Wednesday, August 11, 2021

நாளை காலை விண்ணில் பாயும் GSLV - F10 ராக்கெட் (ஜிசாட்-1 செயற்கைக்கோள்)-கவுண்ட் டவுன் தொடங்கியது.

நாளை காலை விண்ணில் பாயும் GSLV - F10 ராக்கெட் (ஜிசாட்-1 செயற்கைக்கோள்)-கவுண்ட் டவுன் தொடங்கியது.

நாளை விண்ணில் ஏவப்படும் ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட், பூமியின் மேல்பரப்பில் இருந்து 36 ஆயிரம் கி.மீ. தூரத்தில் நிலை நிறுத்தப்படுகிறது.

கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் திட்டமிட்டபடி ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த முடியாத நிலை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு (இஸ்ரோ) ஏற்பட்டது. குறிப்பாக, நடப்பு ஆண்டில் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் மட்டும் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இதில் பொருத்தப்பட்டிருந்த பிரேசில் நாட்டைச் சேர்ந்த அமேசோனியா என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் மற்றும் அதனுடன் 18 செயற்கைக்கோள்கள் விண்ணில் திட்டமிட்ட இலக்கில் நிலை நிறுத்தப்பட்டது. இதையடுத்து, தற்போது நடப்பு ஆண்டுக்கான 2-வது ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்காக இஸ்ரோ தயாரானது.

இயற்கை பேரழிவுகள், விவசாயம், வனவியல், கனிமவியல், பேரிடர் எச்சரிக்கை, பனி மற்றும் பனிப்பாறைகள் பற்றி அறிந்து கொள்வதற்காக 2 ஆயிரத்து 268 கிலோ எடை கொண்ட ஈ.ஓ.எஸ்.-03 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இந்த செயற்கைகோள் ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட்டில் பொருத்தப்பட்டு வரும் 12-ம் தேதி காலை 5.43 மணிக்கு வானிலை நிலைகளுக்கு உட்பட்டு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவுவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது விண்ணில் செலுத்தப்படுவது ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் 14-வது ராக்கெட்டாகும்.

விண்ணில் செலுத்தப்படும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் அதிநவீன சுறுசுறுப்பான பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளாகும்.

இது பூமியை துல்லியமாக கண்காணிக்கும் என்பதால் முதல் முறையாக வானில் உள்ள கண் என்று இந்த செயற்கைகோள் அழைக்கப்படுகிறது. இதனுடைய ஆயுட்காலம் 10 ஆண்டுகளாகும்.

இந்த ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட்டில் முதல்முறையாக செயற்கைக்கோளை வெப்பத்தில் இருந்து பாதுகாப்பதற்காக 4 மீட்டர் விட்டம் கொண்ட கூம்பு வடிவம் கொண்ட வெப்பத்தகடு பொருத்தப்பட்டு இருக்கிறது என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை சுமந்தபடி ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட் திட்டமிட்டபடி நாளை விண்ணில் செலுத்தப்படும். அதற்கான கவுண்ட் டவுன் தொடங்கியது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.




LIVE Video Link 👇👇👇

இது போன்ற தகவல் பெற

https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94

இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.

தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

                                                       மேலும் படிக்க 

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...