Monday, August 30, 2021

பாரா ஒலிம்பிக்கில் இந்தியா முதல் தங்கம் வென்று அபார சாதனை.

பாரா ஒலிம்பிக்கில் இந்தியா முதல் தங்கம் வென்று  அபார சாதனை.

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்கத்தை வென்றார் அவனி லெகாரா.


ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டிகள் நடைபெற்றது. இதில் நடைபெற்ற தகுதிச் சுற்றில் 621.7 புள்ளிகள் பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் அவனி லெகாரா. அதைத்தொடர்ந்து இறுதிப்போட்டியில் 249.6 புள்ளிகள் பெற்று உலக சாதனையை சமன் செய்தார். இதன் மூலம் இந்தியாவுக்கு தங்கத்தை பெற்றுத் தந்துள்ளார் அவனி. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த 19 வயதான அவனி லெகாரா தங்கத்தை வென்றுள்ளார். பாராலிம்பிக்கில் ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 4 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.




இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...