Friday, September 24, 2021

ஒளியின் வேகத்தில் பயணிப்பதா? Travelling at the Speed of Light? E=MC2.

ஒளியின் வேகத்தில் பயணிப்பதா? Travelling at the Speed of Light? E=MC2.

ஒளி (light) என்பது கண்களுக்குப் புலப்படும் அலைநீளம் கொண்ட மின்காந்த அலைகள் என்று வரையறுக்கப்படுகின்றன. பொதுவாக அகச்சிவப்புக் கதிர்களுக்கும் புற ஊதா கதிர்களுக்கும் இடைப்பட்ட அலை நீளம் கொண்ட மின்காந்தக் கதிர் வீச்சுகள் ஒளி என்று அழைக்கப்படுகிறது. அலை-துகள் இருமை தன்மையின் காரணமாக ஒளி ஒரே நேரத்தில் அலை மற்றும் துகள் இரண்டினது பண்புகளையும் வெளிப்படுத்துகிறது. இவை 380 நானோமீட்டர்கள் முதல் 740 நானோமீட்டர்கள் வரையில் அலைநீளத்தையுடைய மின்காந்த அலைகளாகும்.

வெற்றிடத்தில் ஒளியின் வேகம் சரியாக 2,99,792.458 மீ/செ (வினாடிக்கு சுமார் 1,86,282 மைல்கள்) ஆகும். எல்லா வகை மின்காந்தக் கதிர்வீச்சுக்களும் வெற்றிடத்தில் இந்த வேகத்திலேயே நகர்கிறது.

ஒளியின் வேகத்தில் நாம் எப்போதும் பயணம் செய்ய முடியாது…

ஏனென்றால் ஒரு பாெருளின் வேகம் கூட கூட, எடையும் கூடும்.

உதாரணமாக 1000 கிலோ எடையுள்ள ஒரு விண்கலத்தை ஒளியின் வேகத்தில் பயணிக்க ஏதுவாக ஒரு என்ஜின் தயார் செய்து அந்த விண்கலத்தை செலுத்தும்போது ஆரம்ப நிலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வேகம் அதிகரிக்கும் அப்பொழுது அந்த விண்கலத்தின் எடையும் அதிகரிக்க ஆரம்பித்துவிடும்.

நமது இன்ஜின் 1000 கிலோ எடையை செலுத்தும்வண்ணம் வடிவமைக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்க.

சரி, நமது விண்கலம் 100 கிலோ எடை ஆனால் அதே என்ஜின் இப்பவும் விண்கலத்தின் வேகம் கூட கூட எடை கூடும். எடை கூட கூட என்ஜினின் திறன் போதாது.

அதாவது ஒரு பாெருளின் வேகம் (Speed) கூட கூட, எடை (Weight) கூடும், ஆனால் பருமன் (Mass) அப்படியேதான் இருக்கும்.

கற்பனைக்காக ஒருவேளை அந்த விண்கலம் ஒளியின் வேகத்தை அடைந்தால் அதன் எடையானது வரையறுக்கமுடியாத நிலைக்கு சென்று விடும்.

எனவே நிறை மற்றும் எடை உள்ள எந்த பொருளும் ஒளியின் வேகத்தில் பயணம் செய்ய முடியாது. ஒளியின் வேகத்தில் பயணம் செய்யும் ஒளிக்கு நிறையோ, எடையோ கிடையாது.








இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

No comments:

Post a Comment

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது?

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது? கடந்த இரண்டு மாதங்களாக விண்வெளியில் தங்கியுள்ள விண்வெ...