Thursday, June 3, 2021

ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் | TET Certificate.

ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் | TET Certificate.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழின் செல்லுபடித் தன்மையை 7 ஆண்டுகளிலிருந்து ஆயுள்காலம் முழுவதும் நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

2011-ஆம் ஆண்டு முதல் இது அமலுக்கு வரும். 7 ஆண்டுகாலம் ஏற்கனவே நிறைவடைந்துள்ள விண்ணப்பதாரர்களின் சான்றிதழை மறு மதிப்பீடு செய்வது/ புதிய சான்றிதழ்களை வழங்குவது போன்ற தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட மாநிலயூனியன் பிரதேச அரசுகள் மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

கற்பிக்கும் துறையில் ஈடுபட ஆர்வமாக உள்ள விண்ணப்பதாரர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் நேர்மறை முயற்சியாக இது அமையும் என்று பொக்ரியால் தெரிவித்தார்.

பள்ளிகளில் ஆசிரியராகப் பணிபுரிவதற்குத் தேவையான அத்தியாவசிய தகுதிகளுள் ஆசிரியர் தகுதித்தேர்வும் ஒன்று. ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில்கடந்த 2011-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிட்ட வழிகாட்டுதல்களின்படிஆசிரியர் தகுதித் தேர்வு மாநில அரசுகளால் நடத்தப்பட வேண்டும் என்றும்இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறும் நாள் முதல் 7 ஆண்டுகளுக்கு இதற்கான சான்றிதழ் செல்லுபடியாகும் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

நெருப்பு வளைய சூரிய கிரகணம் Ring of Fire Solar Eclipse.

நெருப்பு வளைய சூரிய கிரகணம் Ring of Fire Solar Eclipse புதன்கிழமை அக்டோபர் 2- ம் தேதி   வானத்தில் தோன்றவுள்ளது . பூமிக்கும் சூரிய...