Thursday, June 3, 2021

இன்ட்டெல் (Intel) என்னும் கணினிச் சில்லுகள் (Computer Chips (CPU)) செய்யும் நிறுவனத்தை தொடக்கிய ராபர்ட் நாய்ஸ் நினைவு தினம் இன்று (ஜூன் 3, 1990).

இன்ட்டெல் (Intel) என்னும் கணினிச் சில்லுகள் (Computer Chips (CPU)) செய்யும் நிறுவனத்தை தொடக்கிய ராபர்ட் நாய்ஸ் நினைவு தினம் இன்று (ஜூன் 3, 1990).

 

ராபர்ட் நாய்ஸ் (Robert Noyce)  டிசம்பர் 12, 1927ல் பர்லிங்டன்அயோவாவில் பிறந்தார். அயோவாகிரினெல்லில்  உயர்நிலைப் பள்ளியில் பயின்றபோது​​கணிதம் மற்றும் விஞ்ஞானத்தில் ஆர்வமாக பயின்றார். 1945ல் கிரின்னல் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். 1949ல் இயற்பியல் மற்றும் கணிதத்தில் பி.ஏ. உடன் பி.ஏ. பீட்டா கப்பா பட்டம் பெற்றார். பிறகு 1953ல் எம்ஐடியிலிருந்து இயற்பியலில் தனது முனைவர் பட்டத்தை பெற்றார். 1947 ஆம் ஆண்டு பெல் ஆய்வகங்கள் உருவாக்கபட்டது. மேலும் டிரான்சிஸ்டர் உருவாக்க கல்லூரி இயற்பியல் வகுப்பில் ஆரம்ப காலத்தில் இருந்து  உருவாக்க நினைத்தார். 1956ல்ஃபில்வோ கார்ப்பரேஷனுக்காக வேலை செய்யும் போது​​நாய்ஸ் வில்லியம் ஷாக்லியை சந்தித்தார்வில்லியம் ஷாக்லி டிரான்சிஸ்டரின் நோபல் பரிசு பெற்ற கண்டுபிடிப்பாளர்களில் ஒருவர்.  ஷாக்லியை செமிகண்டக்டர் ஆய்வக ஆராய்ச்சியாளர்களை நியமித்தார். அவர் கலிபோர்னியாவில் உள்ள பாலோ ஆல்டோவில்அதிவேக டிரான்சிஸ்டர்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தார். 

1968 ஆம் ஆண்டில்நாய்ஸ் மற்றும் மூர் ஆகியோர் தங்கள் சொந்த நிறுவனத்தைத் தொடங்க ஃபேரைசில்ட் செமிகண்டக்டர் சென்றனர். சீக்கிரத்திலேயே அவர்கள் மற்றொரு ஃபேர்சில்ட் சக ஊழியரான ஆண்ட்ரூ க்ரோவ் உடன் இணைந்துஇன்டெல் கார்ப்பரேஷனை அமைத்தனர். 1971ல்இன்டெல் முதல் நுண்செயலியை அறிமுகப்படுத்தியது.  இது ஒரு சிலிக்கான சிப் இணைப்பில் தகவல் சேகரிப்பு மற்றும் தகவல் செயலாக்கத்திற்கான சுற்றமைப்புடன் இணைந்தது. இன்டெல் விரைவில் நுண்செயலி சில்லுகளின் முன்னணி தயாரிப்பாளராக ஆனது. ஜாக் கில்பியுடைய புத்தாக்கம்புத்தியற்றல் இவருடையதைக் காட்டிலும் சுமார் மாதம் முந்தியது. ஆனால்நாய்ஸ் அவர்களின் முறை ஒரே அடிமனையில் தொகுசுற்றுக்களைச் செய்வதில் சிறந்ததுஉற்பத்தி செய்யவும் எளிதானது. இன்றளவும் பயன்படும் அடிப்படையானதும் கூட.

 Launch Logo Animation Concept Made For Intel by Igor Pavlinski #Design  Popular #Dribbble #shots | Intel, Logos, Semiconductor manufacturing

Intel Core i5 by M. Ali Öztürk on Dribbble

இன்டெல் மதர்போர்டு சில்லுத்தொகுப்புகள்நெட்வொர்க் இடைமுக கட்டுப்படுத்திகள் மற்றும் ஒருங்கிணைந்த மின்சுற்றுகள்ப்ளாஷ் நினைவகம்கிராபிக் சில்லுகள்உட்பொதிக்கப்பட்ட செயலிகள் மற்றும்தகவல்தொடர்பு மற்றும் கணினி தொடர்பான பிற சாதனங்களையும் உற்பத்தி செய்கின்றது. குறைக்கடத்தி முன்னோடிகளான ராபர்ட் நோய்ஸ் மற்றும் கோர்டன் மூரே ஆகியோரால் நிறுவப்பட்டது. ஆண்ட்ரூ க்ரூவ் அவர்களின் செயல்பாட்டுத் தலைமை மற்றும் மேற்பார்வையுடன் பரவலாக இணைந்துள்ளது. இன்டெல் ஆனது முன்முனை உற்பத்தித் திறனுடன் மேம்பட்ட சில்லு வடிவமைப்புத் திறனை இணைக்கின்றது. இது அடிப்படையில் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கு முதன்மையாகப் பெயர்பெற்றது. 1990 ஆம் ஆண்டுகளின் இன்டெல்லின் "இன்டெல் இன்சைடு" விளம்பரப் பிரச்சாரம் அதையும் அதன் பென்டியம் செயலியையும் மிகவும் பிரபலமாக்கியது.

 Intel Pentium Inside GIF - Intel PentiumInside Cpu - Discover & Share GIFs

1980களில்இன்டெல் உலகில் சிறந்த பத்து குறைக்கடத்திகள் விற்பனையாளர்களில் ஒன்றாக இருந்தது. 1991ல்இன்டெல் அதன் வருமானத்தின் மூலமாக மிகப்பெரிய சில்லு உற்பத்தியாளரானது. அது எப்போதும் பெற்றிடாத இடத்தைத் தக்கவைத்தது. AMD, சேம்சங்டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ்தோஷிபா மற்றும் STமைக்ரோஎலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்டவை பிற தலைசிறந்த குறைக்கடத்தி நிறுவனங்கள் ஆகும். PC சில்லுத் தொகுப்புகளில் வியா டெக்னாலஜிஸ்சிஸ் மற்றும் என்விடியா உள்ளிட்டவை போட்டி நிறுவனங்கள் ஆகும். ப்ரீஸ்கேல்இன்பினோன்பிராட்காம்மார்வெல் டெக்னாலஜி குரூப் மற்றும் AMCC உள்ளிட்டவை நெட்வொர்க் துறையிலும்மற்றும் ஸ்பேன்சியன்சேம்சங்க்யூமோண்டாதோஷிபா, STமைக்ரோஎலெக்ட்ரானிக்ஸ் மற்றும் ஹைனிக்ஸ் உள்ளிட்டவை. ப்ளாஷ் நினைவகத் துறையிலும் போட்டி நிறுவனங்களாக உள்ளன. 

ராபர்ட் நாய்ஸ் ஃபாரடே பதக்கம்(1979), ஹரோல்ட் pender விருது(1980), ஜான் ஃபிரிட்ஸ் பதக்கம்-(1989) போன்ற விருதுகளை பெற்றார். இன்ட்டெல் (Intel) என்னும் கணினிச் சில்லுகள் செய்யும் நிறுவனத்தை தொடக்கிய ராபர்ட் நாய்ஸ் ஜூன் 03, 1990ல்  தனது 62வது அகவையில் ஆஸ்டின்டெக்சசில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

Source By: Wikipedia

தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டி,திருச்சி.

இது போன்ற தகவல் பெற


இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

காதலுக்கு உதவுமா குவாண்டம் காந்த கணினிகள்?

 காதலுக்கு உதவுமா குவாண்டம் காந்த கணினிகள்? பள்ளிக்கூட காலத்தில் இரண்டு சாதாரண காந்தங்களை கையில் வைத்திருப்பது புதையல் ஆகும். ஒரு காந்தம் வை...