Wednesday, June 2, 2021

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாகுமா?இன்று ஆலோசனை.

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாகுமா?இன்று ஆலோசனை.

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்துவது தொடர்பாக இன்று  முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த எதிர்பார்ப்பு வலுத்துள்ளது. தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்த நிலையில், மத்திய அரசின் முடிவைப் பொறுத்து தமிழக அரசு முடிவெடுக்கும் என அவர் இன்று கூறி இருந்தார். இந்நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து, இன்று  முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும், அதன்பிறகு முடிவு வெளியிடப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.



இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை. நாட்டின் சொந்த விண்வெளி மையம் அமைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக நுண் புவி ஈர்ப்ப...