Friday, July 16, 2021

“ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதி” திங்கட்கிழமை முதல் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு.

“ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதி” திங்கட்கிழமை முதல் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு.

தொழிற்பயிற்சி நிலையங்கள், தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்கள் 50% மாணவர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளிகளில் நிர்வாக பணிகள் தொய்வின்றி நடக்க ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அமலில் உள்ள தளர்வுகள், கட்டுப்பாடுகளில் வேறுமாற்றங்கள் ஏதுமில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு வருகிற திங்கட்கிழமை காலை 6 மணிக்கு நிறைவடையும் நிலையில் புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

திரையரங்குகள், சர்வதேச விமானப் போக்குவரத்து மற்றும் புதுச்சேரி நீங்கலாக மற்ற மாநிலங்களுக்கான போக்குவரத்து தடை நீடிக்கிறது. சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்களுக்கு தடைநீடிக்கிறது. மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள் செயல்பட தடை நீடிக்கிறது. அதேபோல் திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளுக்கான கட்டுப்பாடுகளில் எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை. குறிப்பாக, பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கான தடை நீடிக்கிறது. 

Hon'ble CM Press Release - Lockdown Extension - DAte 16.07.2021<<--- Link




இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை. நாட்டின் சொந்த விண்வெளி மையம் அமைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக நுண் புவி ஈர்ப்ப...