நாட்டில் இன்று 2 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
பிரதமர் பிறந்தநாளான இன்று (செப்.,17) ஒரே நாளில் 2 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தி மத்திய அரசு புது சாதனை புரிந்துள்ளது. இன்று மட்டும் 2.5 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் 71-வது பிறந்தநாளான இன்று (செப்.,17) நாடு முழுவதும் பா.ஜ,வினர் விமர்சியாக கொண்டாடி வருகின்றனர். பிரதமரின் பிறந்தநாளை ஒட்டி தடுப்பூசி செலுத்துவதில் புதிய மைல்கல்லை எட்ட வேண்டும் என்று பா.ஜ., திட்டமிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை ஒட்டி முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சிக்கு சேவா சமர்பன் அபியான் எனப் பெயரிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 17 தொடங்கி அக்டோபர் 7 வரை இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
நாடு முழுவதும் இன்று தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி செலுத்த துவங்கியது முதல் நாடு முழுதும் மக்கள் ஆர்வமாக தடுப்பூசி செலுத்தினர். வெறும் 6 மணிநேரத்தில் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மதியம் 1:30 மணியளவில் இந்தியாவில் இன்று மட்டும் ஒரு கோடியே 71 ஆயிரத்து 776 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்றைய தினத்திற்குள் 2.5 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு திட்டமிட்டது.
இதன்படி, மாலை 5:30 மணியளவில், 2 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டது. தொடர்ந்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp குழுவில் இணையவும்.
நன்றி.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
மேலும் படிக்க
🛑🤔 நாம் பிறந்ததில் இருந்து நம் உடலில் வளராத உறுப்பு எது?
🛑✍️ TNPSC-ஆன்லைனில் தமிழக அரசு இலவச பயிற்சி.
🛑✍️நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கிற வாழ்க்கை ரகசியம்- காணொளி.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment