Monday, August 9, 2021

✍🏻🌸🌸இயற்கை வாழ்வியல் முறை🌸🌸செம்பருத்தி பூவின் நன்மைகள்.

✍🏻🌸🌸இயற்கை வாழ்வியல் முறை🌸🌸செம்பருத்தி பூவின் நன்மைகள்.

🌸🌸🌸🌸🌸

ஹைபிஸ்கஸ் என்ற அறிவியல் பெயரைக் கொண்ட இந்த செம்பருத்திப் பூவைப் பற்றி நாம் பள்ளிக்கு செல்லும்போது படித்திருப்போம். நமது ஊர்களில் பலபேர் வீடுகளின் முன்பு இந்த செம்பருத்தி செடியானது வளர்ந்து இருப்பதை கண்டிருப்போம்.  நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு இந்தப் பூவில் பல மருத்துவ சிறப்புகள் அடங்கியுள்ளது. இந்தப் பூவை நீண்ட நாட்களுக்கு முன்பு செவ்வரத்தை என்ற பெயரில் தான் அழைத்து வந்தார்கள். மலேசியாவின் தேசிய மலர் என்ற பெயரை இது கொண்டுள்ளது. இதற்கு சீன ரோஜா என்ற மற்றொரு பெயரும் உண்டு. இதன்காரணமாக சீனர்கள் செம்பருத்தி தங்களுடையது என்று சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

🌸🌸🌸🌸🌸

செம்பருத்தி   மருத்துவ குணத்தை அறிந்த சித்தர்கள் இந்தப் செம்பருத்திப்பூவை தங்கபஸ்பம் என்ற பெயர்கொண்டு அழைத்து வந்தனர். இந்த செம்பருத்திப் பூவின் மகத்துவத்தை இந்தப்பதிவில் சற்று விரிவாக காண்போமா!

🌸🌸🌸🌸🌸

தோல் நோய் வராமல் பாதுகாக்க

காயவைத்த செம்பருத்தி இதழ்களுடன் ஆவாரம்பூ பாசிப்பயிறு, கருவேப்பிலை இவைகளைச் சேர்த்து பொடியாக்கி சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். தினம்தோறும் குளிப்பதற்கு, சோப்பிற்க்கு பதிலாக இந்த தூளை உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் தோல் நோய் வராமல் தப்பித்துக் கொள்ளலாம். இதன் மூலம் நம் சருமமும் பளபளப்பாக இருக்கும்.

🌸🌸🌸🌸🌸

இளநரை பொடுகு பிரச்சனை தீர

சிலருக்கு இளநரை, பொடுகு தொல்லை, முடி உதிரும் பிரச்சனைகள் அதிகமாக இருக்கும். செம்பருத்திப்பூ இலைகளுடன் கருவேப்பிள்ளை, மருதாணி இலை இவற்றை சேர்த்து நன்றாக அரைத்து தலையில் தேய்த்து அரை மணிநேரம் ஊற வைத்து பின்பு குளிக்க வேண்டும். இதேபோன்று வாரத்திற்கு இரண்டு முறை செய்துவந்தால் தலைமுடி பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் இப்படி செய்து வரும்போது நம் கண்களும், உடலும் குளிர்ச்சி அடையும். உடம்பில் உள்ள சூடு தன்மை குறையும்.

 🌸🌸🌸🌸🌸 

பேன் தொல்லையிலிருந்து விடுபட

அதிக தலைமுடி உள்ளவர்களுக்கு பேன் ஈறு தொல்லை அதிகமாக இருக்கும். அப்படி உள்ளவர்கள் இரவில் தூங்கும் போது செம்பருத்திப் பூவை தலையில் வைத்துக்கொண்டு அப்படியே படுத்து உறங்கலாம். இதேபோன்று தினம்தோறும் செய்து வந்தால் பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

🌸🌸🌸🌸🌸

ரத்த சோகையை நீக்க

நம் உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க 2, 3 செம்பருத்திப் பூக்களை நீரில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி ஒரு டம்ளர் அளவு நீரில், ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் ரத்த சோகை நீங்கும்.

🌸🌸🌸🌸🌸

காலணிகளை பாலிஷ் செய்ய

இந்த செம்பருத்தி பூவிலிருந்து காலணிகளை மெருகேற்றுவதற்காக ஒருவிதமான சாயம் எடுக்கப்படுகிறது. இதனால் இந்தப் பூவினை ஆங்கிலத்தில் ஷு ஃப்ளவர் என்ற பெயர்கொண்டு அழைத்து வருகின்றனர்

🌸🌸🌸🌸🌸

மாதவிடாய் பிரச்சனை உள்ள பெண்களுக்கு

மாதவிடாய் சுழற்சி சில பெண்களுக்கு சரியாக இருக்காது மாதத்திற்கு ஒரு முறை மாதவிடாய் ஆவது பெண்களின் உடல்நலத்திற்கு நல்லது. இந்தப் பிரச்சினையை சரி செய்ய செம்பருத்தி பூவை நிழலில் காய வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். அந்த பொடியை ஒரு தேக்கரண்டி அளவு காலையிலும்மாலையிலும் 7 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சரியான முறையில் மாதவிடாய் வந்து விடும்.

🌸🌸🌸🌸🌸

இருமலில் இருந்து விடுபட

வாய் ஓயாமல் இருமிக் கொண்டிருப்பவர்களுக்கு செம்பருத்திப்பூ இதழ்கள் 10, ஆடாதோடை தளிர் இலைகள் 3, இவை இரண்டையும் நசுக்கி இரண்டு டம்ளர் நீரில் கொதிக்கவைத்து வடிகட்டி சிறிதளவு தேன் கலந்து குடித்து வர இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம். இதுபோன்று மூன்று நாட்களுக்கு காலை மாலை தொடர்ந்து குடித்து வரவேண்டும்

🌸🌸🌸🌸🌸

செம்பருத்தி பூக்களை எப்படி சாப்பிட்டால் உடலுக்கு நன்மை சேரும்

இந்தப் பூக்களின் நான்கு ஐந்து இதழ்களை எடுத்து, இதனுடன் ஒரு நெல்லிக்காய், இரண்டு கொத்து கருவேப்பிலை, சிறிதளவு இஞ்சி துண்டு, இவைகளை சேர்த்து நன்றாக விழுதுபோல் அரைத்துக் கொள்ள வேண்டும். அந்த விழுதினை நீரில் கலந்து, வடிகட்டி அத்துடன் தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து குடித்து வரலாம்.

🌸🌸🌸🌸🌸

10 செம்பருத்திப் பூ இதழ்களை நீரில் இட்டு காய்ச்சி குடித்து வர சிறு நீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் குணமாகும். செம்பருத்தி பூ, உடல் வெப்பத்தை அகற்றி குளிர்ச்சியை உண்டாக்கும். கருப்பை நோய்கள், இதய நோய்கள், ரத்த அழுத்தம் போன்றவைகளுக்கு சிறந்த நிவாரணியாகும்.

🌸🌸🌸🌸🌸

மாதவிடாயைத் தூண்டக் கூடியது. இலைகளை அரைத்து குளிக்கும் பொது ஷாம்பூ மாதிரி உபயோகிக்கலாம். உடலுக்கு குளிர்ச்சி. முடிக்கு  நல்லது. இதழ்களின் உள்ள சாறு சிறுநீர்ப் போக்கு வலியை நீக்கும். இனப்பெருக்க உறுப்பு நோய்களுக்கும் மருந்தாகிறது

🌸🌸🌸🌸🌸

காலை எழுந்ததும் 5 முதல் 6 பூக்களின் இதழ்களை மென்று தின்று சிறிது நீர் அருந்தி வர வயிற்றுப்புண் ஆறும். வெள்ளைப் படுதல் நிற்கும். இரத்தம் சுத்தமாகும். இதயம் வலுப்பெறும்.

 🌸🌸🌸🌸🌸

400 மில்லி நல்ல எண்ணெயில் 100 கிராம் செம்பருத்தி இதழ்களைப் போட்டு கலந்த பாத்திரத்தை மெல்லிய துணியால் மூடிக் கட்டி பத்து  நாட்கள் வெயிலில் வைத்து காலை - மாலை எண்ணெயை கலக்கிவிட்டு மூடவும். பிறகு எண்ணெய்யை வடிகட்டி சம அளவு தேங்காய்  எண்ணெய் கலந்து பத்திப்படுத்திக் கொண்டு தைலத்தை தினமும் தலையில் தேய்த்து தலை வாரி வரவும். இது ஒரு சிறந்த கூந்தல் தைலம்.

🌸🌸🌸🌸🌸

இப்பூக்கள் இதயக் கோளாறையும், கர்ப்பக் கோளாறையும் நீக்க வல்லது. செம்பருத்திச் செடி வீட்டில் மருத்துவர் இருப்பதற்குச் சமம். பெண்கள்  வீட்டுக்கு விலக்காகும் காலத்தில் அதிக உதிரப் போக்கு இருந்தால் இரண்டு, மூன்று மலர்களை நெய்யில் வதக்கிக் உண்டால் குணப்படுத்தும்

 🌸🌸🌸🌸🌸

காய்ந்த மலர் இதழ்கள், வெட்டி வேர், துளசி விதைகளை, சுத்தமான தேங்காயெண்ணெயில் ஊறவைத்து தலைக்குத் தேய்த்து வர பேன்,  பொடுகு அகலும்.

 🌸🌸🌸🌸🌸

ஐந்து செம்பருத்திப் பூவைக் கொண்டு வந்து ஒரு லிட்டர் நீர் விட்டுப் பாதியாகச் சுண்டக் காய்ச்சி எடுத்துவைத்துக் கொண்டு குடிநீருக்குப் பதிலாக, இதனைப் பயன்படுத்தலாம். இதனால் உடல் உஷ்ணம் குறைஞ்சுடும். சாதாரண காய்ச்சலுக்கும் இந்த நீரைக் குடித்து நிவாரணம்  பெறலாம்.

பூவினை அதிகாலையில் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் பசுவின் பால் சாப்பிட வேண்டும். இதுபோன்று நாற்பது  நாட்கள் அதிகாலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் கடுமையான நோய் இருந்தாலும் குணமாகும்

 🌸🌸🌸🌸🌸

செம்பருத்திப் பூவை 250 கிராம், 50 கிராம் எலுமிச்சம் பழத்தின் சாறை அதில் பிழிந்துவிட்டு கலக்கி, காலையில் வெயிலில் வைக்கவும். பின்னர்  அதனை பிசைந்து வரும் சாற்றோடு, சர்க்கரையைச் சேர்த்துக் காய்ச்சி சர்பத் செய்து வடிகட்டி, காலை, மாலை இரு வேளைகளிலும் ஒரு  ஸ்பூன் எடுத்து 2 அவுன்ஸ் நீரில் கலந்து குடித்து வந்தால் இரத்தம் சீரான முறையில் பரவும். இருதயமும் பலம் பெறும்.

 🌸🌸🌸🌸🌸

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...