Thursday, June 24, 2021

ரகசியமானது காதல்...கவிதை✍️இ.கிருபா BBA-NMC.

 ரகசியமானது காதல்...கவிதை✍️இ.கிருபா BBA-NMC.

 ரகசியமானது காதல்...

இரவு அதிகாலை

மடியில் விழவே..

தெருவின்

எறும்புகளுக்கெல்லாம்

பசிபோக்கும்-உன்

புள்ளிக்கோலம்..


போகும் வரும்

போதெல்லாம்-உன்

வீட்டுவாசலில்

சத்தமிடும்-என்

மிதிவண்டி ஒலி..


நாயர் கடைவாசல்,

படிக்கத்தெரியா

பத்திரிக்கையை-உனை

பார்ப்பதற்காய்..

படிப்பதுபோல..

அடிக்கடி உன் வீட்டில்

தீர்ந்துபோன

காப்பி தூள்..


காய்கறி கூடையோடு

கைவிரல் பிடித்த-உன்

தம்பியுடன்..

வீசிப்போன

ஓரப்பார்வைகள்..


உன்

திண்ணை வகுப்பில்-நம்

காதலுக்காக

சேர்த்துவிட்ட

என் தம்பியின்

கண்ணத்தின் முத்தங்கள்..


திருவிழா நிதிசேர்க்க-உன்

வீடு வருகையில் மட்டும்

வருடம் ஒருமுறை வரும்

தாகம்...


உன் வீடு கடக்கையில்

கொள்ளைப்புற

யன்னலில்..

சத்தமிட்டு சமிக்ஞைசெய்யும்

கண்ணாடி

வளையல்கள்...


ஏகாதசி திருவிழா,

அடிவாரம் பெருமாள் கோவிலில்,

மனதினுள்ளே..

நமக்காய் நாம் செய்த

வேண்டுதல்...


அர்ச்சனையில்

கிடைத்த துளசியில்

வாசம் இன்னும் நம்

மனதில்...

ஊருக்கே தெரியாமல்

ரகசியமான காதலாய்...

காதலர்களாய்...

சூரிய சந்திரராய்..

நீயும் நானும்...

                              ✍️கவிதை✍️:இ.கிருபா BBA, நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.  

From Sri Lanka. 

4 comments:

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...