Wednesday, September 22, 2021

✍🏻🛴🛴இயற்கை வாழ்வியல் முறை🛴🛴ஏலக்காயில் நன்மைகள்.

✍🏻🛴🛴இயற்கை வாழ்வியல் முறை🛴🛴ஏலக்காயில் நன்மைகள்.

🛴🛴🛴🛴🛴

பெரும்பாலும் நாம் ஏலக்காய்யை மனமாக இருக்க பிரியாணி சமைக்கும் போதும், பண்டிகை காலங்களில் இனிப்புகள் சமைக்கும் போதும் தான் உணவில் சேர்ப்போம். ஆனால், ஏலக்காயில் நிறைய ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. முக்கியமாக மழைக் காலத்தில் ஏற்படும் சளி, தொண்டை தொற்று போன்றவைக்கும் இது நல்ல பயனளிக்கிறது. மேலும், ஏலக்காய் நெஞ்சு வலி, ஆண்மை மற்றும் பெண்மை குறைவுக்கும் அருமருந்து என சில ஆயுர்வேத குறிப்புகளில் கூறப்பட்டுள்ளன. இனி, அன்றாட உணவில் ஏலக்காய், சில பயனுள்ள மருத்துவ பயன்கள் பற்றி காணலாம்.

🛴🛴🛴🛴🛴

ஈரப்பதம் புரதம் மாவுப்பொருள் நார்ச்சத்து மற்றும் கால்சியம் பாஸ்பரஸ் இரும்பு போன்ற முக்கிய தாது உப்புக்களும் கலந்துள்ளன. ஏலக்காய் ஆண்மைக் குறைவு பெண்மைக் குறைவும் நீக்கவும் உதவுகிறது.

 🛴🛴🛴🛴🛴

இரவு ஒரு சிட்டிகை ஏலக்காய்த்தூளை அடித்தொண்டை அழற்சி தொண்டைக்கட்டு உள்நாக்கில் வலி குளிர்காய்ச்சலால் ஏற்படும் தொண்டைக்கட்டு முதலியவற்றைக் குணப்படுத்தி ஏலக்காயும் இலவங்கப்பட்டையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரால் கொப்பளித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.

 🛴🛴🛴🛴🛴

நெல்லிக்காய்ச் சாறில் ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூளைச் சேர்த்துத் தினம் மூன்று வேளை அருந்தி வந்தால் மேகவெட்டை நோய்க்கு இது அருமருந்தாகும். இத்துடன் சிறுநீர்ப்பை சுழற்சியும் சிறுநீர்க் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலும் குணமாகும்.

 🛴🛴🛴🛴🛴

அடிக்கடி விக்கல் எடுத்தால் ஒரு கப் தண்ணீரில் இரண்டு மூன்று ஏலக்காயைத் தட்டி உள்ளே போடவும். பிறகு புதினாக் கீரையில் 5, 6 இலைகள் மட்டும் இதில் போட்டுக் கொதிக்கவிடவும். பிறகு வடிகட்டி அருந்தினால் விக்கல் எடுப்பது குறையும்.

🛴🛴🛴🛴🛴

பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளாதது, சர்க்கரை பொருள் அதிகமுள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் சிலருக்கு பல் சொத்தை, வாய் துர்நாற்றம், ஈறு மற்றும் பற்களில் இருக்கும் கிருமிகளால் வாய் மற்றும் பற்கள் சார்ந்த நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாகிறது. தினமும் உணவு சாப்பிட்டுமுடித்தவுடன் ஒன்றிரண்டு ஏலக்காய்களை வாயில் போட்டு நன்கு மென்று சாப்பிட்டு வந்தால் வாய், ஈறுகள் மற்றும் பற்கள் சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

🛴🛴🛴🛴🛴

ஒரு மனிதனுக்கு உணவை செரித்து சக்தியை வழங்கும் முக்கிய உறுப்பான வயிறு சரியாக இருந்தாலே பெரும்பாலான நோய்கள் ஏற்படாமல் இருக்க வழிவகை செய்யும். வயிற்றில் ஜீரண அமிலங்களின் சமநிலையின்மை, வாயு தொல்லை, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற அணைத்து பிரச்சனைகளும் நீங்க சிறிதளவு ஏலக்காய்களை சர்க்கரையுடன் சேர்த்து நன்கு பொடித்து, தினமும் காலையில் பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிறு சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

🛴🛴🛴🛴🛴

மனம் நன்றாக இருந்தால் உடலும் நன்றாக இருக்கும். மனதில் ஏற்படுகின்ற கவலை, கோபம், துக்கம், பயம் மற்றும் மன அழுத்தம் போன்றவை மனதை பாதிப்பதோடு உடல்நலத்தையும் கெடுகிறது. மனம் மிகுந்த அழுத்தம் கொண்டிருக்கும் நேரங்களில் ஏலக்காய்கள் போட்ட தேநீர் பருகி வரும் போது. அதில் இருக்கும் நன்மை பயக்கும் ரசாயனங்கள் உடலின் மூளை செல்களை அமைதிப்படுத்தி மனம் மற்றும் உடலில் ஏற்பட்டிருக்கும் இறுக்க நிலையை தளர்த்தி மனநிலையை மேம்படுத்துகிறது.

🛴🛴🛴🛴🛴

சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகவில்லை என்றால் மருந்து, மாத்திரை தேட வேண்டாம். ஏலரிசியுடன், ஓமம், சீரகம் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக்கொண்டு லேசாக வறுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதை பொடி செய்து, அதில் ஒரு தேக்கரண்டி அளவு உட்கொள்ள வேண்டும். இவ்வாறு உட்கொண்டால் அஜீரணக் கோளாறு விலகிவிடும்.

🛴🛴🛴🛴🛴

அவ்வப்போது வந்து எட்டிப்பார்க்கும் வயிற்றுவலிக்கும் ஏலக்காய் சிறந்த மருந்து. இதற்காக, ஏலரிசியுடன் சீரகம், சுக்கு, கிராம்பு ஆகியவற்றை சம அளவில் எடுத்து பொடித்துக் கொள்ள வேண்டும். 2 கிராம் அளவு பொடியை தேனில் கலந்து தினமும் 3 வேளை சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு செய்தால் வயிற்றுவலி குணமாகும்.

🛴🛴🛴🛴🛴

தலைவலிக்கு ஏலக்காய் ஒரு சிறந்த மருந்தாகும்.  தலைவலி உள்ளவர்கள் ஏலக்காய் டீ குடிக்கலாம் அல்லது ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மொன்று சாப்பிட்டால் தலைவலி விரைவில் குணமாகும்.

🛴🛴🛴🛴🛴

ஏலக்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் போதிலும், அது தீங்கு விளைவிக்கும். குணம் உள்ளது

ஒவ்வாமை, கர்ப்பிணி மற்றும் பாலூட்டுதல் பெண்கள், வயிற்று புண் மற்றும் சிறுகுடல் புண் ஆகியவற்றால் அவதிப்படுவோர் ஏலக்காயை தவிர்த்து விடுவது நலம்.

🛴🛴🛴🛴🛴

🌷🌷🌷🌷🌷

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

எல்லாம் உயிர்களும் நலமுடன் வாழ்க🐟

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...