Saturday, September 18, 2021

விண்வெளியில் தனக்கென ஆய்வு மையம் அமைத்த சீனா.

விண்வெளியில் தனக்கென ஆய்வு மையம் அமைத்த சீனா.

கொரோனாவை சமாளிக்கும் முயற்சிகளில் உலகம் முழுவீச்சில் இறங்கியிருக்க, ஆரவாரமின்றி விண்வெளி நிலையம் அமைக்கும் முயற்சியில் முக்கிய பணியை சாதித்திருக்கிறது சீனா. கடந்த ஆறு மாதங்களில் அடுத்தடுத்து விண்வெளி தொடர்பான முயற்சிகளில் முக்கிய மைல்கல்லை எட்டியிருக்கிறது அந்நாடு.


நிலவில் இருந்து பாறை, மணலை பூமிக்கு கொண்டு வந்தது, செவ்வாயில் ரோவரை தரையிறக்கியது, தற்போது மூன்று விண்வெளி வீரர்களை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியது என ஹாட்ரிக் வெற்றியை சாதித்திருக்கிறது சீனா.

15 நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் சீனா பங்குபெற அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதனால் தனக்கென தனியாக விண்வெளி நிலையம் அமைக்கும் முயற்சியில் இறங்கியது சீனா. இதற்காக 16.6 மீட்டர் நீளமும், 4.2 மீட்டர் அகலமும் கொண்ட டியான்ஹே விண்கலம் கடந்த ஏப்ரல் மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த டியான்ஹே விண்கலம் தான் சீனா அமைக்க இருக்கும் 70 டன் எடை கொண்ட விண்வெளி மையத்தின் முக்கியமான அங்கமாகும். சீனாவின் விண்வெளி மையத்தில், விண்வெளி வீரர்கள் வாழ்வதற்கான இடம், ஆய்வகங்கள், தொலைநோக்கி போன்றவை எல்லாம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளி தங்களுக்கென ஒரு ஆய்வு மையத்தை சீனா அமைத்துள்ள நிலையில் அப்பணியில் ஈடுபட்டிருந்த 3 வீரர்கள் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினர்.

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச அளவிலான ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. இதற்கு போட்டியாக சீனாவும் தனியாக ஒரு விண்வெளி மையத்தை அமைத்துள்ளது. பூமியில் இருந்து 380 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இம்மையத்தை கடந்த 3 மாதங்களாக 3 சீன வீரர்கள் அமைத்து வந்தனர். இப்பணி வெற்றிகரமாக முடிந்த நிலையில் அவர்கள் ஷெங்ஜூ என்ற விண்கலம் மூலம் பூமிக்கு திரும்பினர்.


அவர்கள் வந்த விண்கலம் சீனாவில் உள்ள கோபி பாலைவனத்தில் தரையிறங்கும் காட்சிகளை சீன அரசுத் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட்ட விண்கலத்தில் இருந்த வீரர்கள் பூமிக்கு அருகில் வந்தவுடன் பாராசூட் மூலம் தரையிறங்குன்றனர். பின்னர் அவர்களை தொழில்நுட்ப பணியாளர்கள் உரிய முறையில் பாராசூட்டிலிருந்து வெளியேற்றி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பினர். அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்து 3ஆவது நாடாக விண்வெளிக்கு மனிதர்களை சீனா அனுப்பி வருகிறது. இதுவரை 13 சீனர்கள் விண்வெளிக்கு சென்றுள்ளனர்.




இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...