பள்ளிகள் மூலமாக தொற்று பரவ வாய்ப்பு குறைவு தான்: உலக சுகாதார தலைமை விஞ்ஞானி.
கொரோனா மூன்றாம் அலை வராமல் தடுக்க முடியும் என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. இணை நோய்கள் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை கொடுக்கலாம். கொரோனா மூன்றாம் அலை வராமல் நம்மால் தடுக்க முடியும்'' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment