Thursday, August 26, 2021

ஜாம்ஷெட்ஜி கனவு கண்ட நீர்மின் திட்டம், உருக்காலைத் திட்டம் நிறைவேற்றிய இந்தியத் தொழிலதிபர், சர் தோரப்ஜி டாடா பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 27, 1859).

ஜாம்ஷெட்ஜி கனவு கண்ட நீர்மின் திட்டம்உருக்காலைத் திட்டம் நிறைவேற்றிய இந்தியத் தொழிலதிபர்சர் தோரப்ஜி டாடா பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 27, 1859).

                                 

சர் தோரப்ஜி டாடா (Sir Dorabji Tata) ஆகஸ்ட் 27, 1859ல் மும்பையில் பிறந்தார்சொராட்டிரிய நெறியைச் சேர்ந்த பார்சி இனத்தவரான ஜாம்ஷெட்ஜி டாடாவின் மூத்த மகன் ஆவார். இங்கிலாந்தின் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த சாபுர்சி சக்லத்வாலா இவரது நெருங்கிய உறவினராவார். டாட்டா 1875 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்குச் செல்வதற்கு முன்னர் பம்பாயிலுள்ள ஒரு தனியார் உயர்நிலைப் பள்ளியில் தனது துவக்கக் கல்வியைப் பயின்றுதனிப் பயிற்சியிலும் பயின்றார். அவர் 1877 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ்கோன்வில்லையும் காய்ஸ் கல்லூரியில் சேர்ந்தார்இரண்டு ஆண்டுகள் கழித்து 1879 ஆம் ஆண்டில் பம்பாய் திரும்பினர். பின்னர் பம்பாய் செயின்ட் சேவியர் கல்லூரியில் படிப்பைத் தொடர்ந்து, 1882ல் பட்டம் பெற்றார். 

படிப்பை முடித்தவுடன்இரண்டு ஆண்டுகள் பம்பாய் கெஜட்டெட் பத்திரிகையில் தோரப்ஜி பணியாற்றினார். 1884 இல்இவர் தன் தந்தையின் நிறுவனத்தில் பருத்தி வணிக பிரிவில் இணைந்தார். இவரை முதலில் பிரெஞ்சு காலனியான பாண்டிச்சேரியில் ஜவுளி ஆலையை நிறுவ ஜாம்ஷெட்ஜி அனுப்பினார். அடுத்துநாக்பூரில் எம்ப்ரஸ் ஆலை நிர்வாகப் பொறுப்பை ஏற்றார். தோரப்ஜியின் தந்தை ஜம்ஷெத்ஜிவணிக நிமித்தமாக மைசூர் இராச்சியத்துக்கு வந்தார். அங்கு அந்த இராச்சியத்தின் கல்வித் துறைக்கான முதல் இந்திய இன்ஸ்பெக்டர்-ஜெனரலான டாக்டர் ஹார்முஸ்ஜி பாபா என்ற ஒரு பார்சி இனத்தவரைச் சந்தித்தார். அங்கு அவரது வீட்டிற்குச் சென்றபோதுபாபாவின் ஒரே மகள் மெஹ்பீர்ரை பார்த்தார். 

பம்பாய்க்கு திரும்பிய ஜம்ஷேத்ஜிபாபா குடும்பத்தினரின் அழைப்பின் பேரில் தன் மகன் தோரப்ஜியை மைசூர் இராச்சியத்துக்கு அனுப்பினார். அவ்வாரே அங்கு சென்று அவர்களைச் சந்தித்த தோரப்ஜி, 1897 ஆம் ஆண்டில் மெஹ்பீரை மணந்தார். இந்த இணையருக்கு குழந்தைகள் இல்லை. மெஹ்பீரின் சகோதரர் ஜஹாங்கீர் பாபா ஒரு புகழ்பெற்ற வழக்கறிஞர் ஆவார். அவர் விஞ்ஞானி ஓமி பாபாவின் தந்தை ஆவார்இதன்படி ஓமி பாபாவின் மாமா தோரப்ஜி ஆவார். பாபாவின் ஆராய்ச்சிக்கான நிதியுதவியை டாடா குழுமம் மேற்கொண்டதற்கு இந்த இந்த குடும்ப உறவே காரணமாக ஆனது. மேலும் டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகம் உள்ளிட்ட ஆராய்ச்சி நிறுவனங்கள் பாபாவால் நிறுவப்பட்டன.

 

ஜாம்ஷெட்ஜி கனவு கண்ட நீர்மின் திட்டம்உருக்காலைத் திட்டம் இரண்டையும் இவர்தான் நிறைவேற்றினார். டாட்டா ஸ்டீல் 1907 ஆம் ஆண்டிலும்டாட்டா பவர் 1911 ஆம் ஆண்டிலும் நிறுவப்பட்டன. இவை இன்றைய டாடா குழுமத்தின் மையமாக உள்ளன. தோரப்ஜி விளையாட்டுத் துறையில் மிகவும் ஆர்வம் உள்ளவராக இருந்தார். மேலும் இந்திய ஒலிம்பிக் இயக்கத்தில் ஒரு முன்னோடியாகவும் இருந்தார். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக 1924 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கிற்காக இந்திய வீரர்களுக்கு நிதியுதவி அளித்தார். இந்தியாவின் பிற பெரு வணிகர்களைப் போலவே டாடா குடும்பத்தாரும் இந்திய தேசியவாதிகளாக இருந்தனர். ஆனால் காங்கிரசை நம்பவில்லைஏனெனில் அவர்கள் சோசலிஸ்டுகள்மற்றும் தொழிற்சங்கங்களுக்கு ஆதரவாகவும் அரசுக்கு தீவிர விரோதமானதாக இருந்தனர். 

மெஹர்பாய் டாடா 1931ல் தன் 72 வயதில் இரத்தப் புற்று நோயால் இறந்தார். இவரது மரணத்துக்குப் பிறகு இரத்தப் புற்றுநோய்க்கான ஆராய்ச்சி மையம்புற்றுநோய் மருத்துவமனை இரண்டையும் தோரப்ஜி நிறுவினார். 1932 மார்ச் 11, 1932ல்மெஹ்பேபாயி மரணமடைந்த ஓர் ஆண்டு கழித்துகல்விஆராய்ச்சிபேரழிவு நிவாரணம் மற்றும் பிற நலன்புரி நோக்கங்களுக்காகஇடம்தேசியம் சமயம் போன்ற எந்த பாகுபாடும் காட்டாமல் பயன்படத்தக்கவாறு ஒரு அறக்கட்டளை நிதியை தோரப்ஜி நிறுவினார். இன்று இந்த அறக்கட்டளை சர் தோரப்ஜி டாடா அறக்கட்டளை என அழைக்கப்படுகிறது. மேலும் தோரப்ஜி இந்தியாவின் முதன்மையான அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனமான பெங்களூரின் இந்திய அறிவியல் கழகத்தை நிறுவ நிதியளித்தார்.

 

இந்தியத் தொழிலதிபர் சர் தோரப்ஜி டாடா ஜூன் 31932ல் தனது 73வது அகவையில் ஜேர்மனியில் உள்ள பாட் கிசிசென் நகரில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். பின்னர் இங்கிலாந்தின் வாக்கிங்புரூக்வுட் கல்லறையில் அவரது மனைவி மெஹ்ர்பாய் அருகில் புதைக்கப்பட்டார். டாட்டா குழும வளர்சி வரலாற்றில் ஒரு முக்கிய நபர் ஆவார். இவர் பிரித்தானிய இந்தியாவின் தொழில் துறைக்கு ஆற்றிய பணிக்காக 1910ல் நைட் பேச்சுலர் விருது அளித்து பாராட்டப்பட்டார்.

Source By: Wikipedia

தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...