Tuesday, June 15, 2021

✍👩🏻‍⚕👩🏻‍⚕இயற்கை வாழ்வியல் முறை👩🏻‍⚕👩🏻‍⚕மஞ்சளின் நன்மைகள்.

👩🏻‍⚕👩🏻‍⚕இயற்கை வாழ்வியல் முறை👩🏻‍⚕👩🏻‍⚕மஞ்சளின் நன்மைகள்.

👩🏻‍⚕👩🏻‍⚕👩🏻‍⚕👩🏻‍⚕👩🏻‍⚕

இன்று நேற்று அல்ல பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் இந்தியர்களின் அன்றாட வாழ்வின் பெரும் பகுதியில் ஆன்மீகம் தொடங்கி உணவு ,மருத்துவம் , அழகு சாதன பயன்பாடுகள் என பலவற்றில் கலந்து இருக்கிறது மஞ்சள். இது வெறும் மங்கள பொருள் மட்டுமல்ல பல்வேறு நோய்கள் நம்மை அண்டாமல் தடுக்கும் மந்திர பொருளும் கூட. இதன் பூர்விகம் மேற்கு ஆசியா அல்லது சீனாவாக இருக்கலாம் என்றே கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். ஆனால் இது நம் ஆயுர்வேதம், சித்தாவின் மருந்து வகைகளின் முக்கிய உட்பொருள் அதோடு உலகின் நம்பர் 1 மஞ்சள் உற்பத்தியாளர், பயன்பாட்டாளர் மற்றும் ஏற்றுமதியாளர் மூன்றுமே இந்தியா தான் அதனால் மஞ்சளை நம் பயிராக சொந்தம் கொண்டாட நமக்கே அதிகம் உரிமை உள்ளது என எடுத்துக்கொள்வோம்.

👩🏻‍⚕👩🏻‍⚕👩🏻‍⚕👩🏻‍⚕👩🏻‍⚕

மஞ்சளில் பல வகைகள் உள்ளன. அதை அதிகம் உணவில் பயன்படுத்த வேண்டியது நம் தலையாய கடமை. மஞ்சளை உணவிலும், உடலிலும் அதிகம் பயன்படுத்தியவரை இந்தியர்களுக்கு புற்றுநோய் அந்நியமாய் இருந்தது.ஆனால் இன்று நம்மில் பலர் இந்த மஞ்சளை தவிர்க்க தொடங்கிவிட்டதால் புற்றுநோய் நமக்கு பிரச்னையாய் மாறியுள்ளது. இதில் கூர்ந்து கவனித்தால் மெல்லிய சிகப்பு நரம்பு போன்று தெரியும் பொருளின் பெயர் குர்க்குமின் அது கேன்சருக்கு பரம எதிரி ஆனால் இன்று நமக்கு வரும் பாக்கெட் பொடிகள் பலவற்றில் இவை பிரிக்கப்பட்டு பன்னாட்டு மருந்து கம்பெனிகளுக்கு லட்சங்களில் விற்பனை செய்யப்பட்டு மருந்து தயாரிக்க அனுப்பப்படுகிறது.

👩🏻‍⚕👩🏻‍⚕👩🏻‍⚕👩🏻‍⚕👩🏻‍⚕

ஆகவே பாக்கெட் மஞ்சளை விட நன்மை தரக்கூடியது நல்ல மஞ்சள் தரம் பார்த்து வாங்கி பக்குவமாய் மில்லில் கொடுத்து திரித்து பயன்படுத்துவது தான் சாலச்சிறந்தது. நன்கு உலர்த்தப்பட்ட மஞ்சள் குச்சியின் ஒரு துண்டை ஒடித்தால் அதில் உலோகத்தை உடைத்த சத்தம் உண்டாகுமாம். சமையலுக்கு நிறத்தையும் ,சுவையையும் உணவு சீக்கிரம் கெட்டு போகாமல் இருக்கவும் பயன்படும் மஞ்சள் சிறந்த நுண்ணுயிர்க் கொல்லியாகவும் இருக்கிறது.

👩🏻‍⚕👩🏻‍⚕👩🏻‍⚕👩🏻‍⚕👩🏻‍⚕

இன்று அதிகரித்து வரும் ரசாயனக்கொல்லிகள் தெளிக்கப்பட்ட காய்கறிகளை மஞ்சள்,உப்பு கலந்த தண்ணீரில் நன்றாக கழுவி சமையலுக்கு பயன்படுத்தினால் பூச்சி மருந்தால் நமக்கு ஏற்படும் தீயதாக்கங்கள் குறையும். மஞ்சள்தூளை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் வயது முதிர்ந்தவர்களுக்கு ஏற்படும் நினைவுக் குறைபாடு தரும் அல்சைமர் போன்ற நோய் பாதிப்பு உள்ளவர்களின் மூளையில் ஏற்படும் கெடுதல் தரும் படிவுகளை குறைக்கும் என்று துவக்கநிலை அறிவியல் ஆராய்ச்சிகளில் வெளியாகியுள்ளது.

👩🏻‍⚕👩🏻‍⚕👩🏻‍⚕👩🏻‍⚕👩🏻‍⚕

சளியினால் மூக்கடைப்பு ஏற்பட்டவர்கள், திடீர் மயக்கத்தால்  மூர்ச்சையாகி விழுந்தவர்களுக்கு மஞ்சளை சுட்டு அந்தப் புகையை மூக்கில் காட்டினால் தெளிவு கிடைக்கும். அதே போல் உடம்பில் ஏற்படும் வேனல் கட்டி, நகச்சுற்று அடிப்பட்ட வீக்கம் இவைகளுக்கு மஞ்சளை அரைத்து கொஞ்சம் அரிசி மாவுடன் கலந்து கிளறிச் சூடாக அடிபட்ட இடங்களில் பத்துப் போட்டால் குணம் உண்டாகும்.

👩🏻‍⚕👩🏻‍⚕👩🏻‍⚕👩🏻‍⚕👩🏻‍⚕

அழகு சாதனப் பொருளாக மட்டும் அல்ல, வயற்றில் ஏற்படும் அஜீரணத்துக்கு மருந்தாகவும் மஞ்சள் பயன்படுகிறது. கஸ்தூரி மஞ்சளை தினமும் குளிக்கும்போது பூசி வந்தால், பெரும்புண்கள், கரப்பான் போன்றவை குணம் ஆகும். சோர்வாக இருப்பவர்களை, இதன் நறுமணம் உற்சாகமாக உணரவைக்கும். 50 கிராம் கஸ்தூரி மஞ்சள் பொடியை, ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் போட்டு, காய்ச்சி, வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அடிபட்ட புண்களில் இந்த எண்ணெயைத் தடவிவர சிறந்த தீர்வு கிடைக்கும்.அதோடு அது ஒரு சிறந்த கிருமிநாசினியாகச் செயல்பட்டு, ஆறாத காயங்கள், பித்தவெடிப்பு, சொறி, சிரங்கை கூட குணம் ஆக்கும். வலி நிவாரணியாகவும் செயல்படும். கஸ்தூரி மஞ்சள் பொடியை, தண்ணீரில் கலந்து குடித்தால் வயிற்று வலி தீரும். பாலில் மஞ்சள் கலந்து தினமும் குடிக்க, ‘பிராங்கைட்டிஸ்’ என்னும், நுரையீரல் தொற்று மற்றும் இருமலை முழுவதும் குணப்படுத்தும். சீரான பசியை உண்டாக்கும். அதுமட்டுமல்ல மஞ்சள் சேர்த்துக் கொதிக்க வைத்த வெந்நீரால் வாய் கொப்பளித்தால் தொண்டைப்புண் ஆறுவதோடு, சளி முறிந்து எளிதில் வெளியாகும்.

மஞ்சளில் இந்த அற்புதமான மருத்துவ குணங்கள் உள்ளது தெரியுமா உங்களுக்கு?

👩🏻‍⚕👩🏻‍⚕👩🏻‍⚕👩🏻‍⚕👩🏻‍⚕

கர்ப்பக் காலங்களில் வயிற்றில் ஏற்பட்ட தளர்ச்சி குறைந்து, வயிறு இறுக  மஞ்சள் பெரிதும் உதவுகிறது.உணவாக ஏற்கப்படும் மஞ்சள் தொண்டையிலும், மார்பிலும், இரைப்பையிலும் ஏற்படும் கப அடைப்பை அகற்றி வலியைக் குறைக்கும் வாய், நாக்கு, தொண்டை, உதடு ஆகிய இடங்களில் ஏற்படும் கொப்பளங்கள், புண்ணையும் ஆற்றுகிறது. இரைப்பை, குடல் முதலியவைகளுக்குச் சுறுசுறுப்பூட்டி பசி மற்றும் ஜீரண சக்தியை உண்டாக்குகிறது. குடலில் புழு, கிருமி தங்கவிடாமல் வெளியேற்றி விடுகிறது. இத்தனை நல்ல குணமுடையது என்பதால் உணவுப் பொருள்கள் அனைத்திலும் மஞ்சள் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது.

👩🏻‍⚕👩🏻‍⚕👩🏻‍⚕👩🏻‍⚕👩🏻‍⚕

முகத்திற்கு பூசுவதற்கு வித விதமாய் அழகு சாதன கிரீம்கள் வந்த பின்னர் மஞ்சள் பூசி குளிப்பது இன்றைக்கு மறந்தே போய்விட்டது ஆனால் மஞ்சள் பூசி குளிப்பவர்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் பாதிக்கும் வாய்ப்பு குறைவு என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மஞ்சள் பூசிய முகத்துக்கென்று ஒரு தனி அழகு உண்டு ஆனால் அது வெறும் அழகோடு நிற்காமல் அதில் ஏராளமான மருத்துவ குணங்களும் உண்டு என்பது இன்றைய இளம் யுவதிகளுக்குப் புரிவதில்லை.

இன்றைய இளம் பெண்கள் பலருக்கும் சோப்பு போட்டு குளித்த பின்னர் மஞ்சள் பூசி குளிப்பதன் மகிமை தெரியாமல் போனதன் காரணம் அதைப் பற்றி சரியான புரிதலும், விழிப்புணர்வும் இல்லாமல் போனதுமே காரணம். எனவேதான் மஞ்சள் பூசி குளித்தவர்கள் கூட, நாளடைவில் தோழிகள் சிரிக்கிறார்களே என்று தற்போது மஞ்சளை மறந்தே விட்டார்கள்.

👩🏻‍⚕👩🏻‍⚕👩🏻‍⚕👩🏻‍⚕👩🏻‍⚕ 

மஞ்சள் ஒரு கிருமிநாசினி என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் அது பெண்களுக்கு ஏற்படும் கொடிய புற்றுநோயான கருப்பை வாய் புற்றுநோயைக் கூட கட்டுப்படுத்துகிறதாம்.

   👩🏻‍⚕👩🏻‍⚕👩🏻‍⚕👩🏻‍⚕👩🏻‍⚕

கொல்லப்படும் வைரஸ்

மஞ்சள் பூசி குளிக்கும் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோயை உருவாக்கும் ஹியூமன் பப்பிலோமா வைரஸ் (எச்பிவி) அழிக்கப்படுவதும், புற்றுநோய் ஏற்பட்டவர்களுக்கு அது ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்படுவதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

👩🏻‍⚕👩🏻‍⚕👩🏻‍⚕👩🏻‍⚕👩🏻‍⚕

கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுத்தும் எச்பிவி கிருமிகள் கருப்பை வாயில் இருப்பது கண்டறியப்பட்ட பெண்களில் பாதி பேருக்கு மஞ்சள் கொடுத்து பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. சிலருக்கு எப்போதுமான மருந்துகள் மட்டும் கொடுக்கப்பட்டது.

அதில் மஞ்சள் பயன்படுத்தியவர்களுக்கு எச்பிவி கிருமியால் ஏற்பட்ட பாதிப்பு சரியாகியிருந்ததும், மேலும் பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

👩🏻‍⚕👩🏻‍⚕👩🏻‍⚕👩🏻‍⚕👩🏻‍⚕

மஞ்சள் பூசுங்க

இனி பெண்கள் குளிக்கும் போது, மஞ்சள் தேய்த்து குளிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அலுவலகம் மற்றும் பள்ளிக்குச் செல்லும் பெண்கள் விடுமுறை நாட்களிலாவது மஞ்சள் பூசுவது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்

👩🏻‍⚕👩🏻‍⚕👩🏻‍⚕👩🏻‍⚕👩🏻‍⚕

இந்த அற்புத மஞ்சளை மனதில் நிறுத்தி எந்நாளும் பயன்படுத்துவோம்.மங்களமான நோய்களற்ற நலமான நீண்ட ஆயுளோடு வாழ்வோம்…

மஞ்சளின் நன்மைகள், பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் - Turmeric Benefits, Uses  and Side Effects in Tamil

👩🏻‍⚕👩🏻‍⚕👩🏻‍⚕👩🏻‍⚕👩🏻‍⚕

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...