செவ்வாய் கிரக சூழலில் வசிக்க பயிற்சி: நாசா அழைப்பு.
செவ்வாய் கிரகம் போன்ற சூழலில் தங்கியிருந்து பயிற்சி பெற விரும்புபவர்களுக்கு அமெரிக்காவின் நாசா அழைப்பு விடுத்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்திருக்க வாய்ப்புள்ளதா என அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா தற்போது ஆய்வு செய்து வருகிறது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வசிக்க முடியும் என உறுதியாக தெரியவரும் நிலையில் அங்கு மனிதர்களை அனுப்பவும் நாசா திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னேற்பாடாக செவ்வாய் கிரகம் போன்ற ஓரு சூழலை ஹூஸ்டன் அருகே பாலைவனப் பகுதியில் ஒரு மணற்குன்றின் மீது நாசா உருவாக்கி உள்ளது.
வசிப்பதற்கு மிகக்கடினமான சூழல் கொண்ட இந்த இடத்தில் ஓராண்டு தங்கியிருந்து பயிற்சி பெற 4 பேர் தேவைப்படுவதாக நாசா தெரிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை பெறும் பணி கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியுள்ளது. எனினும் அமெரிக்க குடிமக்களிடம் இருந்து மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
இது போன்ற தகவல் பெற
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp குழுவில் இணையவும்.
நன்றி.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
மேலும் படிக்க
🛑 Facebook, Instagram செயலிகளுக்கு மாற்றாக புதிய இந்திய செயலி. வீட்டிலிருந்து தினமும் ரூ.500 வரை சம்பாதிக்கலாம்.
🛑✍️நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கிற வாழ்க்கை ரகசியம்- காணொளி.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment