Friday, September 10, 2021

சர்வதேச விண்வெளி நிலையத்தில் திடீரென புகை அலாரம்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் திடீரென புகை அலாரம்.

மென் பொருள் செயல்பாட்டில் கோளாறுகளால் ஏற்படும் பிரச்சினைகள்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் பிளாஸ்டிக் கருகும் வாசனை வருவதாக அதன் ரஷ்ய பகுதியில் இருந்த வீரர்கள் கூறியதையடுத்து, அபாய சங்கு ஒலிக்கப்பட்டது. இது தொடர்பாக ரஷ்ய கலனில் இருந்து அமெரிக்காவின் நாசா கலனில் இருப்பவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சில மணி நேரத்தில் இந்த பிரச்னை சரி செய்யப்பட்டு விட்டதாக ரஷ்ய விண்வெளி அமைப்பான ராஸ்கோமாஸ் தெரிவித்துள்ளது.

கருகும் வாசனை வந்தபோது விண்வெளி நிலையத்தின் பேட்டரிகள் சார்ஜ் செய்யப்பட்டுக் கொண்டிருந்ததாகவும் அப்போது புகை எழுந்ததாகவும் ரஷ்ய விண்வெளி நிலையமான ராஸ்கோமாஸ் தெரிவித்துள்ளது.

அந்த பிரச்னை சரி செய்யப்பட்டு தற்போது இயல்புநிலை திரும்பி விட்டதாகவும் ராஸ்கோமாஸ் கூறியுள்ளது.

ஏழு வீரர்கள் மட்டுமே உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏன் அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது.

தற்போது விண்வெளி வீரர்கள் தங்களுடைய வழக்கமான பயிற்சிக்கு திரும்பி விட்டனர் என்றும் அந்த அமைப்பு கூறியிருக்கிறது.


இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.
தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

No comments:

Post a Comment

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை. நாட்டின் சொந்த விண்வெளி மையம் அமைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக நுண் புவி ஈர்ப்ப...