Sunday, September 19, 2021

விண்வெளி சுற்றுலா: 4 பேர் பூமிக்கு திரும்பினர்.

விண்வெளி சுற்றுலா: 4 பேர் பூமிக்கு திரும்பினர்.

அமெரிக்காவிலிருந்து விண்வெளிக்கு சுற்றுலா சென்ற 4 பேர் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினர்.

'விண்வெளிக்கு ஆய்வுக்காக மட்டுமல்லாமல் சுற்றுலாவும் செல்லலாம்' என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதன்படி அமெரிக்காவிலிருந்து 4 பேர் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலம் விண்வெளிக்கு சுற்றுலாவாக சென்றனர். பூமியிலிருந்து 585 கிலோ மீட்டர் அப்பால் சென்ற 4 பேரும் அங்கிருந்து பூமிப்பந்தை கண்டு ரசித்தனர். மேலும் விண்வெளியில் புவிஈர்ப்பு விசை மாறுபாட்டின் தாக்கத்தையும் உணர்ந்தனர்.


3 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்காவின் ஃப்ளோரிடா அருகிலுள்ள அட்லாண்டிக் கடலில் பாதுகாப்பாக பாராசூட் மூலம் இறங்கினர். உற்சாகத்தில் திளைத்த அவர்கள் படகு மூலம் கரைக்கு திரும்பினர். அமெரிக்காவை சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் தானும் தனது விருந்தினர்கள் 3 பேரும் என பெரும் தொகையை கட்டணமாக செலுத்தி விண்வெளி சுற்றுலா சென்றிருந்தார். அடுத்து வரும் மாதங்களில் மேலும் பல விண்வெளி சுற்றுலா பயணங்கள் நிகழ உள்ளன.




இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

No comments:

Post a Comment

நேர்கோட்டில் நிலவு, சனி மற்றும் நெப்டியூன் January 23 conjunction of the Moon, Saturn, and Neptune.

நேர்கோட்டில் நிலவு, சனி மற்றும் நெப்டியூன் January 23 conjunction of the Moon, Saturn, and Neptune. January 23, a significant astronomical e...