Thursday, June 17, 2021

✍🌿🌿இயற்கை வாழ்வியல் முறை🌿🌿புதினாவின் நன்மைகள்.

🌿🌿இயற்கை வாழ்வியல் முறை🌿🌿புதினாவின்  நன்மைகள்.

🌿🌿🌿🌿🌿

புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்துவைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன. சட்னி, ஜூஸ் எந்த விதத்தில் இதை பயன்படுத்தினாலும் இதன் பொது குணங்கள் மாறுவதில்லை என்பது இதன் முக்கிய அம்சம்.

🌿🌿🌿🌿🌿

அசைவ உணவு மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் ஜீரணமாக்குகிறது. இரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும். பசியை தூண்டும் மலச்சிக்கல் நீங்கும். பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது.

🌿🌿🌿🌿🌿

ஆண்மைக் குறைவை நீக்கி முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவும் புதினாக் கீரை உதவுகின்றது. வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றதுவாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது.

🌿🌿🌿🌿🌿

புதினாவை நீர் விடாமல் அரைத்து வெளி உபயோகமாகப் பற்றுப் போட்டால், தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகளின் வேதனை குறையும். ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது.

🌿🌿🌿🌿🌿

மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் இதன் சாரை முகத்தில் தடவி வர பலன் கிடைக்கும்.

🌿🌿🌿🌿🌿

புதினாவை நிழலில் காயவைத்து பாலில் சேர்த்து கொதிக்கவைத்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சமயம் புதினாக்கீரை துவையலை சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும். புதினாக்கீரை கர்ப்பிணிகளின் வாந்தியை நிறுத்த ஒரு கைகண்ட மருந்தாக இருந்து வருகிறது.

🌿🌿🌿🌿🌿

புதினாவை நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு நீர் சேர்த்து 30 மில்லி முதல் 60 மில்லி வரை கொடுத்து வந்தால் காய்ச்சல் தணியும். மூச்சுத்திணறல் நிற்க, புதினா இலையைச் சிறிதளவு எடுத்து மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பின் இந்த நீரை குடித்தால் மூச்சுத்திணறல் நீங்கும்.

புதினாவின் நன்மைகள்

🌿🌿🌿🌿🌿

புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி ஊற வைத்து . சிறிது நேரம் கழித்து அலசினால் பொடுகுக்கு மறைந்துவிடும். கூந்தலும் பட்டுபோல் பளபளக்கும்.

🌿🌿🌿🌿🌿

புதினா ஜூஸ்

தேவையான பொருட்கள்

புதினா இலைகள் - 1 கைப்பிடி,

பொடித்த வெல்லம் - 2 டீஸ்பூன்,

எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்,

மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்,

சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன்,

உப்பு - தேவைக்கு.

செய்முறை

🌿🌿🌿🌿🌿

புதினாவை கழுவிச் சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வடித்துக் கொள்ளவும். இதனுடன் எலுமிச்சைச்சாறு, சீரகப்பொடி, வெல்லத்தூள், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலந்து பரிமாறவும்.

பயன்கள்

🌿🌿🌿🌿🌿

மஞ்சள் காமாலை வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

வாய்யில் ஏற்படும் நாற்றம் அகலும், பசியை தூண்டும் மற்றும் மலச்சிக்கலை நீக்கும். பெண்களின் மாதவிலக்குப் காலங்களில் ஏற்படும் முக்கிய பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது

நம் உடலில் உள்ள இரத்தத்தை சுத்தமாக்கி அசைவ உணவு மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் ஜீரணமாக்குகிறது.

🌿🌿🌿🌿🌿

கர்ப்ப காலங்களில் பெண்களுக்கு அடிக்கடி தோன்றும் வாந்தி ஏற்படுவதை தடுக்கவும் இதனை பயன்படுத்துவது உண்டு.

கடுமையான வயிற்றிப் போக்கின் போது இதை துவையலாக செய்து சாப்பிட்டால் வயிற்றுக்கோளாறுகள் அகலும்.

தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகள் போன்றவற்றிற்கு புதினாவை நீர் விடாமல் அரைத்து பற்றுப் போட்டால் அவர்களின் தீராத வேதனை குறையும்.

புதினா சாரை முகத்தில் தடவி வர முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் நல்ல பலன் கிடைக்கும்.

எரிச்சலூட்டும் சருமத்திற்கு இனிமையான நன்மைகள் உள்ள புதினா இலைகளை இப்படி  பயன்படுத்துங்க..!! – Update News 360 | Tamil News Online | Live News |  Breaking News Online | Latest ...

🌿🌿🌿🌿🌿

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

1 comment:

காதலுக்கு உதவுமா குவாண்டம் காந்த கணினிகள்?

 காதலுக்கு உதவுமா குவாண்டம் காந்த கணினிகள்? பள்ளிக்கூட காலத்தில் இரண்டு சாதாரண காந்தங்களை கையில் வைத்திருப்பது புதையல் ஆகும். ஒரு காந்தம் வை...