✍🏻⚛️⚛️இயற்கை வாழ்வியல் முறை⚛️⚛️ஜாதி மல்லி நன்மைகள்.
⚛️⚛️⚛️⚛️⚛️
ஜாதிமல்லியின் பூக்கள், இலைகள், வேர் ஆகியவை மருத்துவ பயன்களை மிகுதியாக கொண்டவை. இந்த பூக்கள் மிகுந்த மணம் உடையது.
மனக் குழப்பத்தை போக்கும் மணத்தை தருகிறது. இதை தேனீராக பருகும் போது உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் காய்ச்சலை தணிக்கும் வலி, வீக்கத்தை போக்கும். இதன் இலைகள் காது வலி கண் வலி வாய்ப்புண் ஈறுகளில் ஏற்படும் நச்சுகளை போக்கும் மருந்தாகிறது ஜாதிமல்லி பூக்களை பயன்படுத்தி மன அழுத்தத்தை போக்கி நல்ல தூக்கத்தை வரவழைக்கும் மருந்து தயாரிக்கலாம் தேவையான பொருட்கள் ஜாதிமல்லி பூ, பால் தேன் செய்முறை ஒரு பாத்திரத்தில் நீர்விடவும் இதில், 15 முதல் 20 ஜாதிமல்லி பூக்களை போடவும்.
இதை கொதிக்க வைத்து வடிகட்டி சிறிது பால் தேன் சேர்த்து கலந்து குடித்துவர நல்ல தூக்கம் வரும் மன அழுத்தம் விலகும், காய்ச்சல் தணியும், குமட்டல் வாந்தியை தடுக்கிறது, தொடர் இருமலை தணிக்கிறது, மனதுக்கு இதமான சூழலை தருகிறது மன உளைச்சலை போக்கும்.
⚛️⚛️⚛️⚛️⚛️
ஜாதிமல்லி பூக்களை கொண்டு தோலில் உண்டாகும் சுருக்கங்களை போக்கும் மருந்து தயாரிக்கலாம் தேவையான பொருட்கள் தேங்காய் எண்ணெய் ஜாதிமல்லி செய்முறை ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றவும்.
இதனுடன் நீர்விடாமல் அரைத்து வைத்திருக்கும் ஜாதிமல்லி பூக்களை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும் இதை வடிகட்டி தோலின் மீது பூசிவர தோல் சுருக்கங்கள் மறையும் நச்சுக்களை வெளியேற்றும் நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களை போக்கும் தோலில் ஏற்படும் நிறமாற்றத்தை தடுக்கிறது சுருக்கங்களை போக்கி தோலுக்கு பளபளப்பு மென்மை அழகை தருகிறது. ஜாதிமல்லி இலைகளை பயன்படுத்தி பூஞ்சை காளான் தொற்று, சிவப்பு தன்மை, அரிப்பை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய், ஜாதிமல்லி பூ. செய்முறை: ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விடவும். இதனுடன், நீர்விடாமல் அரைத்து வைத்திருக்கும் ஜாதிமல்லி இலைகளை சேர்த்து தைலப்பதமாக காய்ச்சி எடுக்கவும். பொடுகுக்கான மேல் பூச்சாக இந்த தைலத்தை பயன்படுத்தலாம். தலையில் 10 நிமிடம் ஊறவைத்து வாரம் ஒருமுறை குளித்துவர பொடுகு சரியாகும். சொரியாசிஸ் உள்ளவர்கள் இதை மேல் பூச்சு தைலமாக பயன்படுத்தலாம். பூஞ்சை காளான்களால் ஏற்படும் தொற்று நீங்கும்.
இலைகளை அரைத்து கால் ஆணி மீது பூசி வர கால் ஆணி மறையும். அதிகமான காய்ச்சலால் உதடுகளை சுற்றி ஏற்படும் கொப்புளங்கள், புண்களை ஆற்றும் எளிய மருத்துவம் குறித்து பார்க்கலாம். சீரகத்தை நன்கு பொடியாக அறைத்து பசு வெண்ணெய் சேர்த்து கலந்து பூசிவர கொப்புளங்கள், புண்கள் குணமாகும்.
⚛️⚛️⚛️⚛️⚛️
ஜாதி மல்லி இலைகளை நல்லெண்ணெயில் வதக்கி வீக்கங்களின் மீது ஒத்தடம் கொடுத்தால் விரைவில் வீக்கம் குறைந்து வலியும் குறையும். தொண்டையில் ஏற்படும் நோய்களுக்கும், வலிகளுக்கும் நெஞ்சில் ஒத்தடம் கொடுப்பது ஏற்றது.
⚛️⚛️⚛️⚛️⚛️
தலைவலிக்கு இலையுடன் சிறிது சுக்கு சேர்த்து சிறிதளவு பசுவின் பாலினை ஊற்றி அரைத்து அதனை நெற்றி, கன்னம் பகுதிதகளில் தடவி நெருப்பனலில் முகத்தினைக் காண்பிக்க ஒற்றைத் தலைவலி உடனடியாகக் குணமாகும்.
⚛️⚛️⚛️⚛️⚛️
காது வலிக்கு ஜாதிமல்லி இலையின் சாறு எடுத்து நல்லெண்ணெயை சம அளவு கலந்து காய்ச்சி பதமாக இறக்கி வடிகட்டி, ஆறவைத்து இரண்டு சொட்டு காதில் விடவும்.
உடன் காதுவலி குணமாகும். காதில் சீழ் வருதல் நிற்கும். உடலில் ரணமாகி சீழ்வடியும் புண்களின் மேல் இந்த மருந்தைத் தடவி வர புண் ஆறி சீழ்வருதல் நின்று போகும்.
⚛️⚛️⚛️⚛️⚛️
வாய் துர்நாற்றம் நீங்க
வாய் துற்நாற்றம் ஒழிய ஜாதி மல்லி இலை, விளாமர இலை, கிச்சிலிப் பழத் தோல் அல்லது நாரத்தை தோல் (உலர்ந்தது) எடுத்து அனைத்தையும் ஒரு சேர வாயிலிட்டு நன்கு மென்று குதப்பி சில நிமிடங்களுக்குப் பிறகு உமிழ்ந்துவிடவும்.
சுடு நீரினை வாயில் ஊற்றிக் கொப்பளிக்கவும். இவ்வாறு தினசரி ஒரு வேளை விடாது பதினைந்து நாட்கள் செய்துவரின் நெடுநாள்பட்ட வாய்துற்நாற்றம் அறவே ஒழியும். மேலும் வாய், உதடு, நாக்குப் பகுதிகளில் வெடிப்போ, ரணமோ இருந்தால் குணமாகும்.
⚛️⚛️⚛️⚛️⚛️
🌷🌷🌷🌷🌷
மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.
🌷🌷🌷🌷🌷
உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்
🦚🦚🦚🦚
உடல் நல குறைபாடுகளையும் சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த ஆலோசனைகள் வழங்கபடும்.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
எல்லாம் உயிர்களும் நலமுடன் வாழ்க🐟
🦚🦚🦚🦚🦚
நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு மாவட்டம், பவானி.
செல் நம்பர் 7598258480, 6383487768.
((வாட்ஸ் அப்)) 7598258480
குரு வாழ்க குருவே துணை
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
N.P. RAMESH: 9489666102.
இது போன்ற தகவல் பெற
அருமை
ReplyDeleteThank You
Delete