Tuesday, June 1, 2021

✍🏻👨‍🌾👨‍🌾இயற்கை வாழ்வியல் முறை👨‍🌾👨‍🌾 திரிகடுகு சூரணத்தின் நன்மைகள்.

✍🏻👨‍🌾👨‍🌾இயற்கை வாழ்வியல் முறை👨‍🌾👨‍🌾 திரிகடுகு  சூரணத்தின்   நன்மைகள்.

👨‍🌾👨‍🌾👨‍🌾👨‍🌾👨‍🌾

திரிகடுகு என்பது சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றின் கலவையே ஆகும். பொதுவாக சுக்கு நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும். இதனால் இதனை நிறைய  அஜீரணக் கோளாறுக்கான மருந்துகளில் முதன்மையாக சேர்க்கின்றனர், சாதாரண சளி, இருமல் ஆகியவற்றிற்கு தொன்றுதொட்டு நாம் உபயோகப்படுத்துவது  மிளகைத்தான்.

👨‍🌾👨‍🌾👨‍🌾👨‍🌾👨‍🌾

திப்பிலி இருமல் இரைப்பு தொண்டைப்புண் தொண்டைக் கட்டு இவற்றைக்குணமாக்கும் காது, மூக்கு சம்பந்தப்பட்ட கப நோய்களையும் போக்கும்.உடலில் நோய்  எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.

 👨‍🌾👨‍🌾👨‍🌾👨‍🌾👨‍🌾

திரிகடுக சூரணத்தை பயன்படுத்துவதால் பலவித நோய்களுக்கும் தீர்வாக இருக்கும். விட்டுவிட்டு வரும் முறைக்காய்ச்சலைப் போன்ற பலவித காய்ச்சல்கள் வயிற்று உப்புசம் உணவில் விருப்பமின்மை, பசியின்மை செரிமான பிரச்சனையால் வரும் நோய்கள் கழுத்தில் தோன்றும் நோய்கள் தோல் நோய்கள் இருமல் ஜலதோஷம் சர்க்கரை போன்ற நோய்களுக்கு  திரிகடுக சூரணத்தை தேனுடன் சேர்த்துத் தரப்படுகிறது.


👨‍🌾👨‍🌾👨‍🌾👨‍🌾👨‍🌾 

நுரையீரல் மற்றும் ஜீரண மண்டல பிரச்சனைகளை தீர்க்கவல்லது நெஞ்சு சளி ஜலதோஷத்தை நீக்கும் நுரையீரல் மற்றும் ஜீரண மண்டல உறுப்புகளின்  செயல்திறனை கூட்டும் இம்மண்டல பலவீனத்தை போக்கும்.

 👨‍🌾👨‍🌾👨‍🌾👨‍🌾👨‍🌾

நுரையீரலின் உயிர் சக்தியை அதிகபடுத்தும். கபம் சார்ந்த பிரச்சனைகளை போக்கும் இன உறுப்புகளின் கோளாறுகளை நீக்கும். ஆண்களின் விந்தடைப்பு என்ற பிரச்சனைக்கும் திரிகடுக சூரணத்தை பயன்படுத்துகின்றனர்.

 👨‍🌾👨‍🌾👨‍🌾👨‍🌾👨‍🌾

மேலும் உடல் எடை கூடிய நோயாளிகள்அதிக கொழுப்பு சத்துள்ள நோயாளிகள்தைராய்டு குறைவாக சுரக்கும் நோயாளிகள்உடல் வீக்கம் சார்ந்த நோயாளிகள் மற்றும் வளர் சிதை மாற்றமுள்ள நோயாளிகளில் இந்த மருந்து தக்க துணை மருந்துகளோடு நன்றாக வேலை செய்யும்.

 👨‍🌾👨‍🌾👨‍🌾👨‍🌾👨‍🌾

இப்படி அரும்பெரும் ஆற்றல் கொண்ட திரிகடுக சூரணத்தில் [ பொடி ] இரு டீஸ்பூன் அளவு எடுத்து ஒரு பாத்திரத்தில் மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் சுட வைக்க வேண்டும் இந்த திரிகடுக நீர் மூன்று டம்ளர் என்ற அளவிலிருந்து, ஒரு டம்ளர் என்ற அளவுக்கு வரும்வரை சுண்டக் காய்ச்ச வேண்டும் அதன்பின் அந்த நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து, சற்று சூடு தணிந்த உடன் சிறுகச் சிறுக பருகி வரவேண்டும். இதுவே திரிகடுக தீநீர்.

👨‍🌾👨‍🌾👨‍🌾👨‍🌾👨‍🌾

சித்த வைத்தியத்தில் சுண்டக் காய்ச்சி பருகுவது என்பது மிக சக்தி வாய்ந்த ஒரு நோய் தீர்க்கும் முறையாகும் அதன் அடிப்படையில், நாம் பருகி வரும் இந்த திரிகடுக தீநீர் உடன் வேலை செய்து ஜலதோசம் போக்கும் ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை பருகினாலே ஜலதோசம் நீங்கி உடல் நிலை சரியாகிவிடும்.

👨‍🌾👨‍🌾👨‍🌾👨‍🌾👨‍🌾

திரிகடுகத் தேநீர் மிக்க ஆற்றல் மிக்க ஒரு மருந்து ஆகும். ஜலதோஷம் வந்தபோதும் வரு முன்னரும் பருகி வரலாம் உடலின் ஜீரண உறுப்புகளையும் தூண்டி இரத்தத்தை சீராக்கி பல நன்மைகள் செய்ய வல்லது.

👨‍🌾👨‍🌾👨‍🌾👨‍🌾👨‍🌾

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

Dr. N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...