வாரத்தில் 6 நாட்கள்-கல்லூரி திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.
ஆசிரியர்கள், மாணவர்கள், அலுவலக பணியாளர்கள் அனைவரும் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் விவரங்களை கல்லூரி நிர்வாகங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
கொரோனா சிகிச்சை மையமாக உள்ள கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும். தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு சுகாதாரத்துறையின் உதவி உடன் கல்லூரிகளிலேயே தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளி மாணவர்கள் யாரும் கல்லூரிக்கு வர வேண்டாம்.
அனைத்து கல்லூரிகளும் தங்கள் கல்லூரிகளில் உள்ள வகுப்பறைகள், நாற்காலிகள், விளையாட்டு கருவிகள், ஆய்வகங்கள், போன்றவற்றை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். கல்லூரியில் பயன்படுத்தப்படாத பிளாஸ்டிக், டயர்கள், போன்றவற்றை அப்புறப்படுத்த வேண்டும். சுத்தமான குடிநீர் வசதியை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும். விஷ ஜந்துக்கள் உள்ளே புகாத வண்ணம் அடைப்புகளையும் சுத்தம் செய்ய வேண்டும். சுத்தமான குடிநீர் வசதியை மாணவர்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டும். கல்லூரி தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக கல்லூரியை சுத்தப்படுத்த வேண்டும்.
இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp குழுவில் இணையவும்.
நன்றி.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
மேலும் படிக்க
🛑🤔 நாம் பிறந்ததில் இருந்து நம் உடலில் வளராத உறுப்பு எது?
🛑✍️ TNPSC-ஆன்லைனில் தமிழக அரசு இலவச பயிற்சி.
🛑✍️நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கிற வாழ்க்கை ரகசியம்- காணொளி.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment