Wednesday, June 2, 2021

✍🏻🦚🦚‌இயற்கை வாழ்வில் முறை🦚🦚‌அல்சர் காரணங்களும் தீர்வுகளும்.

✍🏻🦚🦚‌இயற்கை வாழ்வில் முறை🦚🦚‌அல்சர் காரணங்களும் தீர்வுகளும்.

🦚🦚🦚🦚🦚 

நேரம் தவறி உண்பதாலும், தொடர்ந்து அதிக காரமான உணவுகளை உண்பதாலும் வயிற்றுப்புண் வரக்கூடும் மேலும் வயிற்றில் உள்ள இரைப்பை முன்  சிறுகுடல் கணையம் மற்றும் பெருங்குடல் பகுதிகளில் ஏதேனும் புண் அல்லது அழற்சி இருந்தால் வயிற்றில் எரிச்சல் ஏற்படும்.

இதுதவிர இரைப்பை அழற்சி இரைப்பை புண், முன் சிறுகுடல் புண் இரைப்பையும் உணவுக் குழலும் இணையுமிடத்தில் ஏற்படும் புண்களும் வயிற்றில்  ஏற்படும் எரிச்சலுக்கான காரணங்களாகும்.

புகை பிடித்தல் புகையிலை பயன்பாடு மது அருந்துதல் வாயுக்கோளாறு அதிகமான பதற்றம் கோபம் போன்றவற்றாலும் அல்சர் ஏற்பட வாய்ப்புள்ளது.

நாம் உண்ணும் உணவானது குடலை அடைந்ததும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் மற்றும் பெப்சின் என்ற திரவம் சுரக்கப்படுகிறது. இந்த திரவங்களின் மூலமாக செரிக்க ஆரம்பிகிறது தினமும் காலையில் இந்த திரவமானது அதிகமாக சுரக்கிறது. காலை உணவை தவிர்த்தால் சுரக்கப்பட்ட அமிலமானது செரிமானத்திற்கு தேவையான உணவு இல்லாததால் குடலை அரிக்க ஆரம்பிக்கும். அதனால் குடல் மற்றும் வயிற்றில் புண்கள் ஏற்பட ஆரம்பிக்கும்

மன அழுத்தம் ஏற்பட்டாலும் இந்த அமிலங்கள் அதிக அளவில் சுரக்கும் புளிப்பு அதிகமான உணவுகளைத் தவிர்க்க வேண்டும் மதுப் பழக்கம் மற்றும்  புகைபிடித்தல் வயிற்றிப்புண் வருவதற்கு ஒரு முக்கியமான காரணமாக உள்ளன வயிற்றில் வலி ஏற்படும் குறிப்பாக சாப்பிட்டு முடித்ததும் வலி அதிகமாகும் வயிற்றுப் புண்ணை அல்சர் என்றும் குறிபிடுகிறார்கள்.

🦚🦚🦚🦚🦚

மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தினமும் அரைமணி நேர உடற்பயிற்சியும், நன்கு நீர் குடிப்பதும் இப்பிரச்சனையைத் தவிர்க்கும்

🦚🦚🦚🦚🦚

மிக வேக வேகமாக உண்ணாதீர்கள், கேட்டால் நேரம் இல்லை என்று சொல்வீர்கள். இப்படி உணவை அடைத்து நோய் வரவழைத்துக் கொள் வதினை விட உண்ணாமல் இருப்பது கூட குறைவான தீங்கினைச் செய்யும்.

🦚🦚🦚🦚🦚

அதிகமாக தொண்டை வரை உண்ணாதீர்கள் தீவிர அஜீரணம் அசிடிடி, அல்சர் என கொண்டு வந்து விடும் எப்பொழுதும் அளவாக உண்ணுங்கள்

🦚🦚🦚🦚🦚

நெஞ்செரிச்சல் தொண்டை வரை ஆசிட் எகிறுதல் போன்றவற்றிற்குக் காரணம் அதிக மசாலா உணவு இத்துடன் தூங்கச் செல்லும் முன் அதிக கார உணவு அதிக உணவு வேகமாக உண்ணும் உணவு சிகரெட் ஆகியவை ஆகும் இவற்றினை உடனடியாக நிறுத்துங்கள்.

🦚🦚🦚🦚🦚

சதா சர்வ காலமும் நொறுக்கு தீனி உண்பதை நிறுத்தி விடுங்கள். வயிற்றுப் பிரட்டலுக்கு இஞ்சி சாறுடன் சிறிது தேன் கலந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அல்சர் — Vikaspedia

🦚🦚🦚🦚🦚

அரை ஸ்பூன் சுக்கு தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் அருந்தலாம் ஏலம், அதிமதுரம் நெல்லி வற்றல் சந்தனம் வால்மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து அதைப்போல இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து, 2 கிராம் வீதம் 3 வேளை உண்ணலாம்.

🦚🦚🦚🦚🦚

சீரகம், அதிமதுரம், தென்னம் பாளைப்பூ, சர்க்கரை சம அளவு எடுத்துப் பால்விட்டு அரைத்து சிறு எலுமிச்சை அளவு எடுத்துப் பாலில் கலந்து பருகலாம்.

🦚🦚🦚🦚🦚

கறிவேப்பிலை, சீரகம் மிளகு மஞ்சள் திப்பிலி சுக்கு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம்.

🦚🦚🦚🦚🦚

பிரண்டையின் இளந்தண்டை இலையுடன் உலர்த்திப் பொடித்து சம அளவு சுக்குத் தூள் மிளகுத் தூள் கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.

🦚🦚🦚🦚🦚

பெருஞ்சீரகம் சுக்கு மிளகு திப்பிலி சம அளவு எடுத்துப் பொரித்து 2 கிராம் எடுத்து உணவிற்குப் பின் உண்ணலாம் சில்லிக்கீரை பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றை அரைத்து சுண்டைக்காய் அளவு எடுத்துக் கருப்பட்டி சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து உண்ணலாம்.

🦚🦚🦚🦚🦚

குளிர்ந்த பால் குடிப்பது வலியைக் குறைக்கும் வயிற்றெரிவிட்டுச்சலை போக்கும் உ  சேர்த்துக் கொள்ளவும் நோயாளிக்கு நெய் ஜீரணமாகாவிட்டால் வெந்நீருடன் சேர்த்து கொடுக்கவும் 2-3 வாழைப்பழங்களை பாலுடன் கொடுத்தால் நல்லது.

🦚🦚🦚🦚🦚 

வாழைப்பழம் அதிக அமிலத்தை சரிப்படுத்தும் மஞ்சள் வாழைப்பழத்தை விட பச்சை வாழைப்பழம் சிறந்தது நெல்லிக்காய் சாறை சர்க்கரையுடன் சேர்த்து குடித்தால் பலனளிக்கும்.

வில்வ இலைகள் பழங்களை சேர்த்து கொண்டால் வயிற்றுப்புண்கள் குணமாகும்

🦚🦚🦚🦚🦚 

பாதாம் பால் (தோலுரிக்கப்பட்ட பாதாம் பருப்புகளால் செய்வது) அல்சருக்கு நல்லது உடைத்த அரிசியை ஒரு பாகத்திற்கு 14 பாகம் தண்ணீர் சேர்த்து கஞ்சி தயாரிக்கவும் இது அல்சருக்கு நல்லது பருப்பு, அரிசி தண்ணீர் சேர்த்து பொங்கல் போல் தயாரித்து உட்கொள்ளலாம். மாதுளம் பழச்சாறு அல்சருக்கு நல்லது திரிபாலா சூரணம் (1 தேக்கரண்டி) நெய் ஒரு தேக்கரண்டி மற்றும் தேன் 1/2 தேக்கரண்டி கலந்து எடுத்துக் கொண்டால் அல்சர் குணமாகும்.

🦚🦚🦚🦚🦚

மாங்கொட்டைப் பருப்பை வெயிலில் காய வைத்து போடி செய்து கொள்ள வேண்டும். காலையும் மாலையும் ஒரு சிட்டிகை மாங்கொட்டை பொடியை எடுத்துக்  கொண்டு தேனில் குழைத்து சாப்பிட்டால் வயிற்றுப்புண் ஆறும்.

 🦚🦚🦚🦚🦚

மாதுளை பழத்தோலை வெயிலில் காய வைத்து போடி செய்து கொள்ள வேண்டும். இரவில் உறங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை மாதுளைப் பொடியை எடுத்து  வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் வயிற்று புண் ஆறும்.

🦚🦚🦚🦚🦚

வயிற்றுப்புண் ஆற பீட்ருட் கிழங்கை அரைத்து சாறு எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் வயிற்று புண் விரைவில் குணமாகும்.

🦚🦚🦚🦚🦚

சேர்க்க வேண்டியவை 

கோஸ் கேரட், வெண்பூசணி, சுரைக்காய், புடலங்காய், முள்ளங்கி, தர்பூசணி, பப்பாளி, ஆப்பிள், நாவல், மாதுளம்பழம், வாழைப்பழம், தயிர், மோர், இள நுங்கு.

🦚🦚🦚🦚🦚

தவிர்க்க வேண்டியவை 

அதிகக் பச்சை மிளகாய் காரம், எண்ணையில் அதிகம் பொரித்த உணவுகள், அசைவ உணவுகள், புளிப்பு சுவை உள்ள உணவுகள், மதுபானங்கள் சிகரெட்.

🦚🦚🦚🦚🦚

கடைப்பிடிக்க வேண்டியவை 

காலை உணவை 8 மணி முதல் 9 மணிக்குள் எடுத்துக்கொள்ளவேண்டும் இரவு உணவை 7 மணி முதல் 9 மணிக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும். 

உரிய நேரத்தில் உணவை உண்ண வேண்டும்.

 உண்ணும் போது கோபம் தாபம் வருத்தங்களை  தவிர்த்தல் அவசியம்

🦚🦚🦚🦚🦚

சரியான நேரத்துக்குத் தூக்கம் அவசியம்.

🦚🦚🦚🦚🦚

கட்டுரை ஹரிஹரன்

🦚🦚🦚🦚🦚

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை. நாட்டின் சொந்த விண்வெளி மையம் அமைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக நுண் புவி ஈர்ப்ப...