ஜூன் 21ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் அறிவிப்பு.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை மேலும் ஒரு வார காலம் நீட்டித்துள்ளது தமிழ்நாடு அரசு. தளர்வுகளுடன் கூடிய இந்த ஊரடங்கு வரும் ஜூன் 21 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் கூடுதலாக அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளது அரசு.
தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள், வீடு பராமரிப்பு சேவைகள் இ-பதிவுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதோடு, டாஸ்மாக் மதுக்கடைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் காலை 10 முதல் மாலை 5 வரை டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு அனுமதி.
- ஏற்றுமதி நிறுவனங்கள், இடுபொருள் தயாரிக்கும் நிறுவனங்கள் 25% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி
- மண் பாண்டம், கைவினைப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி
- கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படலாம்
- வேளாண் உபகரணங்கள், பம்ப் செட் பழுதுநீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதி
- வாடகை வாகனங்கள், டாக்சிகளில் இ-பதிவுடன் பயணிக்க அனுமதி
- மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுதுநீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதி
11 மாவட்டங்களுக்கான கூடுதல் தளர்வுகள்
- மின்பணியாளர், ப்ளம்பர், கணினி உள்ளிட்ட இயந்திரங்கள் பழுதுநீக்குவோர் வீடுகளுக்கு சென்று சேவையாற்ற 9 - 5 மணி வரை அனுமதி
- வேளாண் உபகரணங்கள், பம்ப் செட் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்
- அரசு பூங்காக்கள், உள்ளாட்சி அமைப்பு பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் நடைபயிற்சிக்கு மட்டும் காலை 6 முதல் 9 மணி வரை அனுமதி
- கண் கண்ணாடி விற்பனை, பழுதுநீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதி
- கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதி
- செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதி
- மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 முதல் மதியம் 2 மணி வரை செயல்படலாம்
- அழகு நிலையங்கள், சலூன்கள் குளிர்சாதன வசதியின்றி காலை 6 முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளித்துள்ளது அரசு.
No comments:
Post a Comment