Tuesday, June 15, 2021

பான் கார்டை ஆதாருடன் இணைச்சாச்சா?-ஜூன் 30 கடைசி நாள்.

 பான் கார்டை ஆதாருடன் இணைச்சாச்சா?-ஜூன் 30 கடைசி நாள்.

பான் கார்டு உள்ள அனைவரும் அவர்களது ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30 வரையில் மட்டுமே உள்ளது. காலக்கெடு முடிய இன்னும் மூன்று வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், பான் கார்டை ஆதாருடன் இணைக்காதவர்கள் இணைத்து வருகின்றனர். ஆனால், பலருக்கு அவர்களது ஆதார் கார்டும் பான் கார்டும் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதே தெரியாமல் இருக்கும். அதை அவர்களே மிக எளிதாக ஆன்லைன் மூலமாகத் தெரிந்துகொள்ள முடியும்.

பான் கார்டு ஆதார் கார்டை இணைக்க Link 

வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில், https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar என்ற முகவரியில் நீங்களே உங்களுடைய ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க முடியும். ஆதார் எண் , பான் எண் இரண்டையும் அதில் கொடுத்த பிறகு ஆதார் அட்டையில் உள்ளது போலவே உங்களது பெயரைப் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு கேப்ட்சா குறியீடு அல்லது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் ரகசிய எண்ணை (OTP) பதிவிட்டு ஆதாருடன் பான் கார்டை இணைக்கலாம்.

உங்கள் பான் நம்பரை ஆதாருடன் இணைக்காவிட்டால், அது செல்லாமல் போகக் கூடும். அதோடு 10,000 ரூபாய் வரை அபாதாரமும் விதிக்கப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...