Wednesday, August 18, 2021

வானியல் அபூர்வ நிகழ்வான நிழல் இல்லா நாள் இன்று தென்பட்டது.

வானியல் அபூர்வ நிகழ்வான நிழல் இல்லா நாள் இன்று தென்பட்டது.

ம் தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 10 முதல் 24-ம்தேதி வரையிலும், ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரையிலும் நிழல் இல்லா நாள் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவித்துள்ளது.

சென்னையில் நிழலில்லா நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதுபற்றி விஞ்ஞான் பிரசார் சபாவைச் சேர்ந்த டி.வி.வெங்கடேஸ்வரன் விளக்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் ஆகிய இரண்டு மாதங்களில் நிழலில்லா நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதத்தில் இந்த நாள் கடைபிடிக்கப்பட்டது. தற்போது ஆக்ஸ்ட் 18ஆம் தேதியான இன்று இந்த நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தென் சென்னையில் மதியம் 12 - 1 மணியளவில் இந்த நிகழ்வை காணமுடியும். அதாவது நிழலை காணமுடியாத அளவு, நிழல் காலின் அடியில் விழும். வானம் மேகமூட்டத்துடன் இருந்தால் இந்த நிகழ்வை காணமுடியாது.

பொதுவாக நண்பகல் 12 மணியைத்தான் நாம் நண்பகல் என்று கூறுகிறோம். ஆனால் எல்லா நாட்களும் 12 மணிக்கு சூரியன் செங்குத்தாக இருப்பதில்லை. இந்திய நேரப்படி, 82.5 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில்தான் சூரியன் செங்குத்தாக அமையும். அப்படி செங்குத்தாக அமைந்துள்ள அலகாபாத்தில் மட்டும்தான் தினமும் மதியம் 12 மணி சரியான நண்பகலாக இருக்கும்.

தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களில் இந்த ரேகை மேற்கில் அமைந்திருப்பதால் மதியம் 12 மணிக்குமேல் நண்பகலாக இருக்கும். இதன் அடிப்படையில் இன்று சென்னையில் மட்டும் நிழலில்லா நாள் கடைபிடிக்கப்படுகிறது. இன்று நம்முடைய நிழல் காலுக்கு அடியில் சென்றுவிடும். இன்று தொடங்கி செப்டம்பர் 24 வரை ஒவ்வொரு ஊராக இந்த நாள் கடைபிடிக்கப்படும்" என்றார். 

இந்த கொடுங் கொரோனா தொற்று காலத்திலும் நிழல் இல்லா நாள் நிகழ்வை வீட்டிலிருந்தே ஒவ்வொருவரும் வீட்டு மாடி, தரைப்பகுதிகளில் அறிவியல் சாதனங்களின்றி எளிய முறைகளில் கண்டு களிக்கலாம். ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே நிகழும் இந்த அரிய நிகழ்வு என்பது கூடுதல் சிறப்பு. நிழல் இல்லா நாளா? நிழலே விழாத நாள் எப்படி சாத்தியம் என்று பார்க்கிறீர்களா? அப்படியில்லை. அந்தக் குறிப்பிட்ட நாளில் நண்பகலில் மிகச்சரியாக சூரியன் நமது தலைக்கு மேல் இருக்கும். அப்போது நிழலானது எந்தப் பக்கமும் சாயாமல் நேராக நமது காலடியிலேயே இருக்கும். அதாவது, செங்குத்தாக நிற்கும் பொருட்களின் நிழல் அதன் அடியிலேயே விழுந்துவிடுவதால் நம் கண்களுக்குத் தெரியாது. அந்த நாளைத்தான் ‘நிழலில்லா நாள்’. பூஜ்ஜிய நிழல் நாள் என்கிறோம்.

தமிழகத்தில் தேதி வாரியாக `நிழலில்லா நாள்’ ஏற்படும் நகரங்கள் விவரம் வருமாறு:–

ஏப்.13, ஆக.29-ம் தேதிகளில் சங்கரன்கோவில், கோவில்பட்டி, ராமேசுவரம், ராமநாதபுரம், ஏப்.14, ஆக.28-ம் தேதிகளில் கம்பம், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், பரமக்குடி,

ஏப்.15, ஆக. 27-ம் தேதிகளில் தேனி, ஆண்டிபட்டி, திருமங்கலம், மதுரை, சிவகங்கை, காரைக்குடி.

ஏப்.16, ஆக.26-ம் தேதிகளில் வால்பாறை, கொடைக்கானல், திண்டுக்கல், புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, வேதாரண்யம்,

ஏப்.17, ஆக.25-ம் தேதிகளில் பாலக்காடு, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், உடுமலைப்பேட்டை, பழநி, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை,

ஏப்.18, ஆக. 24-ம் தேதிகளில் கோவை, கூடலூர், பல்லடம், திருப்பூர், காங்கயம், கரூர், கும்பகோணம், மயிலாடுதுறை, காரைக்கால், பூம்புகார்.

ஏப்.19, ஆக.23-ம் தேதிகளில் ஊட்டி, கோத்தகிரி, அவினாசி, ஈரோடு, திருச்செங்கோடு, நாமக்கல், சீர்காழி, சிதம்பரம், ஏப்.20, ஆக.22-ம்தேதிகளில் முதுமலை, பவானி, மேட்டூர், சேலம், கள்ளக்குறிச்சி, நெய்வேலி, பண்ருட்டி, கடலூர்,

ஏப்.21, ஆக.21-ம் தேதிகளில் தர்மபுரி, சங்கராபுரம், விழுப்புரம், புதுச்சேரி,

ஏப்.22, ஆக.20-ம்தேதிகளில் திருவண்ணாமலை, செங்கம், திண்டிவனம்.

ஏப்.23, ஆக.19-ம் தேதிகளில் ஒசூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வாணியம்பாடி, கடலூர், ஆம்பூர், ஆரணி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாமல்லபுரம், கேளம்பாக்கம்,

ஏப்.24, ஆக.18-ம் தேதிகளில் குடியாத்தம், வேலூர், ஆற்காடு, அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், ஆவடி, சென்னை ஆகிய நகரங்களில் நிழல் இல்லா நாட்கள் ஏற்படும்.


இது போன்ற தகவல் பெற

https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94

இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.

தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

                                                       மேலும் படிக்க 

No comments:

Post a Comment

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை. நாட்டின் சொந்த விண்வெளி மையம் அமைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக நுண் புவி ஈர்ப்ப...