காய், கடுக்காய் இதெல்லாம் சாப்பிடச் சொல்வார்கள். இதெல்லாம் வயிற்றுப் புண்களை ஆற்றக் கூடியவை. இவற்றில் இருக்கும் துவர்ப்புச் சுவைதான் புண்கள் ஆற காரணம். பால் வடியும் காய்களான பப்பாளி, அத்தி, நெல்லி, மாங்காய், பலாக்காய் இவற்றில் கூட துவர்ப்புச் சுவை உண்டு.

File:Carica papaya 20zz.jpg - Wikimedia Commons

🎋🎋🎋🎋🎋

குழந்தை பிறந்ததும் கொடுக்கிற தாய்ப்பாலில் துவர்ப்புச் சுவை உண்டு. பசும் பாலில் கூட துவர்ப்புச் சுவையின் தாக்கம் உண்டு. துவர்ப்புச் சுவை வயிற்றை சுகமாக்கும், மனதை இதமாக்கும். துவர்ப்புச் சுவை குறைந்தால் செரிமான கோளாறு, வாயுத் தொல்லை, அல்சர் இதெல்லாம் வரும்.

🎋🎋🎋🎋🎋

நலமான உடம்பாக இருந்தால் துவர்ப்பை தவிர்த்தால் மற்றச் சுவைகளை துவர்ப்பாய்  மாற்றிக் கொள்ளும். சில உணவுகளில் இருக்கும் மிகமிகக் குறைவான துவர்ப்புச் சுவையை வைத்தே உடல் வளத்தை பராமரித்துக் கொள்ளும். ஆனால், இன்றைய சூழலில் அவ்வளவு நலமான உடம்பு யாருக்கும் கிடையாது.

அதனால் துவர்ப்புச் சுவையை தினசரி உணவில் இருக்கிற மாதிரி பார்த்துக் கொள்வது ரொம்ப நல்லது.

உணவின் இரும்புச் சத்தை கிரகிக்கும் ஆற்றல் துவர்ப்புக்கு உண்டு. துவர்ப்புச் சவை குறைய குறைய உடலில் ரத்த உற்பத்தி குறைந்துவிடும். துவர்ப்புச் சுவை உடலுக்கு நன்றாய் கிடைத்துக் கொண்டிருந்தால் ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும். வயதானாலும் உடல் இயல்பாய் இயங்கும். இந்தச் சுவை குறைந்தால் சின்ன வயதிலேயே சோர்வு வரலாம்.

🎋🎋🎋🎋🎋

உடலில் புளிப்புச் சுவை தேவைக்கு அதிகமாகும்போது துவர்ப்பை நீர்த்துப் போக வைக்கும். ‘புளி அதிகமா சாப்பிட்டா ரத்தம் சுண்டிப் போகும்’னு ஊர்ல பெரியவங்க சொல்லிக் கேட்டிருப்பீங்களே! அதுக்குப் பின்னாடி உள்ள மருத்துவ அறிவியல் இதுதான். சித்த மருத்துவத்தில் ‘அய செந்தூரம்’ என்ற மருந்து கொடுக்கும்போது புளிப்பு உணவைத் தவிர்க்கச் சொல்வாங்க. அதற்குக் காரணம் இதுதான்.

🎋🎋🎋🎋🎋

துவர்ப்புச் சுவை (புளிப்பும் கூட) மிக அதிகமானால் வாத நோய் வரலாம். இன்றைய தமிழக உணவு முறையில் புளிப்புச் சுவையால் ஏற்படுகிற பாதிப்புகள்தான் அதிகம்.

🎋🎋🎋🎋🎋

பெண்களில் நிறைய பேர் ‘இரத்தசோகை’ ஆக இருக்கக் காரணம். துவர்ப்புச் சுவை அவங்களுடைய உடம்பில் இல்லாததுதான். இப்ப வர்ற வீரிய வாழைப்பழத்தில் இனிப்பும், புளிப்பும் இருக்கிறது. துவர்ப்பு நீக்கப்படுகிறது. ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்குமோ அது இந்தப் பழத்தில் கிடைக்காது. ஏனென்றால் அது இயற்கைக்கு மாறானதாக இருக்கிறது.

🎋🎋🎋🎋🎋

அரிசியில் மேலே உள்ள சிவப்பு நிறத்தில் தவிட்டுச் சத்தில் துவர்ப்புச் சுவை இருக்கிறது. அதை நீக்கி விடுகிறோம். அரிசியின் அடுத்த லேயரில் லேசாக கசப்பு இருக்கும். இயற்கையின் மிகச் சிறந்த உணவு அரிசி. அதை பட்டை தீட்டி, மற்ற சுவைகளை நீக்கி புளிப்பைக் கூட்டி மோசமான ஒரு உணவாக்கி வைத்திருக்கிறோம். துவர்ப்புச் சுவை குறைந்தால் வயிறு முதலில் புண்ணாகும். பிறகு ரத்தம் குறையும். எலும்பு தேயும். தொடர்ந்து உடம்பின் கால்சிய உற்பத்தி குறையும். மேலோட்டமாக பார்த்தால் இது ரொம்ப சாதாரண விஷயமாகத் தோன்றும். இப்படி நம்மையும் பாழாக்கி அடுத்த தலைமுறையையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறோம் இனியாவது  நமது முன்னோர்கள் பின்பற்றிய உணவு முறைகளை வருங்கால  சந்ததியினர் ஆரோக்கியமாக இருக்க நாம் முயற்சி செய்வேன்.


🎋🎋🎋🎋🎋

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய  இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍 ஈரோடு  மாவட்டம், பவானி .            

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...