Tuesday, June 8, 2021

அகரம் அறக்கட்டளை கல்வி உதவித் தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அகரம் அறக்கட்டளை கல்வி உதவித் தொகை வழங்க  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


'கல்வியே ஆயுதம்கல்வியே கேடயம்என்கிற அடிப்படை கொள்கையோடு இயங்கும் அகரம் ஃபவுண்டேஷன் அமைப்பின் வழிகாட்டுதலோடுகல்வி ஊக்கத்தொகை பகிர்ந்தளிக்கப்படும்.  அதிக பொருளாதார தேவையுள்ள குடும்பத்திலிருந்து ஒரு மாணவ/மாணவிக்கு மட்டும்கல்விக் கட்டணமாக அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும். சான்றுகளின் அடிப்படையில் அது நேரடியாக மாணவர்கள் படிக்கும் கல்வி நிறுவனத்திற்கே அனுப்பி வைக்கப்படும்.

 

அகரம் வடிவமைத்துள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்துதேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்துஅஞ்சல் மூலமாக அகரம் ஃபவுண்டேஷன் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பப் படிவத்தில் கூறியுள்ள வழிமுறைகள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றி உதவித் தொகைக்கான தேர்வு அமையும். www.agaram.in இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய மாணவ /  மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகை வழங்க அகரம் அறக்கட்டளை சார்பில் முடிவெடுத்து,  அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

10-ஆம் வகுப்பு முடித்த மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வு எழுத போகும் மாணவர்கள் மற்றும் கல்லூரி மேற்படிப்பு (PG) மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்.

Application Form Link


இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...