நவம்பர் 1 முதல் 1 - 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அனுமதி.
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் செப். 1 முதல் 9,10,11,12 -ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா தொற்றும் அதிக அளவில் பரவவில்லை.
எனவே, சுகாதாரத்துறை, கல்வியாளர்கள், உயர் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பின்பு தற்போது, 1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. அதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிக் கல்வித்துறை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment