Friday, July 2, 2021

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு.

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு.

  • ஜூலை 12 ஆம் தேதி காலை 6 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு.
  • 5ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகள் அறிவிப்பு
  • அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி
  • மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ், இ-பதிவு முறை தேவையில்லை - தமிழக அரசு
  • தற்போது அமலில் உள்ள ஊரடங்கு 5 ஆம் தெதி வரை உள்ள நிலையில், இது ஜூலை 12 வரை கூடுதல் தளர்வுகளுடன் நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் தெரிவித்தார். அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 3 விதமான தளர்வுகள் நீக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.

நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில்,

· தமிழகம் முழுவதும் கடைகள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.உணவகங்களில் 50% வாடிக்கையளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.

· தேநீர் கடைகளிலும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து தேநீர் அருந்த அனுமதி உண்டு.

·       காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை டாஸ்மாக் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

·   மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ் மற்றும் இ-பதிவு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

·  எற்கனவே இரவு 7 மணி வரைஅ இயங்கிய கடைகள் அனைத்தும் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

· அனைத்து வழிபாட்டுத் தலங்களும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

· மாவட்டங்களுக்கு இடையேயும் மாவட்டங்களுக்குள்ளும் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி

· குளிர் சாதன வசதியின்றி 50% இருக்கைகள்ல் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி

·  உள்துறையால் அனுமதிக்கப்பட்டுள்ள தடங்களைத் தவிர மற்ற சர்வதேச விமான போக்குவரத்துக்குத் தடை

· திரையரங்குகள், மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள் அரசியல் கூட்டங்களுக்கு தடை நீடிக்கிறது.


                                           


இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...