Saturday, June 5, 2021

செப்டம்பரில் +2 தேர்வு நடத்துவது குறித்து தமிழக அரசு பரிசீலனை.

 செப்டம்பரில் +2 தேர்வு நடத்துவது குறித்து தமிழக அரசு பரிசீலனை.

தமிழகத்தில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை வரும் செப்டம்பர் மாதத்தில் நடத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக, கடந்த மார்ச் மாதம் நடைபெற வேண்டிய பொதுத் தேர்வுகள் நாடு முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், சி.பி.எஸ்.இ., 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து அண்மையில் மத்திய அரசு அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக, ராஜஸ்தான், குஜராத், ஒடிசா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்தன.

இதையடுத்து, தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது தொடர்பாக, கல்வியாளர்கள், மருத்துவ வல்லுனர்கள் உள்ளிட்டோரிடம், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையே, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தடுப்பூசி போட்ட பிறகு, வரும் செப்டம்பர் மாதத்தில் தேர்வு நடத்துவது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பெரும்பாலானோர் தேர்வை நடத்த ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில் பொதுத் தேர்வை ரத்து செய்யாமல் செப்டம்பரில் தேர்வை நடத்த அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.



இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

நெருப்பு வளைய சூரிய கிரகணம் Ring of Fire Solar Eclipse.

நெருப்பு வளைய சூரிய கிரகணம் Ring of Fire Solar Eclipse புதன்கிழமை அக்டோபர் 2- ம் தேதி   வானத்தில் தோன்றவுள்ளது . பூமிக்கும் சூரிய...