செப்.1ல் பள்ளி, கல்லூரி திறப்பு - முதல்வர் இன்று ஆலோசனை.
செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகள் நடைமுறையில் உள்ள நிலையில், கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்து வருகிறது. இதன் காரணமாக, செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. இந்த சூழலில், மருத்துவத் துறை, வருவாய்த் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் செய்யப்பட்டுள்ள கொரோனா தடுப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டறிவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்டை மாநிலமான கேரளாவில் தளர்வுகள் காரணமாக கொரோனா தொற்று வேகமாக அதிகரித்துள்ள சூழலில், தமிழகத்தில் எடுக்கப்பட வேண்டிய கூடுதல் நடவடிக்கைகள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.
இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp குழுவில் இணையவும்.
நன்றி.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
மேலும் படிக்க
🛑👌✍️ அரசு தேர்வுகள் பற்றிய முழு விபரங்கள் (TNPSC, TNUSRB, TRB, RRB, TET, SSC).
🛑🔊கொரோனா தடுப்பூசி சான்றிதழ் ஆன்லைன் பதிவிறக்கம் செய்வது எப்படி?
🛑✍️நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கிற வாழ்க்கை ரகசியம்- காணொளி.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment