Thursday, June 17, 2021

செல்போன் சிட்டு குருவி..கவிதை✍️இ.கிருபா BBA-NMC.

 செல்போன் சிட்டு குருவி..கவிதை✍️இ.கிருபா BBA-NMC.

 செல்போன் சிட்டு குருவி..


ஒரு சிப்பம்

அரிசி வாங்கினால்

அம்மா ஒரு கைப்பிடி

பூஜையறையினுள்

வைப்பாள்...

சிட்டுக்குருவிக்கு

பசியாற...


அணுமதி இல்லாமலே

அது வந்து போகும்..


பழைய

பெட்டியினுள்

பஞ்சு நிரப்பி 

அப்பா செய்த

கூட்டினுள்

இரவு தஞ்சம்

கொள்ளும்...


தங்கை

உணவு உண்ணாமல்

அடம்பிடித்தால்

சில பருக்கைகள்

முற்றத்தில்

தூவுவாள்..அம்மா...

சிட்டுக்குருவி

கொத்தும் அழகிலே

அவளும்

ஒருவாய்

ஊட்டிக்கொள்வாள்..


கீச் கீச் என 

சத்தம் போட்டு

சொந்தங்கள் ஒன்று சேர்ந்து

வானில் ஒரு உலா

போகும்..

chittu kuruvi 🐥🐥🐥 GIFs S.G.S❤️❤️❤️ - ShareChat - India's own Indian  Social Network

அந்திவானம்

மஞ்சல் அரைக்கையிலே

வீடு திரும்பும்..


சூரியனுக்கு முன்னே

அதிகாலையில்

எழுந்துவிடும்..


கொய்யாப்பழங்களை

அணில் வரும் முன்னே

அவசரமாய்

கொத்தி ருசிக்கும்..


வெயில் தணிக்க

குவளை நீரில்

முங்கி எழும்

சிரகுலர்த்தும்..


தூரப்பயணம்

போய் வந்தால்

வீட்டுக்குள்ளேயே

சிரகடிக்கும்

வெளியில் போகாது..


பூஜை அறை போய்

அரிசிதேடும்..

அம்மா அதன்

பசியறிவாள்..


காலம் பல கடந்தே

விட்டது...


சிட்டுக்குருவிகளின்

சத்தம் கேட்பதில்லை..


அப்பா செய்த

பழைய பெட்டியை

அது காலி செய்தது

போல...


கொய்யாப்பழத்தை

தணியே திண்ணும்

அணில்...


சாளரங்களிள்

சூரிய ஒளி படும்போதெல்லாம்

அதன் சத்தம்

கேட்பதில்லை..


பூஜை அரிசி

கூட தீர்ந்துபோவதில்லை..


தங்கைபோல,

மாமாவின் மகள்

சோருண்ண

அடம்பிடிப்பதில்லை...


இப்போதெல்லாம்

மாமி சிட்டுக்குருவி

சத்தத்தை

செல்போனில்

போட்டுவிடுவாள்...


அதை கேட்டு

சிரித்து அவளும்

சோருண்ண...

கடைசிவரை

சிட்டுக்குருவியை

பார்த்ததே

இல்லை...

✍️கவிதை✍️:இ.கிருபா BBA, நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.  

From Sri Lanka. 

இது போன்ற தகவல் பெற

2 comments:

காதலுக்கு உதவுமா குவாண்டம் காந்த கணினிகள்?

 காதலுக்கு உதவுமா குவாண்டம் காந்த கணினிகள்? பள்ளிக்கூட காலத்தில் இரண்டு சாதாரண காந்தங்களை கையில் வைத்திருப்பது புதையல் ஆகும். ஒரு காந்தம் வை...