Wednesday, May 26, 2021

✍🏻🫒🫒இயற்கை வாழ்வியல் முறை🫒🫒சுண்டக்காயின் நன்மைகள்.

✍🏻🫒🫒இயற்கை வாழ்வியல் முறை🫒🫒சுண்டக்காயின் நன்மைகள். 

🫒🫒🫒🫒🫒

சுண்டைக்காய் உருவத்தில் சிறியதாக இருந்தாலும் அதில் அடங்கியுள்ள நன்மைகளின் பட்டியல் மிக பெரியது. சுண்டக்காயின் இலேசான கசப்புச் சுவை சிலருக்குப் பிடிக்காது என்றபோதும், அதன் மருத்துவக் குணங்கள் சுண்டைக்காயின் சிறப்பானதாக மாற்றுகின்றன சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்துகள் நிறைந்துள்ளன. எனவே உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.

🫒🫒🫒🫒🫒

சுண்டைக்காயில் காட்டுச் சுண்டைக்காய், நாட்டுச் சுண்டைக்காய் என இருவகை உண்டு. மலைகள் மற்றும் காடுகளில் தானாக வளர்ந்து காணப்படுவது மலைச் சுண்டை. இவை பெரும்பாலும் வற்றல் செய்யப் பயன்படுகிறதுவீட்டுத் தோட்டங்களிலும் கொல்லைப் புறங்களிலும் வளர்க்கப்படும் நாட்டுச் சுண்டைக்காயை பச்சையாக சமைத்து உண்ணலாம் அது மலச்சிக்கலைப் போக்கி அஜீரணக் கோளாறுகளை நீக்கும்.

🫒🫒🫒🫒🫒

சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவை தடுக்கக் கூடியது.

சுண்டக்காயின் கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது.

🫒🫒🫒🫒🫒

இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும்.

🫒🫒🫒🫒🫒

ஆஸ்துமா வறட்டு இருமல், மார்புசளி காசநோய் தொந்தரவு இருப்பவர்கள் தினம் இருபது சுண்டைவற்றலை சிறிது  நல்லெண்ணெயில் வறுத்து சாப்பிடவேண்டும். நோய் கட்டுப்படும் இது வயிற்றில் உள்ள பூச்சிகளை நீக்கும் இயல்புடையதுமூலத்தில் ஏற்படும் கடுப்பு மூலச்சூடு மற்றும் வயிற்று கோளாறுகளுக்கும் சிறந்த மருந்தாகின்றது.

🫒🫒🫒🫒🫒

சுண்டைக் காயைச்சமைத்து உண்ணக் கபக்கட்டு, ஈளை, காசம், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர்ப்பூச்சி முதலியன தீரும்.

🫒🫒🫒🫒🫒

உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து, பின் காயவைத்து எண்ணெயில் வறுத்து இரவு உணவில்  பயன் படுத்தி வர மார்ச்சளி, ஆஸ்துமா, காச நோய் தீரும். வயிற்றுப் போக்கு நின்று விடும்.



🫒🫒🫒🫒🫒

சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம்பருப்பு, கறிவேம்பு, சீரகம்  ஆகியவை தனித்தனியே எடுத்து இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து இடித்த சூரணம் காலை, மாலை 2 சிட்டிகை ஒரு டம்ளர் மோரில் சாப்பிட்டு வர பேதி, மூலம் பசியின்மை மார்ச்சளி நீரிழுவு தீரும்

🫒🫒🫒🫒🫒

சுண்டை வற்றல், கறிவேம்பு மிளகு, சீரகம் வெந்தயம் இளவறுப்பாய் வறுத்து உப்பு சேர்த்து சூரணித்து உணவில் கலந்து சாப்பிடப் பசி மந்தம் சுவையின்மை மலக்குடல் கிருமிகள் மூலம் ஆகியவை தீரும்

🫒🫒🫒🫒🫒

இதன் வேர்ப்பட்டையை பொடிசெயுது தேய்காய் தொட்டியில் வைத்து ஒரு சிட்டிகை மூக்கிலிட்டு உள் இழுக்க தலைநோய் நீரேற்றம் மண்டைக் குடச்சல் ஒற்றைத் தலைவலி மூக்கில் நீர் பாய்தல் நிற்கும்.

🫒🫒🫒🫒🫒

சுண்டை வேர்  ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வலிகாச்சல் குணமாகும்

🫒🫒🫒🫒🫒

சுண்டைக்காய் வற்றல்

முற்றின சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக்கொண்டு தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம்.  இது மார்புச்சளியைப் போக்கும்.  குடலில் உள்ள அசடுகளை நீக்கும்

சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல் நீங்கும்.

சுண்டைக்காய் வற்றல் தரும் நன்மைகள்

🫒🫒🫒🫒🫒

சுண்டைக்காய் சூப்

சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு,  சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலைகொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல், போன்றவை நீங்கும்

இரத்தத்தை சுத்தப்படுத்தி, சிறுநீரைப் பெருக்கும்.  உடல் சோர்வை நீக்கும்.  தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும்.

மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும் ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு குறையும்

🫒🫒🫒🫒🫒

முதலில் சுண்டைக்காயை நீரால் சுத்தம் செய்து பின் கத்தியால் வெட்டி கொதிக்கும் நீரில் ஐந்து நிமிடம் போட்டு பின் நீரை வடிக்கவும். ஒரு நாள் அதை மோரில் ஊற வைத்து அடுத்த நாள் சுண்டைக்காயை மட்டும் வடித்து எடுத்து வெயிலில் காய வைக்கவும். பகலில் இரண்டையும் காய வைத்து மாலை நேரம் வந்ததும் இரவு முழுவதும் மோரில் சுண்டைக்காயை ஊற வைக்கவும், இப்படி நான்கு நாட்கள் வற்றல் நன்றாக காயும் வரை காய வைக்கவும் பின்பு பயன்படுத்தவும்

🫒🫒🫒🫒🫒

நம்மூர் மக்களுக்கு சுண்டைக்காய் வற்றலைத் தவிர அதை எப்படி உபயோகிப்பது என்பது தெரியாது. ஆனால், சுண்டைக்காயை விதம் விதமாக சமைத்து உண்ணலாம் கத்தரிக்காயை என்னவெல்லாம் செய்து சாப்பிடுவோமோ, அத்தனையையும் சுண்டைக்காயிலும்  செய்யலாம். கேரட், பீட்ரூட் மாதிரி பிரமாதமான சுவை கொண்டதல்ல இது. சப்பென்றுதான் இருக்கும். ஆனால், அதை நாம் சமைக்கிற முறையின் மூலம் சுவைமிக்க சுண்டைக்காயின் சுவை அறியலாம்.

🫒🫒🫒🫒🫒

பிரசவமான பெண்களுக்கு பத்திய சாப்பாட்டின் ஒரு பகுதியாக அங்காயப் பொடி என ஒன்று கொடுப்பார்கள். அதில் பிரதானமாக சேர்க்கப்படுவதே சுண்டைக்காய்தான். தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான சக்தியைத் தூண்டி, உடலின் நச்சுகளை வெளியேற்றும் சக்தி கொண்டது. அதில் சேர்க்கப்படுகிற சுண்டைக்காய் சுண்டைக்காயா... அதை வச்சு என்ன செய்ய என ஒதுங்கிப் போகாமல் இனிமேல் எப்போது, எங்கே சுண்டைக்காயைப் பார்த்தாலும் உடனே வாங்கி சமைத்து சாப்பிடுங்கள்.

சுண்டைக்காயின் மருத்துவ நன்மைகள் | sundakkai health benefits |TAMIL TIPS  PAGE - YouTube

🫒🫒🫒🫒🫒

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

நிலவில் சந்திரயான் கண்டறிந்த ரகசியம்.. உலகமே திரும்பிப்பார்த்த தருணம்.

நிலவில் சந்திரயான் கண்டறிந்த ரகசியம்.. உலகமே திரும்பிப்பார்த்த தருணம். ஒரு நாளைக்கு 16 முறை சூரிய உதயத்தையும் மறைவையும் பார்க்கும் விண்வெளி ...