Friday, July 2, 2021

✍️கவிதை✍️🎂பிறந்தநாள் வாழ்த்து மேதகு. மயில்சாமி அண்ணாதுரை ஐயா🎂

 ✍️கவிதை✍️

  🎂பிறந்தநாள் வாழ்த்து மேதகு. மயில்சாமி அண்ணாதுரை ஐயா🎂

சூலை மாத காலை தென்றல் வீச... !

ஜோதியாய் தந்தையின் முகத்தில் ஒளி வீச....! 

மதிபோல் அழகாய்.... 

      நீங்களோ... !

மங்கையான அன்னைக்கு உலகாய்.... 

     பிறந்தீரோ...! 


கோதாவடி கிராமத்தில் பிறந்து... 

"கோ" ஆக விஞ்ஞானத்தில் சிறந்து... 


இஸ்ரோவில் உங்கள் பொன்பாதங்கள் நிமிர... 

இந்தியாவின் புகழ் உலகெல்லாம் மலர... 

என்னே...!!! சாதனைகள். 

எண்ணிலங்குமோ...!!! உம் விருதுகள்... 


அன்பினில் அன்னை தெரசாவாக திகழ்ந்தீர்கள்.... 

அனைவர் மனதிலும் அழகாய் இடம் படர்ந்தீர்கள்... 


விண்மீன் போன்று உங்கள் புகழ்.... 

பார்ப்போர் வியக்க மென்மேலும் உயர....

இன்று போல் மகிழ்ச்சி மத்தாப்பு முகத்தில் என்றென்றும் திகழ...

வாழ்த்த வயதில்லை...! 

வணங்குகிறேன்...!!!  🙏🙏🙏


இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🎂🎂🎂

மேதகு. மயில்சாமி அண்ணாதுரை ஐயா

✍️கவிதை ✍️: இரஞ்சிதா தியாகராஜன், இயற்பியல், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

ஐயா அனுப்பிய செய்தி 🙏🙏


நன்றி, நன்றி , நன்றி,
உங்களின் வாழ்த்துகளால் இன்று எனது வயதில் 63 வருடங்கள் குறைந்துவிட்டன
Today I am feeling younger by 63 years, thanks to all your wishes

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்?

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்? ஜனவரி 21 ஆம் தேதி, வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, ...