Friday, September 24, 2021

✍🏻🪧🪧இயற்கை வாழ்வியல் முறை🪧🪧மூக்குத்தி பூ நன்மைகள்.

✍🏻🪧🪧இயற்கை வாழ்வியல் முறை🪧🪧மூக்குத்தி பூ நன்மைகள்.

🪧🪧🪧🪧🪧

மூக்குத்தி பூச்செடி என்றால் பல பேருக்கு தெரியாது. தாத்தா தலைவெட்டி பூ என்றால் எல்லோருக்கும் தெரியும். ஏனென்றால் இந்தப் பூவை வைத்து சிறுவயதில் விளையாடியதை யாரும் கண்டிப்பாக மறக்க முடியாது.

🪧🪧🪧🪧🪧

இந்தச் செடியை பற்றிய மகத்துவத்தை தெரிந்துகொள்வதற்கு முன்பு, முதலில் இந்த செடியில் இருக்கும் காய்க்கு விஷத்தன்மை உண்டு என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். கட்டாயம் இந்தச் செடியில் இருக்கும் காயை சாப்பிட கூடாது என்பதை மறந்துவிடாதீர்கள். இந்த மூக்குத்திப்பூ செடியானது மஞ்சள் நிறப் பூ, வெள்ளை நிறப் பூ, ஊதா நிற பூ என்ற மூன்று விதமான நிறங்களில் பூக்கும் செடிகள் மூன்று வகையில் உள்ளது.

🪧🪧🪧🪧🪧

இந்த மூக்குத்திப் பூ செடி இலைகளை பறித்து நன்றாக கழுவி, மிளகு ரசத்தில் போட்டு ஒரு கொதிவிட்டு, அந்த ரசத்தை குடித்தால் உடம்பில் இருக்கும் சீத்தளத்தை வெளியேற்றி விடும். அதாவது சளி பிரச்சனை, தலை பாரம், தலையில் நீர் கோர்த்தல், இப்படிப் பட்ட பிரச்சினைக்கு நிவாரணமாக இந்த ரசம் இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

🪧🪧🪧🪧🪧

நம்முடைய உடலில் கீழே விழுந்தாலோ அல்லது ஏதாவது வெட்டு காயம் பட்டு ரத்தம் இடைவிடாமல் வந்துகொண்டே இருக்கும் சமயத்தில், இந்த மூக்குத்தி பூவின் செடியின் இலையை பறித்து உள்ளங்கைகளை வைத்து கசக்கினால் சாறு வரும். அந்த சாறை காயத்தின் மீது போட்டால் ரத்தம் உடனடியாக நிற்கும்.

🪧🪧🪧🪧🪧

நீண்ட நாட்களாக உடலில் ஆறாத புண் ஏதும் இருந்தால், அதன் மீது இந்த மூக்குத்திப்பூ இலையை சிறிது தண்ணீர் விட்டு அறைத்து, அந்த விழுதை பூசி வந்தால் கூடிய விரைவில் அந்த புண் ஆறிவிடும்.

🪧🪧🪧🪧🪧

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்படும் காயம் சீக்கிரமாக ஆறாது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. அப்படிப்பட்டவர்கள் உடம்பில் ஏற்படும் காயத்தை கூட சரி செய்யும் அளவிற்கு மருத்துவ குணம் கொண்டதுதான் இந்த மூக்குத்திப்பூ இலை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் உடம்பில் ஏற்படும் தோல் பிரச்சனையான தேமல் சொறி இவைகள் சரியாக இந்த மூக்குத்தி பூ இலையின் சாரை கசக்கி தடவி வந்தாலே போதும். இரண்டே நாட்களில் மறையும்.

🪧🪧🪧🪧🪧

இந்த மூக்குத்தி பூ செடியில் இருக்கும் பூ, வேர், இலை இவற்றையெல்லாம் ஒன்றாக சேகரித்து, ஒரு கடாயில் போட்டு, ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி லேசாக வதக்கி கொள்ள வேண்டும். வதங்கிய அந்த விழுதை எடுத்து, முட்டியில் மீது வைத்து வெள்ளைத் துணி போட்டு கட்டி விட்டால் அந்த பிரச்சனை உடனடியாக ஒரு முடிவுக்கு வந்துவிடும். கை மூட்டு வலியா இருந்தாலும் சரி. கால் மூட்டு வலியா இருந்தாலும் சரி.

🪧🪧🪧🪧🪧

குடற்புண் இருப்பவர்கள் காலையில் வெறும் வயிற்றில் இந்த இலையெடுத்து இரண்டு முறை மென்று துப்பிவிட வேண்டும் பல்லின் விஷம் வெளி வந்து விடும்.  முன்றாம் முறை மென்று விழுங்க வேண்டும் குடற்புண் ஆற்றும் குடல் புற்று நோயை தடு்க்கும்.

🪧🪧🪧🪧🪧

மூக்குத்தி பூ இலை, சம அளவு குப்பைமேனி இலையையும் சேர்த்து அரைத்துப் பற்றிட, படர்தாமரை குணமாகும். அரிவாள்மனைப் பூண்டு இலை, கிணற்றுப் பாசான இலை, எலும்பு ஒட்டி இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்துப் காயத்தின் மீது பற்றிட உள்ள வீக்கம் குறையும்.

🪧🪧🪧🪧🪧

மூக்குத்தி பூ இலை, கிணற்றுப் பாசான இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து, புழுவெட்டு உள்ள இடத்தில் தடவினால், விரைவில் மாறும். மூக்குத்தி பூ இலையோடு சிறிது மஞ்சளைச் சேர்த்து அரைத்து சொறி, சிரங்கு மீது தடவி வர குணமாகும்.

🪧🪧🪧🪧🪧

🌷🌷🌷🌷🌷

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

எல்லாம் உயிர்களும் நலமுடன் வாழ்க🐟

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்?

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்? ஜனவரி 21 ஆம் தேதி, வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, ...