புத்தனாம்பட்டி, நேரு நினைவுக்கல்லூரியில் Harris & Menuk நிறுவனத்தின் மூலம் ரூ.4,75,000/- கல்வி உதவித்தொகை வழங்கும் விழா.
22-09-2021 புதன்கிழமை கணிப்பொறி அறிவியல் துறை சார்பில் சென்னை Harris & Menuk நிறுவனத்தின் மூலம் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா காலை 11 மணியளவில் நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் தலைவர் பொன். பாலசுப்பிரமணியன், செயலர். பொன். இரவிச்சந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 95 மாணவர்களுக்கு ரூ.4,75,000/- கல்வி உதவித்தொகை வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள்.
கல்லூரி தலைவர் பேசும்போது Harris & Menuk நிறுவனத்தினர் அரியரத்தினம் ஐயாவின் ஈகைக் குணத்தை எடுத்துரைத்து கடந்த 14 வருடங்களாக மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கியதை பாராட்டினார்.
கல்லூரி செயலர் பேசும்போது மாணவர்கள் கல்வி உதவித் தொகையைப் பயன்படுத்திக் கொண்டு நன்கு படிக்கும்படி ஊக்குவித்தார். இந்த Covid -19 இடர்பாட்டிலும் தடைஇல்லாமல் கல்வி உதவித்தொகை வழங்கியமைக்கு நன்றி கூறினார்.
மேலும் வீழாவில் கல்லூரி முதல்வர் முனைவர். A.R. பொன்பெரியசாமி அவர்கள் தலைமை வகித்தார். கணிப்பொறி அறிவியல்துறைத் தலைவர் முனைவர் மு. முரளிதரன் வரவேற்புரை ஆற்றினார். ஆங்கில புலத் தலைவர் முனைவர் K.T. தமிழ்மணி, வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு.மீனாட்சிசுந்தரம் கலந்து கொண்டார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கணினி அறிவியல்துறைத் தலைவர் K.பொன்வேல் அழகுலெட்சுமி, பேராசிரியர் P. இஸபெல்லா ஆகியோர் செய்தார்கள்.
இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp குழுவில் இணையவும்.
நன்றி.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
மேலும் படிக்க
🛑🤔 POLYTECHNIC TRB EXAM Materials and Model Questions- English.
🛑✍️ TNPSC-ஆன்லைனில் தமிழக அரசு இலவச பயிற்சி.
🛑✍️நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கிற வாழ்க்கை ரகசியம்- காணொளி.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment