Saturday, June 26, 2021

ஜூன் 28 முதல் தொலைதூர பேருந்துகள் இயக்கம்.

 ஜூன் 28 முதல் தொலைதூர பேருந்துகள் இயக்கம்.

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துவருவதையொட்டி பல்வேறு விதமான தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதில், 27 மாவட்டங்களுக்கு இடையே வரும் 28ஆம் தேதிமுதல் தொலைதூர பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவலை தற்போது போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது.

அதில், அரசு விரைவுப் பேருந்துகள், சார்புடைய போக்குவரத்துக் கழகங்கள் 50% பயணிகளுடன் 28ஆம் தேதி காலை 6 மணிமுதல் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திற்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையேயும் 50% இருக்கைகளுடன் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் போக்குவரத்துத் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

த. பாதர் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவியல் கண்காட்சி.

த. பாதர் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவியல் கண்காட்சி. இன்று உப்பிலியபுரம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி த.பாதர்பே...