Monday, August 30, 2021

✍🏻♦️♦️இயற்கை வாழ்வியல் முறை♦️♦️செண்பகப்பூ பயன்கள்.

✍🏻♦️♦️இயற்கை வாழ்வியல் முறை♦️♦️செண்பகப்பூ பயன்கள்.

♦️♦️♦️♦️♦️

நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கையை மட்டுமே நம்பி அந்த இயற்கையுடன் வாழ்ந்தார்கள், அதனால் தான் அவர்கள் அனைவருமே 100 வயது வரை நோய் இன்றி வாழ்ந்தனர்.

ஆனால் அறிவியல் உலகம் என்ற பெயரில் இன்றோ, நாம் அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறோம். இவ்வாறு இயற்கையை மறந்து செயற்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த தலைமுறையை விட, வருங்கால தலைமுறை தான் கேள்விக்குறியாகிறது.

அதனால் செயற்கையில் இருந்து இயற்கையில் மாறி நம் வருங்கால சமுதாயத்தை காப்பாற்ற முயற்சி செய்வோம். இந்த செய்தி தொகுப்பில் இயற்கையாக கிடைக்கும் செண்பகப் பூவில் உள்ள மருத்துவ குணம் பற்றி அறிவோம்.

♦️♦️♦️♦️♦️

செண்பகப் பூவை நன்றாக நிழலில் உலர்த்தி, பின்பு அதனை பொடி செய்து அதனுடன் தேன் கலந்து தினமும் காலை சாப்பிட்டு வந்தால் உடல் பலம் அதிகரிக்கும்.

♦️♦️♦️♦️♦️

நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் செண்பகப் பூவை கஷாயம் செய்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து குடித்து வந்தால் விரைவில் நரம்பு தளர்ச்சி குணமாகும். மேலும் செண்பகப்பூ கஷாயம் குடித்து வந்தால் பித்த நீர் சுரப்பு குறையும்.

♦️♦️♦️♦️♦️

வலி, வீக்கம், கை கால் எரிச்சல், உடல் எரிச்சல், முழங்கால் வலி, மூட்டு வலி மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகளுக்கு ,செண்பகப்பூவை நன்கு அரைத்து அதனுடன் நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வடிகட்டி அதை வலி இருக்கும் இடத்தில் தடவி வர இந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.

♦️♦️♦️♦️♦️

வைரஸ் காய்ச்சல் உள்ளவர்கள் இந்த செண்பகப்பூ கசாயத்தை குடித்து வந்தால் காய்ச்சல் குணமாகும்.மேலும் செண்பகப்பூ கஷாயத்துடன் பனைவெல்லம் சேர்த்து குடித்து வந்தால் கண் பார்வை குணமடையும்.

♦️♦️♦️♦️♦️

செண்பக மரப்பட்டையும் வேப்ப மரப்பட்டையும் சம அளவு எடுத்து இடித்து, 4 மடங்கு நீர்விட்டு, காய்ச்சி, பாதியாக வற்றியதும் வடிகட்டி காலை, மாலை இரண்டுவேளை குடித்துவர குளிர் சுரம் தீரும்.

♦️♦️♦️♦️♦️

செண்பக மரப்பட்டையை ஒன்றிரண்டாக இடித்து 20 பங்கு நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி தினமும் இருவேளை குடித்துவர நாட்பட்ட குன்மம் (வயிற்றுப்புண்) குணமாகும்.

செண்பக பூவில் இருந்து நறுமண எண்ணெய், அத்தர் போன்றவை எடுக்கப்படுகின்றன. இந்த பூவில் நறுமண எண்ணெய் இருப்பதால் பூ உலர்ந்த பின்னரும் இதனை பூச்சிகள் அரிக்காது.

♦️♦️♦️♦️♦️

செண்பக மொட்டு, கார்போகரிசி, வெந்தயம், அருகம்புல் ஆகியவற்றை இடித்து தேங்காய் எண்ணெயில் கலந்து சூரிய ஒளியில் 10 நாட்கள் வைத்திருக்க வேண்டும். பின்னர், அதை தலையில் தேய்த்து வர பொடுகு, சொறி, சிரங்கு போன்ற தொல்லைகள் தீரும்.

♦️♦️♦️♦️♦️

செண்பகப்பூ சாத்திரபேதி, வெட்டிவேர், விலாமிச்சுவேர், தக்கோலம், நெற்பொரி, சுக்கு ஆகியவற்றை தலா 5 கிராம் அளவு எடுத்து, அரை லிட்டர் மாதுளம் பழச்சாற்றில் அரைத்து கலக்கி சாப்பிட குளிர் சுரம் நீங்கும்.

♦️♦️♦️♦️♦️

செண்பகப்பூ எண்ணெய் கண் நோய்க்கு சிறந்த மருந்து. இது, மூட்டு வாதத்தையும் குணமாக்கும். பூச்சிக்கொல்லி மருந்தாகவும் இது செயல்படுகிறது.

செண்பகப் பூவிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகை எண்ணெய் வாசனை திரவியங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்த எண்ணெயை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்தல் குணமாகும். மேலும் தலைவலி, கண்நோய்கள் குணமாகும்.

மேலும் இந்த எண்ணெய் கீல் வாத வலியை குணமாக்கும்.

♦️♦️♦️♦️♦️

அதிக சூட்டினாலும், இரவு நேரங்களில் அதிக நேரம் கண் விழிப்பதாலும் நரம்புத் தளர்ச்சி உண்டாகும். இவர்கள் செண்பகப் பூவை கஷாயம் செய்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் நரம்புத் தளர்வு நீங்கும்.

♦️♦️♦️♦️♦️

மனிதனின் செயல்பாடுகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது வாதம், பித்தம், கபம் எனும் முக்குற்றங்களே. இவை அதனதன் நிலையில் இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

♦️♦️♦️♦️♦️

சிலருக்கு பித்த அதிகரிப்பால் வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல் உண்டாகும். இவர்கள் செண்பகப் பூவை கஷாயம் செய்து அருந்தி வந்தால் பித்த நீர் சுரப்பு குறையும். மேற்கண்ட உபாதைகளும் நீங்கும். செண்பக இலையில் நெய்யை தடவி, அதில் ஓமத்தை பொடி செய்து தூவி, அதை தலையில் வைத்து கட்டி வர வெப்பத்தினால் உண்டாகும் தலை வலியும் தணிந்து குளிர்ச்சி உண்டாகும்.

♦️♦️♦️♦️♦️

பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் தொல்லையில் இருந்து விடுபட தினமும் செண்பகப் பூவை கஷாயம் செய்து அருந்தி வருவது நல்லது. 10 செண்பகப்பூவை 100 மி.லி நீர்விட்டு காய்ச்சி 50 மி.லி காலை, மாலை ஆகிய இருவேளை குடித்துவர வெள்ளை, வெட்டை, மேக நோய்கள், கணச்சூடு, நீர்சுருக்கு, சிறுநீர் சிவந்து எரிச்சலுடன் வெளிப்படுதல் போன்றவை குணமாகும்.

♦️♦️♦️♦️♦️

செண்பகப்பூவை நீரில் ஊறவைத்து, 30 மி.லி அளவு குடித்து வர சுரம், வயிற்றுவலி, குமட்டல் ஆகியவை குணமாகும். செண்பக இலையை அரைத்து, சாறு பிழிந்து, அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டாலும் வயிற்றுவலி குணமாகும்

♦️♦️♦️♦️♦️

பருவநிலை மாற்றத்தால் சிலரின் உடலில் பல பாக்டீரியாக்கள், வைரஸ்களின் தாக்கம் உண்டாகி பலவித நோய்கள் ஏற்பட வாய்ப்பாகிறது.இந்த வைரஸ், பாக்டீரியாக்கள் ஏற்படுத்தும் காய்ச்சலைக் குணப்படுத்த செண்பகப் பூவை காயவைத்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் காய்ச்சல் குணமாகும்.

♦️♦️♦️♦️♦️

கம்ப்யூட்டர் முன் அதிக நேரம் வேலை செய்பவர்களின் கண்கள் வெகு விரைவில் பார்வை மங்கும். இவர்களின் பார்வை நரம்புகளில் நீர் கோர்த்துக்கொள்ளும். இதற்கு செண்பகப் பூவை கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் சேர்த்து அருந்தி வந்தால் கண் பார்வை தெளிவுபெறும்.

♦️♦️♦️♦️♦️

சிறுநீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் போன்ற நோய்களுக்கு செண்பகப் பூவை கஷாயம் செய்து காலையும் மாலையும் அருந்தி வந்தால் சிறுநீர் பெருகும். நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் குணமாகும்.

♦️♦️♦️♦️♦️

🌷🌷🌷🌷🌷

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

எல்லாம் உயிர்களும் நலமுடன் வாழ்க🐟

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...