உரிமை மீட்பு..உரிமை முழக்கம்..கவிதை✍️இ.கிருபா BBA-NMC.
உரிமை மீட்பு..
உப்பளத்தின்
மண் மீது
துளை வேண்டாம்
மீதேனுக்காக
புன் செய்யாதீர்
எம் தமிழ் மண்
வயிற்றை..
நரை விழுந்த
கிழடுகள்
போராட..
இளசுகளும் இணைந்து
சத்தமிட்டன...
பதாகைகள்
உயர்ந்து உரிமை
பேசின..
சத்தங்களின்
தொனிகள்
உரிமை முழக்கம் போட்டன..
அறிவாளன்,
அதிசயம் அம்மாளின்
மகன்..
அதிகம் கற்றவன்
விஞ்ஞானத்தின்
விபரீதம் கண்டவன்
வெளிநாட்டில்
படித்தவன்..
முதல் வரியிலே
உரிமை முழக்கம்
செய்தான்..
உரிமை குரல்கள்
ஸ்டெர்லைட்
சத்தத்தை மறைத்தன..
துப்பாக்கி முனையில்
கூட்டம் கலைய
உத்தரவு..
அறிவாளன்
அகழுவதாய் இல்லை..
குண்டு விழுங்கிய
துப்பாக்கிகள்..
விரல் அசைவுக்காய்
காத்திருந்தன..
அதிசயம் அம்மாள்..
அறிவாளனை
அழைத்தாள்
கேட்காதவன்
தொடர்ந்தும்
சத்தமிட்டான்..
குண்டுகள் பாய்ந்தன
கூட்டம் கலைந்தது
பத்துப்பேர்
சடலமாயினர்
அறிவாளனும்
அதில் ஒருவன்..
உரிமை மீட்ப்போம்
என்ற பதாகைகள்
எங்கும் ரத்தம்
படிந்திருந்தது..
அதிசயம் அம்மாளின்
நினைவிலும்
அறிவாளன் கண்ணீராய்
இன்றுவரை
பதிந்துள்ளான்...
உப்பளம் கடந்து
அந்த தரையிலும்
இன்றுவரை
உப்பு சுவை
மணக்கும்....
✍️கவிதை✍️:இ.கிருபா BBA, நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
From Sri Lanka.
இது போன்ற தகவல் பெற
No comments:
Post a Comment