Saturday, September 18, 2021

புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்.

புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்.


பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம்,  திருச்சி மாவட்ட பொது சுகாதாரபணித்துறை மற்றும்  நேரு மெமோரியல் கல்லூரியின் இளையோர் செஞ்சிலுவை சங்கம் இணைந்து கோவிட்-19 கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் 17-09-2021 அன்று (வெள்ளிக்கிழமை) திருச்சி புத்தனாம்பட்டி நேரு மேமொரியல் கல்லூரியின் மூக்கையாபிள்ளை அரங்கில் நடைபெற்றது.

இந்த முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் பேரசிரியர் செல்வம் அவர்கள் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். 

இந்த முகாமில்  புத்தனாம்பட்டி நேரு மெமோரியல் கல்லூரியில் தலைவர் இன்ஜினியர் பொன் பாலசுப்பிரமணியன், நேரு மெமோரியல் கல்லூரியின் செயலாளர் திரு ரவிச்சந்திரன், முதல்வர் பொன் பெரியசாமி, இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் திருச்சி மாவட்ட கிளை தலைவர் இன்ஜினியர் ராஜசேகர்,   பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெற்றிவேல், முசிறி ஒன்றிய துணைத்தலைவர் திரு. ரமேஷ் பாபு இறகுகள் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் திரு. ராபின் மற்றும் திருவரம்பூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் திரு லட்சுமி நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இந்த தடுப்பூசி முகாம் முசிறி வட்டார மருத்துவர் கார்த்திகேயன் அவர்களின் மேற்பார்வையில் செவிலியர்கள் பொதுமக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்தினார்கள்.

திருச்சி மாவட்டத்தில் கோவிட்-19 கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் 18 வயதிற்க்கு மேற்பட்ட அனைத்து வயதினரும் பயன்பெறும் வகையில் சிறப்பு கொரோனா கோவிட்-19 தடுப்பூசி முகாம்  புத்தனாம்பட்டி நேரு மேமொரியல் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டது.   

இந்த முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழகதின் யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர். வெற்றிவேல் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். இந்த முகாமை புத்தனாம்பட்டி நேரு மேமொரியல் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் முனைவர். திலகவதி அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தினார். 

இந்த சிறப்பு தடுப்பூசி முகாமில் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை கோவிசீல்டு தடுப்பூசி பொதுமக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் ஆகியோருக்கு சமூக இடைவெளியை கடைபிடித்து போடப்பட்டது.

இந்த முகாமில் புத்தனாம்பட்டி நேரு மெமோரியல் கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவை சங்க தன்னார்வலர்கள் தடுப்பூசி செலுத்த வந்த பொதுமக்களுக்கு கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு வழிமுறைகளை எடுத்துரைத்தனர்.



இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

No comments:

Post a Comment

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது?

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது? கடந்த இரண்டு மாதங்களாக விண்வெளியில் தங்கியுள்ள விண்வெ...