Sunday, September 19, 2021

தமிழகத்தில் 4 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி.

தமிழகத்தில் 4 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி

தமிழகத்தில் 4 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 20ஆயிரம் இடங்களில் இரண்டாவது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. கடந்த 12ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அன்று மட்டும் 28லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த நிலையில், இன்று இரண்டாவது முறையாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இன்றுமட்டும் 15லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வரும் மெகா தடுப்பூசி முகாமில் இதுவரை 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் இதுவரை இன்று காலை 11.30 மணி நிலவரப்படி தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 4.06 கோடியாக உயர்ந்துள்ளது.


இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

No comments:

Post a Comment

நேர்கோட்டில் நிலவு, சனி மற்றும் நெப்டியூன் January 23 conjunction of the Moon, Saturn, and Neptune.

நேர்கோட்டில் நிலவு, சனி மற்றும் நெப்டியூன் January 23 conjunction of the Moon, Saturn, and Neptune. January 23, a significant astronomical e...