Friday, July 30, 2021

கவிதை✍️அவள் எங்கே..✍️இ.கிருபா BBA-NMC.

கவிதை✍️அவள் எங்கே..✍️இ.கிருபா BBA-NMC.

அவள் எங்கே..


அட்டைப்பெட்டியில்

வைக்கோல் நிரப்பி

எனக்கு வீடு செய்து

சுவரோரம் இடம் தந்தவள்

எங்கே..


திண்ணை வகுப்பும் காலியாய்

சுவற்றில் சாய்ந்த பிரம்பு

மட்டும்..

அவள் இல்லை..


தெருமுனை குழாயில்

 நிரம்பி வழிந்த குடம்...

இரு வாய்கள் மூடும்வரை

காத்திருக்க...

அமைதியான அவள் மட்டும்

அந்த வரிசையிலும் இல்லை..


வீடு போய் பார்த்து

விடலாம்..



பூச்செடிகளிள்

தண்ணீர் மணம் இல்லை..

என்னவாயிற்று

அவளுக்கு...


அவள் இல்லாத தைரியம்

அணிலுக்கு..

கொய்யாப்பழங்களை

அவசரமாய் தின்கிறது..


வெளியே செருப்பு

அப்பா உள்ளே இருக்கிறார்...


போகலாம்..

உள்ளே..


கோடை எப்எம்

பாடல்களோடு மதிய

வெயில் களைப்பில்

உறங்கும் அம்மா..


ஆனால் அந்த

 கொழுசு சத்தம்

எங்கே..


அவள் அறையினுள்

போகலாம்..

இதோ..

என்னவள்..

இவளா அவள்..

முகம் வாடியிருக்கிறாள்..


சுகவீனம்..

கொண்டாளோ..

புன்னகை புதைந்து உதடுகள்

வறண்ட வரிக்குதிரை

தோள்களை போல...


சூரியன் எங்கே

ஒட்டிக்கொண்டதோ..

புருவங்களின் இடைவெளி

காலியாயிருந்தது..


ஒரு துண்டுகொண்டு..

நாசிவடிந்த நயாகராவை

சேமித்து வைத்தாள்..

இவ்வளவு ஜீரமோ..

என் பசிபோக்கும்

இவளுக்கு..


அவளை சுற்றி தகித்த

அனல்..

நெருங்கவிடவில்லை

எனை..


எப்படி கேட்பேன்

என்னவென..

சத்தம்கேட்டு அம்மா விழித்தாள்..

அரிசி திருடன் என விரட்டி விடுவார்..


நேற்று மழையில்

அவள் நனைகையில்

எனக்கு தெரியும்..

நாளை அவள் நாசி

அவரோகண சங்கீதம்

பாடும் என...


புறப்படுகிறேன்..

வெளியே மரத்தில்

இருக்ககும் பழங்களிள்

இன்று பசியாறலாம்..


நாளை அவள் 

நலம்பெற்றதும் அரிசி 

தூவுவாள்


குணம் கொண்டதும்...

கொழுசுசத்தம் கேட்க்ககும்

அப்போது

வரலாம்...

மெளனமாய் பறந்துபோனது

சிட்டுக்குருவி..

வெளியில் 

அட்டைப்பெட்டியில் வைக்கோல்

நிரப்பி அவள் செய்த

வீட்டுக்கு....

                                  ✍️கவிதை✍️:இ.கிருபா BBA, நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.  

From Sri Lanka. 

No comments:

Post a Comment

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை. நாட்டின் சொந்த விண்வெளி மையம் அமைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக நுண் புவி ஈர்ப்ப...